Aloe Vera Juice: ஒவ்வொருவரும் தங்களது தினசரி காலையை ஒவ்வொரு விதமாக தொடங்குகிறார்கள். சிலர் தண்ணீர், சிலர் டீ, காபி எனவும் சிலர் ஆரோக்கியமாக ஆயுர்வேத பானம், பழச்சாறுகள் எனவும் தங்களது தினத்தை தொடங்குகிறார்கள். அப்படி காலையில் கற்றாழை சாறு குடித்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம்.
கற்றாழை சாறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ காணப்படுகின்றன. இது தவிர, கற்றாழை சாறு ஃபோலிக் அமிலம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இதனால்தான் சுகாதார நிபுணர்களும் கற்றாழை சாற்றைக் குடிக்க பரிந்துரைக்கின்றனர்.
மேலும் படிக்க: குறுகிய காலத்தில் அதிக எடையைக் குறைப்பதன் சிக்கல் இங்கே..
தினசரி காலையில் எந்த பானம் குடிப்பது உடலுக்கு நல்லது?
தொடர்ந்து கற்றாழை சாற்றைக் குடித்து வந்தால், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தரும். கற்றாழை சாறு குடிப்பதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். இது மட்டுமல்லாமல், கற்றாழை சாறு உட்கொள்வது சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
சருமத்தில் ஏற்படும் கொப்புளங்கள், முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் ஆகியவை கற்றாழை சாற்றைக் குடிப்பதன் மூலம் குணமாகும். இது தவிர, கற்றாழை சாறு சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.
கற்றாழை சாறு சருமத்திற்கும் முடிக்கும் போதுமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இது முடிக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது, இது முடி வளர்ச்சிக்கு உதவும். கற்றாழை சாறு குடிப்பது ஆரோக்கியம், சருமம் மற்றும் கூந்தலுக்கு நன்மை பயக்கும்.
கற்றாழை சாறு எப்போது குடிக்க வேண்டும்?
- பொதுவாக கற்றாழை சாற்றை ஒரு நாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குடிக்கலாம்.
- ஆனால் அதன் அதிக நன்மைகளை பெற வேண்டும் என்றால் கற்றாழை சாற்றை வெறும் வயிற்றில் காலையில் குடிப்பது மிக நல்லது.
- வெறும் வயிற்றில் கற்றாழை சாற்றைக் குடிப்பதன் மூலம், உடல் அதன் ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்சிவிடும்.
- குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் காலையில் வெறும் வயிற்றில் இதை குடிப்பது உடல் எடை இழப்புககும் உதவியாக இருக்கும்.
- அதேபோல் மலம் கழிக்கும் செயல்முறையும் எளிதாகிறது.
கற்றாழை சாறு எப்படி குடிக்க வேண்டும்?
- கற்றாழை சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
- கற்றாழை சாற்றை நெல்லிக்காய் சாறு அல்லது எலுமிச்சை சாறுடன் கலந்து குடிக்கலாம்.
- தினமும் காலையில் கற்றாழை சாற்றை நெல்லிக்காய் அல்லது எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
- வைட்டமின் சி நெல்லிக்காய், எலுமிச்சையில் இருக்கிறது. வைட்டமின் சி சருமத்தை ஃப்ரீ ரேடிக்கலில் இருந்து பாதுகாக்கிறது.
காலையில் கற்றாழை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை சாறு குடிப்பதுஎடையைக் குறைக்க உதவுகிறது.
- கற்றாழை சாறு கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது படிப்படியாக உங்கள் எடையைக் குறைக்கும்.
- வெறும் வயிற்றில் தொடர்ந்து கற்றாழை சாற்றைக் குடித்தால் வாயு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைப் போக்க முடியும்.
- கற்றாழை சாறு குடித்த பிறகு, உங்கள் வயிறு எளிதில் சுத்தம் ஆக ஆரம்பிக்கும்.
- கற்றாழை சாறு குடிப்பது குடல் மற்றும் கல்லீரலை நச்சு நீக்கவும் உதவும்.
- கற்றாழை சாறு குடிப்பதால் சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும்.
- முடிக்கு போதுமான ஊட்டச்சத்து அளித்து முடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவும்.

வீட்டிலேயே கற்றாழை சாறு தயாரிப்பது எப்படி?
- கற்றாழை இலைகளை எடுத்து நன்கு கழுவி அதில் இருந்து நடுப்புற ஜெல்லை மட்டும் நன்றாக பிரித்தெடுக்க வேண்டும்.
- கற்றாழை ஜெல்லை மட்டும் எடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- இப்போது கற்றாழை ஜெல்லை ஒரு பிளெண்டரில் போட்டு அரைக்கவும்.
- தேவைப்பட்டால் இதில் நெல்லிக்காய் அல்லது எலுமிச்சை சாறு கலந்து கொள்வது கூடுதல் சிறப்பு.
- இதை அப்படியே தினசரி செய்து காலை சமயத்தில் குடித்து வரலாம்.
வெறும் வயிற்றில் கற்றாழை சாறு குடிப்பதன் நன்மைகள்
மாதவிடாய் கால நன்மை
மாதவிடாய் காலத்தில் பெண்களின் ஹார்மோன் சமநிலை சாதாரணமாக இருக்காது. இந்த சமயத்தில் ஹார்மோன்கள் கணிசமாக அதிகரிக்கும் அல்லது திடீரென குறையத் தொடங்கும். ற்றாழை சாறு உட்கொள்வது உங்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவு
உடலில் சாதாரண இரத்த சர்க்கரை அளவு குறைந்தபட்சம் 80 மி.கி ஆகவும், அதிகபட்சம் 110 மி.கி ஆகவும் இருக்க வேண்டும். இது பலருக்கு பெரும்பாலும் சமநிலையற்றதாக இருக்கும். இதை சரிசெய்ய காலையில் கற்றாழை சாற்றை குடிக்கலாம்.
மேலும் படிக்க: எருமை பால் vs பசும்பால் vs ஆட்டுப்பால்.. இதில் எது பெஸ்ட் தெரியுமா?
உடல் நச்சுக்கள் நீங்கும்
வெறும் வயிற்றில் கற்றாழை சாற்றைக் குடிப்பதால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கப்படும். ஊட்டச்சத்துக்கள் உணவு மற்றும் பானங்கள் மூலம் நம் உடலை அடைகின்றன, ஆனால் பல தேவையற்ற மற்றும் நச்சு கூறுகளும் அவற்றில் சேர்ந்துக் கொள்கின்றன. காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை சாற்றை உட்கொள்வது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற பெருமளவு உதவியாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
புதிய கற்றாழை சாற்றில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரும் உதவியாக இருக்கும்.
pic courtesy: freepik