Buffalo Milk vs Cow Milk vs Goat Milk: பால் குடிக்காமல் மனிதர்களின் வாழ்நாள் என்பது கிடையாது. குழந்தை பிறந்த உடன் தாய்ப்பாலில் தொடங்கி அடுத்தடுத்து நாட்களில் தினசரி தவறாமல் ஏதாவது ஒரு வழியில் மனிதர்களை பால் குடித்துதான் வாழ்கிறார்கள். மனித வாழ்வையும் பாலையும் பிரித்து பார்க்கவே முடியாது.
மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் பல்வேறு வகையில் பால்களை உட்கொண்டாலும், அது பிரதானமாக இருப்பது மூன்றுதான். பசும்பால், எருமை பால், ஆட்டுப்பால் ஆகிய மூன்று ஆகும். இதில் ஆட்டுப்பால் கிடைப்பது என்பது அரிதாக மாறிவிட்டது. பசும்பால் மற்றும் எருமை பால்தான் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் என்னவென்றால் பசும்பால் குடித்தால் உடல் எடை கூடுமா, எருமை பால் உண்மையில் உடலுக்கு ஆரோக்கியமானதா, ஆட்டுப்பாலை தினசரி குடிக்கலாமா போன்றதுதான். பொதுவாக பால் என்றாலே ஆரோக்கியமானதுதான். சரி, எந்தெந்த பாலில் என்னென்ன தன்மைகள் உள்ளது. இதில் எது உடலுக்கு மிக ஆரோக்கியமானது என்பது குறித்து பார்க்கலாம்.
எருமைப் பால் ஆரோக்கிய நன்மைகள்
எருமைப் பால் எப்போதும் பசும்பாலை விட குறைவான ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல, எருமைப் பால் உடலுக்கு நல்லதா, இதை குடித்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
எருமைப் பால் நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, எலும்புகள், பற்கள் மற்றும் தோல் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு நல்லது. புரதம், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகம்.
புரத அளவு அதிகம்
- எருமைப் பாலில் நல்ல அளவு புரதம் காணப்படுகிறது.
- காலையில் எருமைப் பால் குடித்தால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும்.
- ஏனென்றால் எருமைப்பாலில் புரதம் அதிகமாக உள்ளது.
- உடலை நீண்ட காலத்திற்கு வளர்சிதை மாற்ற செயல்பாட்டில் வைக்கிறது.
- புரதங்கள் சேதமடைந்த தசைகளை மீட்டெடுக்கவும் உதவும்.
உடல் எடை அதிகரிக்கும்
- எடை அதிகரிக்க விரும்புவோருக்கு எருமைப் பால் மிகவும் நன்மை பயக்கும்
- இதில் மிக அதிக அளவு கலோரிகள் உள்ளன
- எருமைப் பால் உங்கள் உடலின் ஆற்றலை விரைவாக அதிகரிக்கிறது
- எருமைப் பாலில் மிக அதிக கொழுப்புச் சத்து உள்ளது
இதய ஆரோக்கியம்
- இரத்த நாளங்களை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
- கால்சியம் இதில் அதிகம் உள்ளது
- கால்சியம் இரத்த நாளங்களை விரிவுப்படுத்தி அவற்றை மீள்தன்மையடையச் செய்கிறது.
- உடலின் இரத்த ஓட்டத்தை நன்றாக வைத்திருக்கிறது மற்றும் உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கிறது.
எலும்புகளை வலிமையாக்கும்
- எருமைப் பாலில் நல்ல அளவு கால்சியம் உள்ளது.
- எலும்பு வளர்ச்சிக்கு அவசியமான ஒரு கனிமமாகும்.
- எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களைத் தடுக்க உதவும்.

பசும்பால் ஆரோக்கிய நன்மைகள்
- பசுவின் பால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
- இந்தப் பால் எருமைப்பாலை விட மெல்லியதாகவும், வயிற்றுக்கு இலகுவாகவும் இருக்கும்.
- இதில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி-12 மற்றும் பொட்டாசியம் உள்ளன.
- இது எளிதில் ஜீரணமாகும் என்பதால், குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கும் நல்லது.
- நாட்டு பசுக்களின் பால் உடலுக்கு பல வலிமையை தரும், இதில் பல வகையிலான புரதம் இருக்கிறது.
- பசும்பாலில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் பி, புரதங்கள் ஆகியவை நிறைந்துள்ளன.
- அதிக அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது இது எலும்புகளை அடர்த்தியாக்க உதவும்.
- பசும்பால் நன்மைகளை இதேபோல் பல இடங்களில் கேள்விப்பட்டிருப்போம். பல சத்துக்கள் பசும்பாலில் உள்ளது. பசும்பாலை தாராளமாக அனைவரும் உட்கொள்ளலாம்.
ஆட்டுப்பால் ஆரோக்கிய நன்மைகள்
- ஆட்டுப்பால் என்றால் நியாபகத்திற்கு வருவது மகாத்மா காந்தி தான். ஆட்டுப்பால் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.
- ஆட்டுப்பால் சற்று விலை அதிகமானது என்றாலும் அதீத நன்மைகள் இதில் இருக்கிறது.
- இதில் உள்ள ப்ரீபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
- செரிமான ஆரோக்கியத்திற்கு ஆகச்சிறந்த உணவுகளில் இது சிறந்த தேர்வாகும்.
- உடலில் இருந்து தாதுக்களை திறம்பட உறிஞ்சி எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும்.
- சொல்லப்போனால் பசும்பால் மற்றும் எருமைப்பாலை விட ஆட்டுப்பால் எல்லா விதத்திலும் மிகுந்த நல்லதாகும்.
- ஆட்டுப்பால் விலை அதிகமாக இருந்தாலும் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது இதை குடிக்க முயற்சி செய்யவும்.
pic courtesy: freepik