Which is Better For Fat Loss Cow Milk Or Buffalo Milk: இன்றைய காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, நீண்ட நேர உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பெரும்பாலும் உடல் பருமன் மற்றும் கொழுப்பு அதிகரிப்பிற்கு வழிவகுக்கலாம். இந்நிலையில், உடல் எடையைக் குறைக்க பலரும் ஜிம்மிற்குச் செல்வது, டயட் பின்பற்றுவது உள்ளிட்ட முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், பெரும்பாலான மக்கள் கொழுப்பு இழப்பு உணவில் நிச்சயமாக பாலை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். எனினும், பாலில் பசும்பால், எருமைப்பால் என இரண்டு வகைகள் உள்ளன. இதில் எந்த வகை பாலை சேர்ப்பது உடல் எடையிழப்புக்கு உதவியாக இருக்கும் என்பதில் அனைவருக்கும் சந்தேகம் எழலாம். இதில் பசும்பாலா, எருமைப் பாலா எந்த பால் அருந்துவது உடலில் கொழுப்பைக் குறைக்க நன்மை பயக்கும் என்பது குறித்து டயட்டெடிக் பிளேஸ் நிறுவனர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் சாக்ஷி சிங் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss: பாலில் இந்த ஒரு பொருளை கலந்து குடிங்க… உடல் எடை மளமளவென குறையும்!
கொழுப்பைக் குறைக்க பசும்பால் அல்லது எருமைப்பால் - எது சிறந்தது?
கொழுப்பைக் குறைக்க பசும்பால்
பசும்பாலில் எருமைப்பாலை விட குறைவான அளவில் கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளது. இது கொழுப்பு இழப்புக்கு சிறந்த தேர்வாகும். மேலும் இதன் கொழுப்பு உள்ளடக்கம் சுமார் 3 முதல் 4% வரை உள்ளது. இவை உடலில் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்ளலைத் தடுக்கிறது. ஒரு கப் அளவிலான பசும்பாலில் சுமார் 60 முதல் 70 கலோரிகள் உள்ளது. மேலும் இந்த பாலில் புரதம் உள்ளது.
இது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இவை நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர வைக்கிறது. குறைந்த கொழுப்பு நிறைந்த பசும்பாலின் மூலம் வளர்சிதை மாற்றத்தை சமநிலையில் வைத்திருக்கலாம். இது உடலில் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
கொழுப்பைக் குறைக்க எருமைப் பால்
எருமைப் பாலில் அதிகளவிலான கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. அதாவது சுமார் 6 முதல் 7% வரை உள்ளது. இவை அதிக கலோரிகள் நிறைந்ததாக அமைகிறது. எனவே கொழுப்பைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது குறைவான பயனுள்ளதாக தேர்வாக இருக்கலாம். ஒரு கப் அளவிலான எருமைப் பாலில் சுமார் 150-200 கலோரிகள் உள்ளது. மேலும், இது உடலில் அதிக கொழுப்பைச் சேமிக்கும் செயல்முறையை ஊக்குவிக்கிறது.
குறிப்பாக, இதை அதிகளவில் உட்கொள்வது உடலில் கொழுப்பை அதிகரிக்கலாம். அது மட்டுமல்லாமல், எருமைப் பால் குடிப்பது செரிமானத்தை மெதுவாக்குவதுடன், ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கலாம். மேலும் இது பசியைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். எருமைப் பாலில் புரதம் மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பினும், இது புரதத்தின் நல்ல மூலமாகும். கொழுப்பு இழப்புக்கு இதன் நுகர்வு குறைவான நன்மை பயக்கும்.
கொழுப்பைக் குறைக்க எந்த பால் குடிக்க வேண்டும்?
எருமைப் பாலை விட கொழுப்பு இழப்புக்கு பசும்பால் சிறந்த தேர்வாக அமைகிறது. ஏனெனில், இதில் குறைந்த அளவிலான கொழுப்பு மற்றும் கலோரிகள் இருப்பதே காரணமாகும். எனவே, கொழுப்பைக் குறைக்கும் போது பால் உட்கொள்ள விரும்புபவர்கள், அன்றாட உணவில் பசும்பாலைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், எருமைப் பால் குடிக்க விரும்புபவர்கள், உணவில் குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் அதன் கிரீம் நீக்கிய பின் குடிக்க வேண்டும். இதனால் கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது எளிதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: இவங்க எல்லாம் தப்பித் தவறிக்கூட பால் குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா?
கொழுப்பை குறைக்க பசும்பால் குடிப்பது எப்படி?
- உடல் எடையைக் குறைக்க ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கப் பால் மட்டுமே குடிக்க வேண்டும்.
- உடலின் ஆற்றலைப் பராமரிக்க காலை நேரத்தில் அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு பால் குடிக்க வேண்டும்.
- பாலில் அதிக சர்க்கரை அல்லது இனிப்புப் பொருளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்
- ஓட்ஸ், பழங்கள் அல்லது கொட்டைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது கூடுதல் நன்மை பயக்கும்.
முடிவு
கொழுப்பு இழப்புக்கு எருமைப் பாலை விட குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்த பசும்பால் சிறந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், பசுவின் பால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் அதிகப்படியான கொழுப்பு அதிகரிப்பதைத் தடுக்க உதவுகிறது. எனவே கொழுப்பைக் குறைக்க, அன்றாட உணவில் பசும்பாலை மட்டுமே சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Curd Vs Buttermilk: உடல் எடையை குறைக்க மோர் சிறந்ததா.? தயிர் சிறந்ததா.?
Image Source: Freepik