சுடு தண்ணீர் vs பச்சை தண்ணீர் - சீக்கிரம் வெயிட் லாஸ் செய்ய எது சிறந்தது?

  • SHARE
  • FOLLOW
சுடு தண்ணீர் vs பச்சை தண்ணீர் - சீக்கிரம் வெயிட் லாஸ் செய்ய எது சிறந்தது?


Which Water Is Best For Weight Loss Cold Or Warm: உடல் ஆரோக்கியத்திற்கு நீர் எவ்வளவு முக்கியமான ஆதாரம் என்பது அனைவருக்கும் தெரியும். உடல் எடையைக் குறைக்கவும் நீர் உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் பலருக்கு ஒரு சந்தேகம் உள்ளது.

உடல் எடையைக் குறைக்க குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீர் இதில் எந்த தண்ணீர் உதவுகிறது. எடை குறைய குளிர்ந்த நீர் அருந்தவா? அல்லது வெதுவெதுப்பான நீர் அருந்தவா? இதில் வெந்நீர் குடிப்பது உடல் எடையை வேகமாகக் குறைக்கிறது என சிலர் நினைப்பர். இதில் எது உண்மை என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடும் நடிகர்! இதன் நன்மைகள் என்ன தெரியுமா?

வெந்நீர்

பொதுவாக வெந்நீர் குடிப்பதை பலரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், வெந்நீர் குடிப்பது உடல் செரிமானத்திற்கு உதவுகிறது. இவை செரிமான நொதிகளின் உற்பத்தியை நன்றாக வைத்துக் கொள்ளவும், செரிமான செயல்முறையை சிறப்பாக செயல்பட வைக்கிறது. இது உணவை மிகவும் திறமையாக உடைத்து, உடலில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதை பாதிக்கிறது. உடல் எடை குறைய செரிமானம் சரியாக இருப்பது அவசியமாகும். இவ்வாறு வெந்நீர் குடிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை விரைவாகக் குறைக்க உதவுகிறது.

மேலும் வெந்நீர் அருந்துவது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற ஏதுவாக அமைகிறது. இந்த நீர் உடலை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு சேர்த்து குடிப்பது சிறந்த தேர்வாக அமைகிறது. இது உடலின் வெப்பநிலையை தற்காலிகமாக உயர்த்தவும், வளர்ச்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் உணவு விரைவாக செரிமானம் அடைவதுடன், உடல் எடையைக் குறைக்க வழிவகுக்குகிறது. எனவே உணவுக்கு முன்னதாக வெதுவெதுப்பான நீர் அருந்துவது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் அதிகப்படியான உணவைக் குறைப்பதுடன், உடல் எடையைக் குறைக்கலாம்.

குளிர்ந்த நீர்

உடலில் உள்ள வெப்பத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீர் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. உடலின் வெப்பநிலையை மீண்டும் உயர்த்த ஆற்றலை செலவழிப்பது அவசியமாகும். இது தெர்மோஜெனீசிஸ் என்றழைக்கப்படுகிறது. இதைச் செய்வதற்கு அதிக கலோரிகள் எரிக்கப்படுகிறது. இந்த எரிந்த கலோரிகள் உடல் எடையிழப்புக்கு வழிவகுக்கிறது. பொதுவாக உடற்பயிற்சியின் போது உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதே சமயம், குளிர்ந்த நீரைக் குடிப்பது உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

மேலும், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதற்கு குளிர்ந்த நீர் உதவுகிறது. அதாவது வெதுவெதுப்பான தண்ணீரைப் போலவே, குளிர்ந்த நீரும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. குளிர்ந்த நீர் குடிப்பதால் பசி குறைகிறது. மேலும்,உணவு உண்ணுவதற்கு முன்னதாக குளிர்ந்த நீர் அருந்துவது தூக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dance for Weight Loss: டான்ஸ் ஆடினால் உடல் எடை குறையுமாம்! எப்படி தெரியுமா?

வெந்நீர் மற்றும் குளிர்ந்த நீர் - எடை குறைய இரண்டில் எது குடிக்க சிறந்தது?

குளிர்ந்த நீர் மற்றும் வெதுவெதுப்பான நீர் இரண்டுமே உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதில் எதை தேர்வு செய்வது என்பது அவரவர்களின் விருப்பமாகும். எனினும், உணவில் தண்ணீரை ஒரு அங்கமாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடை குறைப்பை எளிதாக்கலாம். மேலும் வெதுவெதுப்பான நீர் மற்றும் குளிர்ச்சியான நீர் இரண்டுமே செரிமானத்தைத் தூண்ட உதவுகிறது. ஆனால், காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடித்து நாளைத் தொடங்குவது நல்லது.

இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்வது இன்னும் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இது அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உணவுக்கு முன்னதாக வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது உணவை அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது.

is-drinking-cold-refrigerated-water-bad-for-the-heart

குளிர்ந்த நீரைப் பொறுத்தவரை, உடற்பயிற்சி செய்யும் போது குடிப்பது நல்லது. ஏனெனில், இது உடல் வெப்பநிலை அதிகரிப்பதைத் தடுத்து, உடலுக்கு ஆறுதலை அளிக்கிறது. எனவே சில சமயம் வெதுவெதுப்பான நீரும் சில சமயம் குளிர்ந்த நீரும் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இறுதியாக, பச்சைத் தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீர் எந்த தண்ணீரையும் குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Walking After Meal: சாப்பிட்ட பிறகு ஒரு 10 நிமிஷம் நடைபயிற்சி செய்யுங்க! என்ன மாற்றம் நடக்குதுனு பாருங்க

Image Source: Freepik

Read Next

Fruits for Weight Loss: சட்டுனு உடல் எடை குறைய பழம் சாப்பிடலாமா? எந்த பழம் அதிக நன்மையை தரும்!

Disclaimer