Is Dancing Good To Lose Belly Fat: இன்று பலரும் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகமாகி காணப்படுகின்றனர். இதில் சிலர் ஜிம்மிற்குச் செல்வது, நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது என எந்த வழிகளில் முயற்சி செய்தும், உடல் எடையில் மாற்றங்களைக் கொண்டு வர தவறி விடுகின்றனர். ஜிம்மிற்குச் செல்வது, நடைபயிற்சி செய்வது போன்றவற்றிற்கு நேரம் இல்லாமல் உடல் எடை குறைக்கும் பயணத்தைத் தவிக்கின்றனர். இதற்கு சிறந்த தீர்வாக குறைந்த நேரத்தில் பிடித்தமான முறையில் உடல் எடையைக் குறைக்க நடனம் உதவியாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம். நடனப்பயிற்சி செய்வதை இன்று பெரும்பாலானோர் விரும்புவர். சிலர் வழக்கமாக்கி பொழுதுபோக்கிற்காக தினந்தோறும் நடனம் செய்வர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடனமாடுவதன் மூலம் பல்வேறு நோய்களின் தாக்கத்திலிருந்து விடுபட முடியும் என கூறப்படுகிறது. இதில் நடனம் செய்வது எவ்வாறு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பது குறித்த தகவல்களை விரிவாகக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Walking After Meal: சாப்பிட்ட பிறகு ஒரு 10 நிமிஷம் நடைபயிற்சி செய்யுங்க! என்ன மாற்றம் நடக்குதுனு பாருங்க
நடனத்தின் நன்மைகள்
பொதுவாக நடனம் என்பது உடல் மற்றும் மனதை ஒருங்கிணைக்க வைக்கும் ஒரு பயிற்சியாகக் கருதப்படுகிறது. இதில் உடலின் ஒவ்வொரு பாகமும் சரியாகச் செயல்படும் வகையில் ஈடுபாடுடன் இருக்கும். எனவே ஜிம்மிற்கு செல்லவோ, விலையுயர்ந்த உபகரணங்களை வாங்கவோ, உடற்பயிற்சி செய்ய நேரமோ இல்லையெனில் நடனம் செய்வது சிறப்பு தேர்வாக அமைகிறது. ஏனெனில், நடனம் செய்வதன் மூலமாக ஒருவர் எடை அதிகரிப்பு, கொழுப்பு அதிகரிப்பு என பல்வேறு வகையான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இதில் நடனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.
நடனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
உடல் எடை குறைய
உடல் எடையைக் குறைக்க நடனம் செய்வது சிறந்த மற்றும் பிடித்த தேர்வாக அமைகிறது. அறிக்கையின் படி, தினமும் அரை மணி நேரம் நடனமாடுவதன் மூலம் உடலில் உள்ள கலோரிகளில் 130 முதல் 250 கலோரிகள் வரை குறைக்கலாம். இது தவிர, நடனம் ஆடுவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தூக்கமின்மை பிரச்சனை நீங்க
நடனமாடுவது தூக்கமின்மை பிரச்சனையை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். 20-30 நிமிடங்கள் தொடர்ந்து நடனமாடுவது, உடலை சோர்வடையச் செய்யும். இது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். எனவே தூக்கமின்மை பிரச்சனையைச் சந்திப்பவர்கள் நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கு நடனம் ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Jamun for Weight Loss: உடல் எடையை சட்டுனு வேகமாக குறைக்க நாவல்பழத்தை சாப்பிடுங்க
மன அழுத்தத்தைக் குறைக்க
மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளை தற்போது பெரும்பாலானோர் சந்திக்கின்றனர். இவர்களுக்கு நடனம் ஒரு சிறந்த பயிற்சியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, எதாவதொரு விஷயத்திற்கு மிகவும் கவலைப்படுபவர்களாகவோ அல்லது மிகுந்த மன வருத்தத்தில் உள்ளவர்கள் பிடித்த பாடலைக் கேட்பதுடன் நடனமாடத் தொடங்கலாம். இது அந்த மனக்கஷ்டத்தைத் தரும் விஷயங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதுடன், மன அழுத்தத்தைப் போக்க நல்ல சிகிச்சை முறையாகக் கருதப்படுகிறது.
கீழ் உடல் மற்றும் தசைகள் வலுவடைதல்
நடனம் செய்யும் போது, நமது ஒட்டுமொத்த உடலும் ஈடுபாடுடன் இருக்கும். அதிலும் குறிப்பாக கீழ் உடல் அதிக செயல்பாட்டுடன் காணப்படும். இதனால், இங்கு கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. குறிப்பாக, முதுமை அறிகுறிகளால் உடல் நெகிழ்வுத் தன்மை குறையலாம். ஆனால், நடனமாடுவதன் மூலம் இந்த நெகிழ்வுத் தன்மை இறக்கங்களைத் தவிர்க்கலாம். முக்கியமாக, பாதங்கள் தொடர்பானபிரச்சனைகளும் விலகி விடும்.
முகப்பொலிவு அதிகரிக்க நடனம்
தினமும் நடனமாடுவதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும். இது பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. அதே சமயம், முகத்தில் சீரான ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், முகப்பரு, வறட்சியடைதல் போன்ற பல்வேறு சரும பிரச்சனைகளைத் தவிர்த்து, முகத்தைப் பாதுகாக்கிறது.
நடனம் செய்வதன் மூலம் உடல் எடை குறைப்பைத் தவிர, மேலே கூறப்பட்ட மற்ற சில நன்மைகளையும் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Overeating And Weight Loss: உடல் எடையைக் குறைக்க கம்மியா சாப்பிடணுமா? இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க
Image Source: Freepik