Cow Milk Vs Buffalo Milk Calcium: உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் நல்ல மூலமாக பால் உள்ளது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று கால்சியம் ஆகும். கால்சியம் சத்துக்கள் எலும்பு மற்றும் பற்களை வலுவாக வைக்க உதவுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் பால் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆனால், பசும்பால் அல்லது எருமைப்பாலில் எந்த பால் எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. உடலில் கால்சியம் சத்துக்கள் இல்லாததால் எலும்புகள் பலவீனமடையலாம். இதனால், மூட்டு வலி பிரச்சனையும் ஏற்படும். இந்த சூழ்நிலையில் சரியான அளவு பால் உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். எந்த பாலில் அதிக கால்சியம் உள்ளது என்பது குறித்து ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Winter Stomach Problems: இந்த குளிருல வர வயிற்று வலி நீங்க இந்த ஆயுர்வேத வைத்தியங்களை ஃபாலோப் பண்ணுங்க.
பசு அல்லது எருமைப் பால் எந்த பாலில் கால்சியம் அதிகம் உள்ளது?
இந்தியாவில் எருமை மாடுகளை விட, பசுவின் பாலே அதிகம் உட்கொள்ளப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் பசும்பால் எளிதில் செரிமானம் அடைவதாகும். மேலும், இதில் குறைந்த கொழுப்புச் சத்து இருப்பதால், இது லேசானதாகும். ஆயுர்வேதத்தில் பசும்பாலில் பல்வேறு நன்மைகள் விவரிக்கப்பட்டுள்ளது.
பசும்பாலில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை உடலில் வீரியத்தை அதிகரித்து மனம் அமைதியடையச் செய்யும். ஆனால், எருமைப்பால் அதிக கொழுப்பு நிறைந்த மற்றும் கெட்டியான பால் ஆகும். பலருக்கு எருமைப்பாலை குடித்த உடன் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
பசும்பால் கால்சியம் உள்ளடக்கம்
100 கிராம் அளவிலான பசும்பாலில் 120 மி.கி அளவிலான கால்சியம் நிறைந்துள்ளது. மேலும், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் முறையே 95 mg/100 graam மற்றும் 12 mg/100 gram உள்ளது. இது தவிர, பசுவின் பாலில் வைட்டமின் டி மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்துள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: Mulethi Benefits: சளி, இருமல் காணாமல் போக அதிமதுரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க.
எருமைப்பால் கால்சியம் உள்ளடக்கம்
NIH-ன் ஆராய்ச்சியின் படி, 100 கிராம் அளவு எருமைப்பால் சராசரியாக 180 மி.கி கால்சியம் சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் முறையே 89-137 mg/100 gram மற்றும் 16 முதல் 30 mg/100 gram வரை இருக்கும்.
முடிவு
எந்த பாலில் அதிக கால்சியம் என்ற கேள்விக்கான விடையில், எருமைப்பால் தான் உள்ளது. குறிப்பாக பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்திருக்க விரும்புபவர்கள், அதிக கால்சியம் சத்துக்கு எருமைப் பால் சிறந்த தேர்வாகும். எனினும், உணவில் பாலை சேர்க்கும் போது, அதன் தேவைகளைப் புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் சரியான பாலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது முக்கியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Rules for Eating Fruits: நீங்க பழங்கள் அதிகம் சாப்பிடுபவரா? அப்ப இப்படி சாப்பிடுங்க.
Image Source: Freepik