Fri Sep 11, 2026 | 10:47 PM IST

Mulethi Benefits: சளி, இருமல் காணாமல் போக அதிமதுரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க.

Ways To Use Mulethi For Cold And Cough: காலநிலை மாற்றம், உணவுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சளி, இருமல் பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இருமல், சளி போன்ற பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்படுவர். இந்த சூழ்நிலையில், சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட சிரப் அல்லது மருந்தை உட்கொள்வது அவசியமாகிறது.

இதற்கு சில வீட்டு வைத்திய முறைகளும் உள்ளன. அதன் படி, சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் தருவதற்கு சிறந்த தேர்வாக அதிமதுரம் உதவுகிறது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நோய்த்தொற்றுக்களைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ayurveda Diet For Monsoon: மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

சளி மற்றும் இருமலுக்கு அதிமதுரம் தரும் நன்மைகள்

பொதுவாக, அதிமதுரம் ஒரு இயற்கையான மருத்துவ மூலிகையாகும். இது ஆயுர்வேதத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைத் தீர்க்க பயன்படுத்தப்படுகிறது. இது சளி, இருமல், தொண்டைவலி உள்ளிட்ட பிரச்சனைகளை நீக்கும். இது மட்டுமல்லாமல், தொண்டையில் டான்சில் உருவாகியிருப்பின், இதனைத் தீர்க்கவும் அதிமதுரம் உதவுகிறது. மேலும் சுவாசம், செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கவும் இது உதவுகிறது.

அதிமதுரம் ஊட்டச்சத்துகள்

அதிமதுரத்தில் ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை நிறைந்துள்ளன. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், பல்வேறு வகையான பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவுகிறது. இந்நிலையில், அதிமதுரம் பயன்படுத்துவது நோய்கள், தொற்றுக்களை குணமாக்கலாம். மாறிவரும் இந்த காலகட்டத்தில் அதிமதுரத்தை காலையிலும், மாலையிலும் எடுத்துக் கொண்டால் சளி விரைவில் குணமாகும். மேலும், முலேத்தி பாக்டீரியா, வைரஸ்கள அழித்து தொண்டை வீக்கத்தைக் குறைக்கிறது. இதுமட்டுமல்லாமல், இவை வயிற்றுக்கு நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Menstruation Ayurvedic Tips: மாதவிடாய் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் சில ஆயுர்வேத முறைகள்

சளி மற்றும் இருமலுக்கு அதிமதுரம் சாப்பிடுவது எப்படி?

சளி, இருமல் மற்றும் தொண்டை வலி நீங்க,அதிமதுரத்தை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

அதிமதுர நீர்

அதிமதுர வேரை ஒரு கிளாஸ் தண்ணீரில் முந்தைய நாள் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். பின் காலையில் எழுந்தபின், இந்த தண்ணீரைக் குடிக்கலாம். இது இருமல் மற்றும் சளியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Herbal Drinks: சமையலறை பொருட்கள் மூலமே மூலிகை பானம் தயாரிக்கலாம்.. நன்மைகள் தெரியுமா?

முலேத்தி டீ

சளி, இருமலுக்கு சூடாக குடிக்க விரும்பினால், இந்த அதிமதுர டீயை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முலேத்தி வேரை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்க்கவும். பின் இதை கொதிக்க வைத்து, தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம்.

அதிமதுர பொடி

ஒரு கிளாஸ் தண்ணீரில் அதிமதுர பொடி சேர்த்து பருகலாம். விரும்பினால், இந்த தண்ணீரில் தேனையும் சேர்க்கலாம்.

இருமல், சளி உள்ளவர்கள் அதிமதுரத்தை பயன்படுத்துவது மிகுந்த நன்மை அளிக்கிறது. மேலும், இது தொண்டையில் தேங்கியிருக்கும் சளியை எளிதில் அகற்றுவதாகவும் அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Amla With Honey Benefits: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் உடன் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இது தான்

Image Source: Freepik

Read Next

Winter Health Tips: குளிர்காலத்திலும் ஆக்டிவாக இருக்க இதை குடித்தால் போதும்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content