Ayurvedic Treatment For Period Problems: மாதந்தோறும் பெண்கள் சந்திக்கும் மாதவிடாயின் காரணமாக ஏராளமான உடல் நல பிரச்சனைகள் எழுகின்றன. சிலருக்கு மாதவிடாய் பிடிப்புகள் ஏற்பட்டு அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். இது மட்டுமல்லாமல் ஒழுங்கற்ற சுழற்சி முறையும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனை ஆயுர்வேத முறையில் தவிர்க்கலாம்.
மாதவிடாய் பிரச்சனைகள் பெண்கள் தங்கள் வாழ்நாளில் சந்திக்கக் கூடிய பொதுவான பிரச்சனையாக இருந்தாலும் இது பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. தற்போதைய உணவுப் பழக்கங்கள் மற்றும் உட்கார்ந்த சூழ்நிலை போன்றவற்றின் காரணமாக மாதவிடாய் பிடிப்புகள் அதிக வலியைக் கொடுப்பதாக அமையும். இந்த மாதவிடாய் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் ஆயுர்வேத சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ayurvedic Bathing Tips : ஆயுர்வேத முறைப்படி எப்படி குளிக்க வேண்டும் தெரியுமா?
பெண்கள் தங்கள் வாழ்நாளில் பருவமடைதல், மாதவிடாய், தாய்மை என பல்வேறு மாற்றங்களைச் சந்திக்கின்றனர். இந்த ஒவ்வொரு கட்டங்களும் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இவை அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைகின்றன. எனவே, பொதுவான உடல்நலத்தைப் பராமரிக்க கூடுதல் கவம் தேவை.
பெண்களின் உடல் நலப் பிரச்சனைகளுக்கான ஆயுர்வேத சிகிச்சை
பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பொதுவான உடல்நலப் பிரச்சனைகள் குறித்தும், அதனை எவ்வாறு நிர்வகிப்பது குறித்து ஹிமாலயா மருந்து நிறுவனம், ஆயுர்வேத நிபுணர்களான டாக்டர் ஸ்ருதிஹெக்டே மற்றும் டாக்டர் பிரதீபா பாப்ஷேட் போன்றோர் விவரித்துள்ளனர்.
மாதவிடாய் பிடிப்புகள்
சில பெண்கள் மாதவிடாய் வலியை மாதந்தோறும் அனுபவிப்பர். சில பெண்கள் கடுமையான வலியை அனுபவிக்காவிட்டாலும், இது அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். இந்த அசௌகரியத்தை எளிதாக்க இலவங்கப்பட்டை மற்றும் யஷ்டிமது போன்ற ஆயுர்வேத மூலிகைகள் கொண்ட மாத்திரைகளைப் பயன்படுத்தலாம். இவை மாதவிடாய் வலி மற்றும் கருப்பை தசைப்பிடிப்புகளைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Monsoon Health Tips: மழைக்காலத்தில் ஆரோக்கியத்தை காக்க சில வழிகள்...
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி
மன அழுத்தம், உணவு முறை, அல்லது ஹார்மோன் பிரச்சனைகள் போன்றவற்றால் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படலாம். லோத்ரா, அஸ்பாரகஸ், அசோகா போன்ற இயற்கை மூலிகைகள் கொண்ட மாத்திரைகள் அல்லது டானிக்ஸ் வடிவில் எடுக்கலாம். இந்த மூலிகைகள் என்டோஜெனஸ் ஹார்மோன் சுரப்பை சீராக்க உதவுகிறது. மேலும் இந்த ஆயுர்வேத வைத்தியங்கள் பெண்களின் ஆரோக்கிய நிலைகளுடன் தொடர்புடைய அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன.
மனம் மற்றும் உடலியல் பிரச்சனைகள்
இனப்பெருக்க நிலையிலிருந்து இனப்பெருக்கம் அல்லாத கட்டத்திற்கு மாறும் நிலை கிளைமேக்டெரிக் என்படுகிறது. இது பெரிமெனோபாஸ், மெனோபாஸ், மற்றும் மெனோபாஸின் அடுத்த கட்டங்களைக் குறிக்கிறது. இந்த மாற்றம் ஏற்படும் போது மனம் மற்றும் உடலியல் பிரச்சனைகளைக் கொண்டு வரலாம். மேலும் இந்த கட்டத்தில் மனம் மற்றும் உடல் அழுத்தத்தைக் குறைக்க பெண்கள் பாலிஹெர்பல் தீர்வைத் தேடலாம். இதற்கு அசோகா, அதிமதுரம், அஸ்பாரகஸ் போன்ற மூலிகைகள் கிளைமேக்டெரிக் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது. மேலும் இவை நல்வாழ்வை உறுதிப்படுத்த உதவுகிறது.
இது தவிர ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யலாம். வாரத்தில் குறைந்தது 4 நாள்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். மேலும் உடலில் ஏற்படும் பொதுவான நோய்களிலிருந்து விடுபட சீரான நல்ல வாழ்க்கை முறையைப் பின்பற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ayurveda Diet For Monsoon: மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்
Image Source: Freepik