Mulethi for skin: தங்கம் போன்ற மினுமினுப்பான சருமத்திற்கு முலேத்தி பவுடரை இப்படி யூஸ் பண்ணுங்க

Benefits of using mulethi powder on face: ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற உதவும் இயற்கை வைத்தியங்கள் ஏராளம் உள்ளது. அவ்வாறு சரும ஆரோக்கியத்தில் அதிமதுரம் பொடி மிகுந்த நன்மை பயக்கும். இதில் சருமத்திற்கு அதிமதுரம் பொடி தரும் நன்மைகளையும், பயன்படுத்தும் முறை குறித்தும் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Mulethi for skin: தங்கம் போன்ற மினுமினுப்பான சருமத்திற்கு முலேத்தி பவுடரை இப்படி யூஸ் பண்ணுங்க

Benefits of applying licorice powder on face: ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தைப் பெற யார் தான் விரும்ப மாட்டார்கள். ஆனால், இன்றைய மோசமான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கரும்புள்ளிகள், நேர்த்தியான கோடுகள், சரும வறட்சி உள்ளிட்ட முதுமை அறிகுறிகளை இளம் வயதிலேயே சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபட சிலர் ரசாயன அடிப்படையிலான க்ரீம்கள் மற்றும் சீரம்கள் போன்றவற்றின் மீது கவனம் செலுத்துகின்றனர். ஆனால், இது சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.

இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட இரசாயன சரும பராமரிப்புப் பொருள்களிலிருந்து விலகி, சருமத்தை பளபளப்பாக வைக்க சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம். இதற்கு சிறந்த தேர்வாக அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். இது ஆயுர்வேதத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். முலேத்தி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, வயதான எதிர்ப்பு போன்ற பல்வேறு பண்புகள் நிறைந்துள்ளது. குறிப்பாக, அதிமதுரம் சாறு ஹைப்பர் பிக்மென்டேஷனை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Grapefruit for skin: முகம் தங்கம் போல ஜொலிக்கணுமா? இந்த ஒரு ஃபுரூட் மட்டும் போதும்

சரும ஆரோக்கியத்திற்கு முலேத்தி தரும் நன்மைகள்

பொதுவாக ஆயுர்வேதத்தில் சிறந்த விளங்கும் மூலிகைகளில் ஒன்று முலேத்தி ஆகும். இதன் விரிவான பண்புகள் காரணமாக, நீண்ட கால பயன்பாட்டிற்கு வழிவகுக்கிறது. இது கண்கள், முடி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் சரும ஆரோக்கியத்திற்கு முலேத்தி தரும் நன்மைகளைக் காணலாம்.

சுருக்கங்களைக் குறைக்க

முலேத்தியில் முதுமை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது சருமத்தில் தோலில் உள்ள சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளை அகற்ற உதவுகிறது. இதன் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தின் தொனியை மேம்படுத்தவும், சுருக்கங்களைக் குறைக்கவும் மற்றும் சருமத்தை ஒளிரச் செய்யவும் உதவுகிறது. இது வயதான அறிகுறிகளை மெதுவாக்க உதவுகிறது.

தழும்புகளைக் குறைப்பதற்கு

சருமம் ஒளிர்வதைத் தவிர, முலேத்தியில் உள்ள குணப்படுத்தும் பண்புகள் காயத்தைக் குணப்படுத்த உதவுகிறது. இது எளிதில் காயங்களைக் குணப்படுத்த ஊக்குவிக்கிறது. இது தவிர, காயங்களுக்குப் பிறகு சருமத்தில் ஏற்படக்கூடிய கருமையான தழும்புகளைத் தடுக்கவும் உதவுகிறது. இதன் மூலம் சருமத்தை கறை இல்லாமல் வைத்திருக்கலாம்.

முகப்பருவைத் தடுக்க

அதிமதுரம் ஒரு அழற்சி எதிர்ப்பு, நச்சு எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட சிறந்த மூலிகையாகும். இந்த பண்புகள் சருமத்தில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. இவை முகப்பரு உருவாவதைத் தடுக்கவும், வெளிப்புற சுற்றுச்சூழல் காரணிகளால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு உணர்வுகளைத் தணிக்கவும் உதவுகிறது.

தோல் நிலைகளைக் குணப்படுத்த

முலேத்தியில் நச்சு எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இது தோல் அழற்சி, தடிப்புத் தோல் அழற்சி, அரிக்கும் தோலழற்சி மற்றும் பூஞ்சை தொற்று போன்ற பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மணப்பெண் போல ஜொலிக்கணுமா? தினமும் காலையில் முகத்தை இந்த தண்ணீரில் க்ளீன் பண்ணுங்க

சூரியனால் ஏற்படும் சரும பாதிப்பைத் தடுக்க

சருமத்தை ஒளிரச் செய்வதில் முலேத்தில் பங்களிப்பதுடன், சூரியனால் சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுக்கவும் உதவுகிறது. இது புற ஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க வழிவகுக்கிறது. சூரிய ஒளியில் அதிகம் வெளிப்படுவதால் சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க முலேத்தி உதவுகிறது. எனவே வழக்கமான சரும பராமரிப்பு வழக்கத்தில் முலேத்தியைப் பயன்படுத்துவதன் மூலம், இயற்கையான சரும நிறத்தைப் பெறலாம்.

முலேத்தியைப் பயன்படுத்துவதற்கான குறிப்புகள்

அன்றாட வாழ்வில் முலேத்தியை ஃபேஸ் பேக்கில் சேர்ப்பதன் மூலமோ அல்லது பாலில் சேர்த்து அருந்துவதன் மூலமோ சருமத்தை ஒளிரச் செய்யலாம்.

மஞ்சள், ரோஸ் வாட்டர் ஃபேஸ்பேக்

மஞ்சள், ரோஸ் வாட்டர் மற்றும் முலேத்தி பொடி போன்றவற்றைக் கலந்து ஃபேஸ்பேக்கைத் தயார் செய்யலாம். இது முகப்பரு மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராடவும், சருமம் பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது.

முலேத்தி, சந்தனப் பொடி ஃபேஸ்பேக்

சந்தனப் பொடி மற்றும் முலேத்தி பவுடரைக் கொண்டு தயார் செய்யப்படும் இந்த ஃபேஸ்பேக்கை சருமத்திற்குப் பயன்படுத்துவது ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு உதவுகிறது. மேலும் இது எண்ணெய் சருமத்திற்கு ஏற்றதாகும்.

முல்தானி மிட்டி, முலேத்தி ஃபேஸ்பேக்

முல்தானி மிட்டி மற்றும் பாலுடன் சேர்த்து முலேத்தி பொடியைப் பயன்படுத்துவது கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு ஒரு நல்ல வீட்டு வைத்தியமாகச் செயல்படுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Blue tea benefits for skin: சருமம் சும்மா தங்கம் போல மின்னணுமா? சங்கு பூ டீ தரும் அதிசய நன்மைகள் இதோ

Image Source: Freepik

Read Next

Nose Pores: மூக்கு மேல் அம்மி கொத்தியது போல் இருக்கும் துளைகளை உடனடியாக போக்குவது எப்படி?

Disclaimer