Blue tea benefits for skin: சருமம் சும்மா தங்கம் போல மின்னணுமா? சங்கு பூ டீ தரும் அதிசய நன்மைகள் இதோ

Blue tea benefits for skin: சருமத்தைப் பொலிவாக்கவும், பளபளப்பாகவும் வைத்திருக்க பல முயற்சிகளைக் கையாள்கின்றனர். இதற்கு சங்கு பூ டீ பெரிதும் உதவுகிறது. சங்கு பூ டீ சரும ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது மற்றும் அதன் நன்மைகள் குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Blue tea benefits for skin: சருமம் சும்மா தங்கம் போல மின்னணுமா? சங்கு பூ டீ தரும் அதிசய நன்மைகள் இதோ


Butterfly pea flower tea benefits for skin: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை இரண்டுமே பலதரப்பட்ட பிரச்சனைகளைக் கொண்டு வரலாம். இதில் சரும பிரச்சனைகளும் அடங்கும். இதனால் வறட்சியான சருமம், கரும்புள்ளிகள், முகப்பரு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க சந்தையில் பல்வேறு சரும பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்துவர். ஆனால் இவை சரும ஆரோக்கியத்தையும் பாதிக்கும் சூழல் ஏற்படலாம்.

இந்நிலையில் இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வது சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இதற்கு ஒரு சிறந்த மூலப் பொருளாக அமைவது நீல தேநீர் ஆகும். இந்த நீல தேநீர் சங்குப் பூ டீ என்றும் அழைக்கப்படுகிறது. இது அழகான, பிரகாசத்தைத் தருவதுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் சரும ஆரோக்கியத்திற்கு சங்கு பூ டீ தரும் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: 

நீல தேநீர் என்றால் என்ன?

கிளிட்டோரியா டெர்னேடியா எனப்படும் பூவின் உலர்ந்த இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை தேநீரே ப்ளூ டீ ஆகும். இதில் உள்ள அந்தோசயினின்கள், பூவின் நிறம் நீலமாக இருக்கக் காரணமாகும். இதில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. சரும ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ப்ளூ டீ பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் சருமத்திற்கு ப்ளூ டீ தரும் நன்மைகளைக் காணலாம்.

சருமத்திற்கு சங்கு பூ டீ தரும் நன்மைகள்

நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்த

சருமத்திற்கு சங்கு பூ டீ பல்வேறு நன்மைகளைத் தருகிறது. முதன்மையானதாக சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. கிளைகேஷன் என்பது ஒரு இயற்கையான இரசாயன எதிர்வினையைக் குறிக்கிறது. இது முதுமையைத் துரிதப்படுத்துகிறது. அதாவது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் தொய்வுகளுக்கு வழிவகுக்கலாம். எனினும் ப்ளூ டீயின் தனித்துவமான கலவைகள் முதுமை செயல்முறையைத் திறம்பட எதிர்க்கிறது. ப்ளூ டீ கிளைகேஷனைத் தடுப்பதன் மூலம் சருமத்தின் கொலாஜனைப் பாதுகாக்க உதவுகிறது. இது சருமத்தின் உறுதி மற்றும் நெகிழ்ச்சித்தன்மைக்கு வழிவகுக்கிறது.

சருமத்தை ஈரப்பதமாக்க

பொதுவாக குளிர்ந்த காலநிலையில் பலரும் அடிக்கடி நீரிழப்பு மற்றும் வறட்சியை சந்திக்கின்றனர். இதற்கு சங்குப்பூ டீ ஒரு இயற்கையான தீர்வை வழங்குகிறது. சரும பராமரிப்பைப் பொறுத்த வரை சங்குப் பூ டீ பல்வேறு நன்மைகளைத் தருகிறது. ஆய்வின் படி, இந்த பானம் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும் திறன் கொண்டதாக அமைகிறது. இது சருமத்தை நீரேற்றமாக மற்றும் குண்டாக வைக்க உதவுகிறது. வழக்கத்தில் சங்குப் பூ டீயை சேர்த்துக் கொள்வது குளிர்கால வானிலையின் உலர்த்தும் விளைவுகளை திறம்பட எதிர்த்துப் போராடுகிறது. இவை சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Blue Tea for Weight Loss: ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க தினமும் இந்த டீயை குடியுங்க!

சூரிய பாதிப்பிலிருந்து பாதுகாக்க

சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பில் மிக முக்கியமான ஒன்று சூரிய சேதத்திலிருந்து பாதுகாப்பதாகும். சங்குப் பூ டீ-யில் நிறைந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படுகிறது. இது புற ஊதாக் கதிர்வீச்சினால் உருவாகும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. ஆய்வில் இவை மூலக்கூறுகளை எதிர்த்துப் போராடவும், சூரிய ஒளியின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இதன் மூலம் முன்கூட்டியே வயதான மற்றும் சரும சேதத்தின் அபாயத்தைக் குறைக்கலாம்.

முதுமை எதிர்ப்பு

சங்குப் பூ டீயில் நிறைந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. மேலும் இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் சரும சேதத்திற்கு பங்களிப்பதற்கும், முதுமை செயல்முறையை துரிதப்படுத்தவும் உதவுகிறது. இந்த சேதப்படுத்தும் மூலக்கூறுகளை எதிர்த்துப் போராடுவதன் மூலம் இவை சருமத்தை முன்கூட்டிய வயதிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது இளமைத் தோற்றத்தை ஊக்குவிக்கிறது. கூடுதலாக, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை ஊட்டமளிக்கும் மற்றும் புத்துயிர் அளிக்க உதவுகிறது.

சருமத்திற்கு சங்குப் பூ டீ பயன்படுத்துவது எப்படி?

சங்குப் பூ டீ

2 முதல் 3 சங்குப் பூக்களை ஒரு கப் வெதுவெதுப்பான நீரை சேர்க்க வேண்டும். இதை 2 அப்படியே வைத்து, பின்னர் பூக்களை அகற்றி விடலாம். இந்த பானத்தைக் காலையில் அருந்துவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sangu Poo Benefits: சங்கு பூ மட்டும் அல்ல; வேரும் ஆரோக்கியத்திற்கு நல்லது! எப்படி சாப்பிடணும் தெரியுமா?

தேன், தயிருடன் ப்ளூ டீ

ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் தயிருடன் ஒரு டீஸ்பூன் அளவிலான ப்ளூ டீ பவுடரை எடுத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் கலக்க வேண்டும். பிறகு இந்தக் கலவையை சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் விட வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவுவதன் மூலம் சரும பிரகாசத்தைப் பெறலாம்.

எலுமிச்சையுடன் ப்ளூ டீ

ஒரு கிளாஸ் நீரில் அரை எலுமிச்சை மற்றும் 2 முதல் 3 சங்குப் பூக்கள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். பிறகு ஒரு நிமிடம் கழித்து, பூக்களை அகற்றி விட்டால் பானம் தயாராகி விடும்.

கற்றாழையுடன் சங்குப் பூ டீ

தேன், கற்றாழை ஜெல் மற்றும் ப்ளூ டீ பவுடர் போன்றவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து சருமத்தில் தடவ வேண்டும். இதை 20 நிமிடங்கள் அப்படியே வைத்து பின் தண்ணீரில் கழுவி விடலாம். இப்போது சருமம் பளபளப்பாக இருப்பதை உணரலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Sangu Poo Benefits: சங்குப்பூவின் நன்மைகள் பற்றி தெரியுமா?

Image Source: Freepik

Read Next

மணப்பெண் போல ஜொலிக்கணுமா? தினமும் காலையில் முகத்தை இந்த தண்ணீரில் க்ளீன் பண்ணுங்க

Disclaimer