Expert

Sangu Poo Benefits: சங்கு பூ மட்டும் அல்ல; வேரும் ஆரோக்கியத்திற்கு நல்லது! எப்படி சாப்பிடணும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Sangu Poo Benefits: சங்கு பூ மட்டும் அல்ல; வேரும் ஆரோக்கியத்திற்கு நல்லது! எப்படி சாப்பிடணும் தெரியுமா?


ஆயுர்வேத சிகிச்சையில் நோயாளிக்கு உடனடி நிவாரணம் கிடைக்காவிட்டாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், பிரச்சனை படிப்படியாக முற்றிலும் மறைந்துவிடும். ஆயுர்வேதம் பல மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை கொண்டது. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அவற்றில் ஒன்றுதான் சங்கு பூ செடியின் வேர்.

இது பல வகையான உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த பயன்படுகிறது. குறிப்பாக, பெண்களின் உடல் நல பிரச்சினைகளை தீர்க்கும் சஜீவினி என்றே கூறலாம். ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா சங்கு பூ செடியின் வேரின் நன்மைகளை பற்றி நமக்கு விளக்கியுள்ளார். இதன் பயன்கள் மற்றும் இதை எப்படி சாப்பிடுவது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Avoid Foods with Lemon: நீங்க மறந்தும் எலுமிச்சையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க

வியர்க்குருவை குறைக்கும்

சங்கு பூ செடியின் வேரைப் பயன்படுத்துவதன் மூலம் சரும சுருக்கங்களைக் குறைக்கலாம். அதே போல வியர்க்குருவை குறைக்கவும் இது உதவியாக இருக்கும். ஏனென்றால், சங்கு பூ வேர் இயற்கையில் குளிர்ச்சியானது. இதனை பாலுடன் கலந்து பயன்படுத்தலாம்.

சங்கு பூ வேரை பாலுடன் கலந்து பேஸ்ட்டை தயார் செய்து. பின்னர், அதை முகப்பருக்கள் மீது தடவவும். 20-30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்யவும். இந்த முறையில் சங்கு பூ வேரை தொடர்ந்து பயன்படுத்துவது பலனளிக்கும்.

வெள்ளை புள்ளிகள் பிரச்சனையை குறைக்கும்

சங்கு பூவின் வேரை நீரில் கலந்து தடவி வந்தால் வெள்ளைப் புள்ளிகள் பிரச்சனை குறையும். இதற்கு, சங்கு பூ வேரை தண்ணீர் விட்டு உரசி பேஸ்ட்டை தயார் செய்து, பின்னர் இந்த பேஸ்ட்டை வெள்ளை புள்ளிகள் மீது தடவவும். தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் வித்தியாசத்தை நீங்கள் கவனிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Papaya Leaf Benefits: டெங்கு முதல் சர்க்கரை வியாதி வரை… பல பிரச்சினையை சரி செய்யும் பப்பாளி இலை ஜூஸ்!!

முகப்பரு குறையும்

சங்கு பூ வேர் பொடியில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து. பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15-20 நிமிடம் கழித்து கழுவவும். சங்கு பூ வேர் பேஸ்ட்டை சருமத்தில் தடவினால் முகப்பரு மற்றும் பரு பிரச்சனைகள் குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

சங்கு பூ வேரை தொடர்ந்து உட்கொள்வது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இது நோய்களை எதிர்த்துப் போராட உடலைத் தயார்படுத்துகிறது. சங்கு பூ வேரை உட்கொள்வது செரிமான அமைப்புக்கும் நன்மை பயக்கும். அதன் நுகர்வு அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.

இதற்கு, சங்கு பூவின் வேரில் இருந்து கஷாயம் தயாரித்து. பின்னர், அதை உட்கொள்ளவும். கஷாயம் தயாரிக்க, முதலில் 1 தேக்கரண்டி சங்கு பூ வேர் பொடியை 1 கப் தண்ணீரில் எடுத்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் வடிகட்டி ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கவும்.

இந்த பதிவும் உதவலாம் : Benefits of Walnuts: நீங்க எப்பவும் இளமையா இருக்கணுமா? அப்போ வால்நட்ஸ்யை இப்படி சாப்பிடுங்க!!

சங்கு பூ வேரில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இருப்பினும், புதிய மருந்து அல்லது சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன், ஆயுர்வேத மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Pic Courtesy: Freepik

Read Next

Broccoli Benefits: இது தெரிஞ்சா ப்ரோக்கோலியை தினமும் சாப்பிடுவீங்க

Disclaimer

குறிச்சொற்கள்