Broccoli Benefits: இது தெரிஞ்சா ப்ரோக்கோலியை தினமும் சாப்பிடுவீங்க

  • SHARE
  • FOLLOW
Broccoli Benefits: இது தெரிஞ்சா ப்ரோக்கோலியை தினமும் சாப்பிடுவீங்க


ப்ரோக்கோலி ஒரு பல்துறை மூலப்பொருளாகப் பயன்படுகிறது. இதை எளிய சாலடுகள், உணவுகள் என பல்வேறு உணவுகளின் சுவையை மேம்படுத்த உதவுகிறது. ப்ரோக்கோலியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே உள்ளது. இது தவிர கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இதன் வைட்டமின் சி சத்துக்கள் ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதில் ப்ரோக்கோலி தரும் நன்மைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ப்ரோக்கோலி vs காலிஃபிளவர் - எது ஆரோக்கியமானது?

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்குக் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

செரிமான ஆரோக்கியத்திற்கு

ப்ரோக்கோலியானது சிறந்த நார்ச்சத்துக்கள் நிறைந்த மூலமாகும். இது ஆரோக்கியமான செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது. இது வழக்கமான குடல் இயக்கங்களை உறுதி செய்யவும், குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கவும் உதவுகிறது. மேலும் இதன் நார்ச்சத்துக்கள் மைக்ரோபயோட்டாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இவை அழற்சி குடல் நோய் (IBD), எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான கோஅளாறுகளைத் தடுக்க உதவுகிறது.

வீக்கத்தைக் குறைக்க

ப்ரோக்கோலியில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் சிறந்த ஆக்ஸிஜனேற்றிகள் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இவை வழக்கமான குடல் இயக்கங்களை ஆதரிக்கவும், மலச்சிக்கல்லைத் தடுக்கவும் உதவுகிறது.

ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த

ப்ரோக்கோலியில் வைட்டமின்கள் சி மற்றும் ஈ, β-கரோட்டின் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முதுமை செயல்முறையை மெதுவாக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் அமைகின்றன.

இதய ஆரோக்கியம்

ப்ரோக்கோலியில் உள்ள ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த பண்புகள், சரியான இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும், இதய செயல்பாட்டை மேம்படுத்தவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் பொட்டாசியம் சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இதன் நார்ச்சத்துக்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Avoid Foods with Lemon: நீங்க மறந்தும் எலுமிச்சையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க

எலும்பு ஆரோக்கியத்திற்கு

இதில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் போன்றவை நிறைந்துள்ளது. இவை இரண்டுமே எலும்பு ஆரோக்கியத்திற்கும், ஆஸ்டியோபோரோசிஸ் தடுப்புக்கும் அவசியமாகிறது. இது கால்சியம் எலும்பு வலிமை மற்றும் அடர்த்தியை ஆதரிக்கிறது. அதே சமயம், இதன் வைட்டமின் கே சத்துக்கள் கால்சியம் பிணைப்பைக் கட்டுப்படுத்தவும், எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

கண் பராமரிப்பு

ப்ரோக்கோலியில் உள்ள அதிகளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது வயது தொடர்பான கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது. இது தவிர, ப்ரோக்கோலியிலுள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற இரண்டு ஆக்ஸிஜனேற்றிகள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் புற ஊதாஒளி சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு

ப்ரோக்கோலியில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள், சல்போராபேன் போன்ற புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களாக மாற்றப்படுகிறது. இந்த சேர்மங்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. இது சாத்தியமான புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளுக்கு பங்களிக்கிறது. குறிப்பாக புரோஸ்டேட், மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ப்ரோக்கோலி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Broccoli Benefits: ப்ரோக்கோலியில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்.. கண்டிப்பாக தெரிந்துக் கொள்ளுங்கள்!

Image Source: Freepik

Read Next

ஸ்கூல் லீவு.. என்ன ஸ்னாக்ஸ் செய்யலாம்னு யோசனையா.? மஷ்ரூம் வச்சி இப்படி செஞ்சி கொடுங்க..

Disclaimer

குறிச்சொற்கள்