Is It Okay To Drink Whey Water: இந்திய உணவு வகைகளில் மிகவும் இன்றியமையாத மற்றும் அதிகம் உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்றாக பனீர் அமைகிறது. பனீர் புரதச் சத்துக்கள் நிறைந்த மூலமாகும். இது அதிகளவிலான ஊட்டச்சத்துக்களுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இந்த பன்னீரிலிருந்தே பன்னீர் தண்ணீர் தயார் தயாரிக்கப்படுகிறது. அதாவது வீட்டில் பனீர் தயாரித்தவுடன், பாலை காய்ச்சி, தண்ணீரில் இருந்து சீஸ் பிரித்த பிறகு கிடைக்கும் திரவமே பன்னீர் தண்ணீர் (Whey Water) எனப்படுகிறது.
இந்த பன்னீர் நீர் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்ட ஒரு முழுமையான, உயர்தர புரத வகையைச் சேர்ந்ததாகும். கூடுதலாக, மற்ற வகை புரதங்களுடன் ஒப்பிடும்போது இந்த பன்னீர் தண்ணீர் ஆனது சிறந்த செரிமானம் மற்றும் குடலில் இருந்து விரைவாக உறிஞ்சப்படுகிறது. இதில் பன்னீர் நீரின் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Jackfruit Seeds Benefits: இது தெரிந்தால் இனி பலாப்பழத்துடன் அதன் கொட்டையையும் சேர்த்து சாப்பிடுவீங்க!
பன்னீர் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
பன்னீரைப் பிரித்தெடுக்கும் போது கிடைக்கும் திரவமான பன்னீர் தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு சிறந்த ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இரத்த சர்க்கரை அளவை சீராக்க
பன்னீர் வாட்டர் டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாகும். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த அல்லது குறைப்பதற்கு உதவுகிறது. மேலும், இந்தப் புரதம் இன்சுலின் அளவு மற்றும் அதன் விளைவுகளுக்கு உணர்திறன் இரண்டையும் அதிகரிக்கிறது.
எனினும், அதிக கார்போஹைட்ரேட் உணவுக்கு முன் அல்லது அதனுடன் இந்த பன்னீர் வாட்டரை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமான மக்கள் மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகள் என இருவருக்குமே மிதமான இரத்த சர்க்கரை இருப்பதாகக் கூறப்படுகிறது.
உடல் எடை இழப்பிற்கு
பன்னீர் வாட்டரை அருந்துவதால் அதில் உள்ள புரதம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இது பசியைக் கட்டுப்படுத்துவதுடன், உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும் இது அதிகளவிலான கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், தசை வெகுஜனத்தை பராமரிக்கவும் உதவுகிறது. எனவே உடல் எடையை இழக்க விரும்புபவர்கள் இந்த பன்னீர் தண்ணீரை தனது அத்தியாவசிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் எடை இழப்புக்கு உதவும் முக்கிய காரணியான தீங்கு விளைவிக்கும் குடல் பாக்டீரியாவைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Sambar Podi Recipe: வீடே மனக்குற மாறி சாம்பார் வைக்க சாம்பார் பொடி இப்படி அரச்சு பாருங்க.!
இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு
இதய நோய் அபாயத்திற்கான முக்கிய காரணிகளில் ஒன்று உயர் இரத்த அழுத்தம் ஆகும். பல்வேறு ஆய்வுகளில் குறிப்பிட்ட படி, பால் பொருட்களின் நுகர்வு இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது எனக் கருதப்பட்டாலும், இந்த Whey Water இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த பானமாகக் கருதப்படுகிறது.
மேலும், இந்த பன்னீர் வாட்டர் (Whey Water) ஆஞ்சியோடென்சின்-கன்வெர்டிங்-என்சைம் இன்ஹிபிட்டர்கள் அல்லது ஏசிஇ இன்ஹிபிட்டர்கள் எனப்படும் பயோஆக்டிவ் பெப்டைட்களால் நிரம்பியதாகும். இது இரத்த அழுத்த அளவுகளுக்குப் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
தசை வளர்ச்சியை ஊக்குவிக்க
இந்த பன்னீர் தண்ணீர் அதாவது Whey Water பிரபலமாக அறியப்படும் பானமாகும். இது தசை வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, பளு தூக்கும் பயிற்சி போன்ற தசை வலிமைப்படுத்தும் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் புரோட்டீன் ஷேக்குகளைப் பயன்படுத்துவர். இந்த புரோட்டீன் ஷேக்குகளில் பன்னீர் தண்ணீரைச் சேர்க்கலாம் அல்லது சப்பாத்தி மாவில் சேர்த்து பிசையலாம். மேலும் வயது தொடர்பான தசையிழப்பைத் தடுக்கவும், வலிமையை மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக அமைகிறது.
வீக்கத்தைக் குறைப்பதற்கு
குறுகிய கால வீக்கம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் எனினும், நாள்பட்டதாக மாறினால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். இதனைத் தவிர்க்க பன்னீர் நீர் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். மேலும், இது சி-ரியாக்டிவ் புரதத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. அதிலும் குறிப்பாக உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது.
இவ்வாறு பனீர் வாட்டர் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Baked Mango Yogurt Recipe: நாவில் எச்சில் ஊறும் மேங்கோ யோகர்ட் ரெசிபி! இப்படி ஒரு முறை செய்து பாருங்க
Image Source: Freepik