Mushroom Health Benefits: இது தெரிஞ்சா இனி நீங்க தினமும் காளான் சாப்பிடுவீங்க

  • SHARE
  • FOLLOW
Mushroom Health Benefits: இது தெரிஞ்சா இனி நீங்க தினமும் காளான் சாப்பிடுவீங்க

தினமும் காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினந்தோறும் காளான் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

பெரும்பாலும் அதிக உடல் எடை கொண்ட நபர்கள் பல்வேறு உடல் நல பிரச்சனைகளால் பாதிப்படைகின்றனர். காளானில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் இன்னும் சில ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை செல்கள் இரத்த நாளங்களின் சுவர்களில் ஒட்டிக் கொள்வதையும், பிளேக் குவிவைத் தடுக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தம் மற்றும் சுழற்சியை ஊக்குவிக்கிறது. இது இதயத்தைப் பாதுகாக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Black Chana Benefits: தினமும் மாலை ஒரு கப் கருப்பு கொண்டைக்கடலை சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா?

மூளை ஆரோக்கியத்திற்கு

வயதானவர்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக அல்சைமர் அல்லது லேசான அறிவாற்றல் குறைபாடு ஏற்படலாம். இதில் குறிப்பாக 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களில் அறிவாற்றல் குறைபாடு ஏற்படுகிறது. வயதான காலங்களில் ஏற்படும் அறிவாற்றல் குறைபாட்டைத் தவிர்க்க சீரான உணவை எடுத்துக் கொள்வது அவசியமாகும். இதற்கு அன்றாட உணவில் காளானை உண்ணலாம்.

முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு

காளான்களில் தாமிரம் ஏராளமாக நிறைந்துள்ளது. முடி ஆரோக்கியத்திற்குத் தேவையான கனிமங்களில் தாமிரமும் ஒன்றாகும். எனவே காளான்கள் போன்ற தாமிரச் சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது சருமத்தில் கொலாஜன் உற்பத்தி செய்ய உதவுகிறது. இளமை மற்றும் ஒளிரும் சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளதால் காளானை உட்கொள்ளலாம்.

அழற்சி எதிர்ப்புப் பண்புகள்

காளானில் அதிகளவிலான பீட்டா-குளூக்கோன்கள், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. நீரிழிவு, இதய நோய் போன்றவற்றைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க பீட்டா-குளுக்கோன்கள் உதவுகின்றன. கூடுதலாக, காளானில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள், வலி மற்றும் விறைப்புத் தன்மையைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Banana Stem Juice: சிறுநீரக கல் முதல் நீரிழிவு நோய்வரை அனைத்தையும் குணப்படுத்தும் வாழைத்தண்டு ஜூஸ்!

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

காளானில் உள்ள பீட்டா குளுக்கன் எனப்படும் நார்ச்சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், பீட்டா குளுக்கன் ஆனது அதிக கொழுப்பு சிகிச்சைக்காக மற்றும் சாத்தியமான புற்றுநோய் சிகிச்சைக்கு உதவுகிறது. காளான்களில் அதிகளவிலான செலினியம் நிறைந்துள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும், சளி மற்றும் காய்ச்சல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

மன ஆரோக்கியத்திற்கு

காளானில் வைட்டமின் பி6 ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை மூளை செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. காளானில் செரோடோனின் மற்றும் டிரிப்டோன் போன்றவை காணப்படுகிறது. இதில் மனநிலை, தூக்கம், பசி போன்றவற்றைக் கட்டுப்படுத்த செரடோனின் என்ற நரம்பியல் கடத்தி உதவுகிறது. மேலும், ஆரோக்கியமான மூளை செயல்பாட்டிற்கு டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உதவுகிறது. இதில் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற சாத்தியமான சிகிச்சைக்காக காளான்கள் உதவுகிறது. இவை மன அழுத்த எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது.

இது போன்ற பல்வேறு நன்மைகளைப் பெற தினந்தோறும் காளானை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Betel Leaves: வெற்றிலையை இப்படி சாப்பிட்டால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும்!

Image Source: Freepik

Read Next

​Papaya Benefits: குளிர்காலத்தில் பப்பாளி சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா?

Disclaimer