இன்றைய வேகமான வாழ்க்கை முறை காரணமாக ஆரோக்கியத்தை காப்பது கடினமாகிறது. ஆனால் எளிதில் கிடைக்கும் சில உணவுகளை தினமும் சாப்பிடுவதால் உடலை பாதுகாக்க முடியும். அப்படிப்பட்ட உணவில் முதலிடத்தில் இருப்பது தான் மஷ்ரூம்.
சத்துக்களால் நிரம்பிய இந்த சிறிய காய்கறி, உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, வைட்டமின் D, B-காம்ப்ளக்ஸ், ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் ஆகிய அனைத்தையும் கொண்டுள்ளது. இதன் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
Mushroom செய்யும் அற்புதங்கள்
மன ஆரோக்கியத்துக்கு மஷ்ரூம் அற்புதம்
மஷ்ரூமில் உள்ள எர்கோனின், ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் மூளை நரம்புகளை காப்பாற்றும், நினைவாற்றலை அதிகரிக்கும். மேலும் மன அழுத்தம் மற்றும் கவலையை குறைக்கும். அல்சைமர், பார்கின்சன் போன்ற மூளை நோய்களைத் தடுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதயம் பாதுகாப்பு – Cholesterol குறைக்கும்
மஷ்ரூம் குறைந்த கலோரி உணவு என்பதால், கொழுப்பை (Cholesterol) கட்டுப்படுத்தும் திறன் உண்டு. இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் காக்கும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.இதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் அபாயத்தை குறைக்க மஷ்ரூம் உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்: இருமடங்கு ஆரோக்கியம் வேண்டுமா? - காளான்களை இப்படி சமைத்து சாப்பிடுங்க...!
எடை இழப்புக்கு உதவும்
பொதுவாக Diet பின்பற்றுவோர் மஷ்ரூம் சூப் அல்லது சாலட் அதிகம் சாப்பிடுவார்கள். இதில் கலோரிகள் குறைவு. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வயிறு நிறைவாக உணர வைக்கும். ஜங்க் உணவுகளுக்கான ஆசையை குறைக்கும். இதனால் எடை குறைக்க விரும்புவோருக்கு இது சிறந்த உணவு.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
மஷ்ரூமில் உள்ள பாலிசாக்கரைட்ஸ் உடலின் பாதுகாப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது வைரஸ், பாக்டீரியா தாக்குதலைத் தடுக்கும். சளி, காய்ச்சல் விரைவில் குணமாகும். இது புற்றுநோய் செல்கள் பரவுவதை தடுக்கிறது என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
எலும்பு ஆரோக்கியம்
சூரிய ஒளி கிடைக்காதவர்களுக்கு வைட்டமின் D பற்றாக்குறை அதிகம். மஷ்ரூம் மட்டும் தான் இயற்கையாக வைட்டமின் D தரும் தாவர உணவு. எலும்பு மற்றும் பற்கள் வலுப்பெறும். மூட்டு வலி, எலும்பு முறிவு அபாயம் குறையும்.
அழகு கூடும்
மஷ்ரூமில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள், செலினியம் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. முகத்தில் பிரகாசம் தரும். கரும்புள்ளி, சுருக்கம் குறையும். முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
மஷ்ரூம் சாப்பிடும் சில எளிய வழிகள்
* மஷ்ரூம் சூப்
* மஷ்ரூம் பிரியாணி
* மஷ்ரூம் சாலட்
* மஷ்ரூம் கிரேவி
* மஷ்ரூம் ஸ்டிர் ஃப்ரை
இறுதிச் சொல்..
மஷ்ரூம் சின்ன காய்கறி என்றாலும், அது தரும் நன்மைகள் மிகப்பெரியது. மன நலம், உடல் வலிமை, இதய ஆரோக்கியம், எலும்பு வலிமை – அனைத்தையும் ஒரே நேரத்தில் பாதுகாக்கும் இயற்கை வரம் தான் மஷ்ரூம். எனவே, தினமும் மஷ்ரூம் சாப்பிடுங்க Buddy… உடம்பே சொல்லும் Thanks!