
Is it good to eat taro every day: அன்றாட உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றுடன் கிழங்கு வகைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கிழங்கு வகைகளைப் பொறுத்த வரை ஏராளமான வகைகள் உள்ளன. அதில் மக்கள் பொதுவாக உட்கொள்ளும் கிழங்கு வகைகளுள் ஒன்றாக சேப்பங்கிழங்கும் அடங்கும். இதை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துவது முதல் புற்றுநோய்களைத் தடுப்பது, தசை ஆரோக்கியத்திற்கு மற்றும் சரும ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
சேப்பங்கிழங்கு பற்றி தெரியுமா?
கோலோகேசியா எஸ்களுண்டா எனப்படும் சேப்பங்கிழங்கு, சேப்பஞ்செடியின் அடர்த்தியான கிழங்கு வகையாகும். தென்கிழக்கு மற்றும் தென்னிந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இந்த செடி உலகம் முழுவதும் பயிரிடப்படக்கூடியதாகும். இந்தச் செடியின் வேர்கள், இலைகள் மற்றும் தண்டடி கிழங்கு போன்ற அனைத்துமே உணவின் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சேப்பங்கிழங்கை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Panam Kizhangu Benefits: பனங்கிழங்கு உடம்புக்கு எவ்ளோ நல்லது தெரியுமா?
சேப்பங்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
ஹெல்த்லைன் தளத்தில் குறிப்பிட்டபடி, சேப்பங்கிழங்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. சேப்பங்கிழங்கில் வைட்டமின் பி6, சி, ஈ, பாஸ்பரஸ், ஃபோலேட், மக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், மாங்கனீசு, தாமிரம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இதில் புரதம், கலோரிகள், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை போன்றவை உள்ளது.
சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
எடையைக் குறைக்க
சேப்பங்கிழங்கு நார்ச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். இந்த நார்ச்சத்துக்கள் வயிறை முழுதாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது நாள் முழுவதும் உண்ணும் கலோரிகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. அதே சமயம், இதில் உள்ள எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்துக்கள் உடல் கொழுப்பு மற்றும் தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த
இது ஒரு மாவுச்சத்து நிறைந்த கிழங்கு வகையாக இருப்பினும், இதில் இரத்த சர்க்கரை மேலாண்மைக்கு உதவும் இரண்டு வகையான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. அவை நார்ச்சத்துக்கள் மற்றும் எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து ஆகும். இதில் நார்ச்சத்துக்கள், ஜீரணிக்க முடியாத ஒரு கார்போஹைட்ரேட் என்பதால், இது எளிதில் உறிஞ்சப்படாது. எனவே இது இரத்த சர்க்கரை அளவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இதய நோய் அபாயத்தைக் குறைக்க
சேப்பங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மற்றும் எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்துக்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஆராய்ச்சி ஒன்றில், அதிக நார்ச்சத்துக்களை எடுத்துக் கொள்பவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. மேலும் இவை கொழுப்பைக் குறைக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளது. இவை இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Sweet Potato In Diabetes: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாமா?
குடல் ஆரோக்கியத்திற்கு
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் நார்ச்சத்துக்கள் மற்றும் எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சாததால் இவை குடலிலேயே இருக்கும். இவை பெருங்குடலை அடையும் போது, குடலில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு உணவாக மாறி நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகின்றன.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க
சேப்பங்கிழங்கில் பாலிபினால்கள் எனப்படும் தாவர அடிப்படையிலான சேர்மங்கள் உள்ளது. இவை புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் திறன் உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதற்கு இதில் காணப்படும் முக்கிய பாலிஃபினால் குர்செடின் ஆகும். ஆய்வுகளில் குர்செடின் ஆனது புற்றுநோய் உயிரணு இறப்பைத் தூண்டும் மற்றும் பல வகையான புற்றுநோய்களின் வளர்ச்சியைக் குறைக்கும் என்பதைக் கண்டறிந்துள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு, உடலைப் புற்றுநோயுடன் தொடர்புடைய அதிகப்படியான ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Maravalli Kilangu Benefits: சர்க்கரை டூ எடையிழப்பு வரை: மரவள்ளி கிழங்கில் இத்தனை ரகசியம் மறைஞ்சியிருக்கா?
Image Source: Freepik
Read Next
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பனீர் சாப்பிடலாமா.? நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்..
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version