கிழங்கு என்பதாலேயே சமையலில் இருந்து பெரும்பாலும் ஒதுக்கப்படும் மரவள்ளி கிழங்கில் ஆச்சர்யமான பல ஆரோக்கிய நன்மைகள் மறைந்துள்ளன.
மரவள்ளி என்பது கிழங்கு குடும்பத்தைச் சேர்ந்த காய்கறி ஆகும். மிகச் சிலரே இதனைச் சமையலில் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். கலோரிகளும் அதிகம். இதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
மரவள்ளி கிழங்கில் உள்ள சத்துக்கள்:
மரவள்ளி கிழங்கில் கலோரிகள், புரதங்கள், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, இரும்பு, தியாமின், ஃபோலேட், வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம், நியாசின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது. இது கொலாஜன் உற்பத்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்து வளர்சிதை மாற்றத்திற்கும், உடல் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம்:
மரவள்ளி கிழங்கில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சோடியம் அளவை சமன் செய்கிறது.
எடை கட்டுப்பாடு:
உங்கள் எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால் இந்த உணவை எடுத்துக் கொள்ளலாம். இதில் கலோரிகள் அதிகம். ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஊக்குவிக்கும் நார்ச்சத்து மற்றும் எதிர்ப்பு மாவுச்சத்தை வழங்குகிறது.
குடலில் உள்ள நச்சுக்களை உறிஞ்சி செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இந்த கிழங்கை உட்கொள்வதால் பசி குறைகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது. இதனால் எடை குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரத்த சர்க்கரை:
மரவள்ளி கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். இதனுடன் உடல் பருமன், தொப்பை கொழுப்பு, சர்க்கரை மற்றும் இதய பிரச்சனைகள் குறையும். இதன் ஃபிளாவனாய்டுகள் ஃபைபர் மெட்டபாலிக் சிண்ட்ரோம் மற்றும் தொடர்புடைய பிரச்சனைகளை குறைக்கிறது.
ஒவ்வாமை:
உணவு ஒவ்வாமை உள்ளவர்கள், இந்த கிழங்கை சாப்பிட்டால் வீக்கம், வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் வரும். அப்படியானால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik