Maravalli Kilangu Vattilappam: சன்டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதில் வாரந்தோறும் புது புது ரெசிபிகளை செய்து கலக்கி வருகின்றனர். அதே போல இந்த சமையல் ரெசிபிகளைத் மக்கள் தங்களது வீடுகளிலும் செய்து மகிழ்வார்கள். அவ்வாறே, இந்த வார டாஸ்கில் மரவள்ளிக்கிழங்கை வைத்து மரவள்ளிக்கிழங்கு வட்டிலப்பம் தயாரிப்பு முறை குறித்து காணலாம். இதில் மரவள்ளிக்கிழங்கு வட்டிலப்பம் தயார் செய்வதற்கான தேவையான பொருள்கள் மற்றும் செய்முறையைக் காணலாம்.
மரவள்ளிக்கிழங்கு வட்டிலப்பம் தயார் செய்யும் முறை
தேவையானவை
- மரவள்ளிக்கிழங்கு - 1
- சர்க்கரை - 1 கப்
- முட்டை - 2
- கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்
- ஏலக்காய் பவுடர் - சிறிதளவு
இந்த பதிவும் உதவலாம்: CWC Priyanka Special: மாதம்பட்டியை வாயடைக்க வைத்த பிரியங்காவின் குட்டி வங்காய குரா!!
தயாரிக்கும் முறை
- மரவள்ளிக்கிழங்கு வட்டிலப்பம் தயாரிப்பதற்கு முதலில் சர்க்கரை கேரமல் தயாரிக்க வேண்டும்.
- முதலில் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து, அரை கப் அளவிலான சர்க்கரையை சேர்த்து மிதமான சூட்டில் வதக்க வேண்டும்.
- இதில் சர்க்கரையை நன்கு கிளற வேண்டும். இவ்வாறு கிளற சர்க்கரை உருகி நன்கு பாகு போல மாறி விடும்.
- குறைந்த தீயில் சர்க்கரையை கிளற கிளற நன்கு தேன் போன்ற பதத்திற்கு மாறும்.
- இவ்வாறு மாறிய பிறகு, வட்டிலப்பம் செய்யக் கூடிய கிண்ணம் இரண்டை எடுத்து அதில் இந்த கேரமல் சர்க்கரையை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

- பிறகு ரொம்ப பெரியதும் அல்லாமல், சிறியதும் அல்லாமல், நடுத்தர அளவிலான மரவள்ளிக்கிழங்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த கிழங்கின் மீது உள்ள தோல்களை நன்கு, சுத்தம் செய்து, மெலிதாக வத்தல் செய்வது போன்று சீவி எடுத்துக் கொள்ளலாம்.
- இவ்வாறு சீவி வைத்த மரவள்ளிக்கிழங்கை மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளலாம்.
- இந்த அரைத்து வைத்த மரவள்ளிக்கிழங்கு பேஸ்ட்டில் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு, இதில் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். கூடுதலாக அரை கப் அளவு சர்க்கரை மற்றும் வாசனைக்காக ஏலக்காய் பவுடரைச் சேர்த்துக் கொள்ளலாம்.
- பின் இவை அனைத்தையும் கட்டிகள் ஏதும் இல்லாமல் நன்கு கலக்க வேண்டும்.
- அதன் பின், இந்த கலவையை நாம் முன்னரே கேரமல் சர்க்கரை எடுத்து வைத்த கிண்ணத்தில் சேர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Buttermilk Recipe: ஆம்லா மோர் மசாலா ரெசிபி! பல பிரச்சனைகளுக்கு இந்த ஒரு ரெசிபி போதும்!
- பிறகு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். இட்லி பாத்திரத்தில் உள்ள தட்டில் கலவையை எடுத்து வைத்த கிண்ணங்களை வைத்துக் கொள்ளலாம்.
- வட்டிலப்பத்தில் தண்ணீர் புகாதவாறு இருக்க கிண்ணத்தை மூடி வைத்துக் கொள்ளலாம்.
- பிறகு மிதமான தீயில் அடுப்பை வைத்து, இதை அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
- அரை மணி நேரம் கழித்து, இட்லி நன்கு வேகவைக்கப்பட்டதா என்பதை சரிபார்ப்பதை போன்று இந்த வட்டிலப்பத்தையும் சரி பார்க்க வேண்டும்.
- இது நன்கு வேகவைப்பட்டது எனில், இதை தட்டு ஒன்றில் மாற்றி பரிமாறலாம்.
- இப்போது சூப்பரான மற்றும் சுவையான மரவள்ளிக்கிழங்கு வட்டிலப்பம் தயாராகி விட்டது.

மரவள்ளிக்கிழங்கு தரும் ஆரோக்கிய நன்மைகள்
உடல் ஆரோக்கியத்திற்கு மரவள்ளிக்கிழங்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
முடி உதிர்வைத் தடுக்க
இன்றைய நவீன கால வாழ்க்கை முறைகளால் இளம் வயதிலேயே பலரும் முடி சார்ந்த பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்றே இளம் வயதிலேயே வழுக்கை விழுவதாகும். இதற்கு மரவள்ளிக்கிழங்கு ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.
தலைவலியைத் தடுக்க
ஒற்றைத் தலைவலி மற்றும் சாதாரண தலைவலி இரண்டுக்குமே மரவள்ளிக்கிழங்கு மற்றும் அதன் இலைகள் உதவுகிறது. இவற்றை அப்படியே உண்ணலாம் அல்லது கழுவி அரைத்து சாறாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
கண் பார்வை மேம்பாட்டிற்கு
தினசரி உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை மரவள்ளிக்கிழங்கு தருகிறது. இதில் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைக்கிறது. அவ்வாறே கண் பார்வை மேம்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.
உடல் எடை குறைய
மரவள்ளிக்கிழங்கை அன்றாட உணவில் சரியான அளவில் சேர்த்துக் கொள்வது உடல் எடை குறைய உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடலிலிருந்து நச்சுக்களை உறிஞ்சி, செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது.
இவ்வாறு பல்வேறு வகையான பிரச்சனைகளிலிருந்து விடுபட மரவள்ளிக்கிழங்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Cauliflower Bajji Recipe: உங்க குழந்தைக்கு காலிஃபிளவர் பஜ்ஜி இப்படி செஞ்சி கொடுங்க!
Image Source: Freepik