Top Cooku Dupe Cooku Fefsi Vijayan Recipe: சன்டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதில் வாரந்தோறும் புது புது ரெசிபிகளை செய்து கலக்கி வருகின்றனர். அதே போல இந்த சமையல் ரெசிபிகளைத் மக்கள் தங்களது வீடுகளிலும் செய்து மகிழ்வார்கள்.
அவ்வாறே, இந்த வார டாஸ்கில் மீந்து போன அரிசியை வைத்து புது ரெசிபி தயார் செய்ய வேண்டும். அதன் படி, இந்த வாரம் ஸ்பெஷல் ரெசிபியாக பெப்சி விஜயன் செய்த மேங்கோ புட்டிங் மற்றும் அரிசி பூரி ரெசிபி தயார் செய்தார். இதில் அதை எவ்வாறு செய்வது என்பதைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Body Cleanse Drinks: நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்த இந்த ட்ரிங்ஸ் குடிங்க!
மேங்கோ புட்டிங் மற்றும் அரிசி பூரி தயார் செய்யும் முறை
மீந்து போன அரிசியில் அரிசி பூரி
தேவையானவை
- மீந்து போன அரிசி - 1 கப்
- ரவை - 2 டேபிள் ஸ்பூன்
- மைதா மாவு அல்லது கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
- முதலில் 1 கப் அளவிலான மீந்து போன சாப்பாட்டை எடுத்துக் கொண்டு, அதை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- இதில் ரவை, மைதா மாவு, சர்க்கரை மற்றும் உப்பு போன்றவற்றைச் சேர்த்துக் கலக்க வேண்டும்.
- இந்த கலவையை பூரி மாவு பதத்திற்கு சிறிது எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இதை 10 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.
- அதன் பிறகு வாணலி ஒன்றில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் பூரி வடிவத்தில் மாவைப் பிசைந்து தட்டி எண்ணெயில் போட்டு எடுத்துக் கொள்ளலாம்.

மீந்து போன அரிசியில் மேங்கோ புட்டிங்
தேவையானவை
- பழுத்த மாம்பழம் - 1
- பால் - 1 கப்
- மீந்து போன அரிசி
- சர்க்கரை - 5 முதல் 6 டீஸ்பூன்
இந்த பதிவும் உதவலாம்: Nattu Kozhi Getti Kulambu: மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் நாட்டு கோழி கெட்டி குழம்பு..
செய்முறை
- முதலில் பழுத்த மாம்பழத்தை எடுத்துக் கொண்டு அதை நறுக்கி மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு வாணலி ஒன்றை எடுத்து அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் இதில் மீந்து போன அரிசி மற்றும் சர்க்கரையைச் சேர்த்து கொதிக்க வைக்கலாம்.
- அதன் பிறகு அடுப்பை அணைத்து அரைத்து வைத்த மாம்பழத்தைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- பின் இதை குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்து பிறகு எடுத்து விடலாம்.
- இந்த மேங்கோ புட்டிங்கில் முந்திரி, பாதாம் பருப்பு போன்ற நட்ஸ் வகைகளைச் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

மீந்து போன சாதம் தரும் நன்மைகள்
மீந்து போன சாதத்தில் கால்சியம், சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் அரிதான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் பி6 மற்றும் பி12 போன்றவை காணப்படுகிறது. இந்த சாதத்தில் உருவாகும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பல்வேறு நோயெதிர்ப்புப் பண்புகளையும் தருகிறது.
இந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்வது மலச்சிக்கல் பிரச்சனை, உடல் சோர்வு மற்றும் குடலழற்சி நோய்க்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Gilli Chicken Biryani: விடிவி கணேஷ் இப்படி தான் கில்லி சிக்கன் பிரியாணி செஞ்சாரு..
Image Source: Freepik