Mango Face Mask: ஸ்கின் ரொம்ப பளபளப்பா இருக்க மேங்கோ ஃபேஸ் பேக் யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Mango Face Mask: ஸ்கின் ரொம்ப பளபளப்பா இருக்க மேங்கோ ஃபேஸ் பேக் யூஸ் பண்ணுங்க


How To Make Mango Face Mask: கோடைக்காலத்தில் பலரும் விரும்பி எடுத்துக் கொள்ளக்கூடிய பழங்களில் ஒன்று மாம்பழம் ஆகும். இது சுவையுடன் கூடிய உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். பெரும்பாலான சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் வகையில் மாம்பழ ஃபேஸ் பேக் அமைகிறது. எனவே இந்த கோடைக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் மாம்பழ ஃபேஸ்பேக் குறித்து காணலாம்.

கோடைக்காலம் என்றாலே கொழுத்தும் வெயிலில் உடல் நீரிழப்பு ஏற்படுவதுடன், சருமத்திலும் பல்வேறு பிரச்சனைகள் எழும். இந்த காலகட்டத்தில் நீரிழப்பால் சருமம் வறண்டு போகுதல், சரும எரிச்சல் மற்றும் இன்னும் சில பிரச்சனைகள் ஏற்படலாம். இதற்கு மாம்பழ ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவது சிறந்த தீர்வைத் தருவதாக நம்பப்படுகிறது. இதில் சரும பராமரிப்பு வழக்கத்தில் மாம்பழ ஃபேஸ்பேக் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Flaxseed Gel: கரும்புள்ளிகளை விரைவில் மறைக்கும் ஆளி விதை ஜெல்! ஈஸியா தயார் செய்ய இந்த இரண்டு பொருள் போதும்

சரும பொலிவைத் தரும் மாம்பழ ஃபேஸ் பேக்குகள்

சில இயற்கையான வீட்டு வைத்திய முறைகளைக் கையாள்வதன் மூலம் மாம்பழ ஃபேஸ் பேக்குகளை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

மாம்பழம், தேன் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்

தேவையானவை

  • பழுத்த மாம்பழக் கூழ் - 2 தேக்கரண்டி
  • ஓட்ஸ் - 1 தேக்கரண்டி
  • தேன் - சிறிதளவு

செய்முறை

  • முதலில் ஓட்மீலை நன்றாக பொடியாகும் வரை கலக்க வேண்டும்.
  • இதில் தேன் மற்றும் மாம்பழக்கூழ் சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும்.
  • இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி, வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
  • இதை 20 நிமிடங்கள் வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இந்த மாம்பழ ஃபேஸ் பேக் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. இது எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றுவதுடன், முகப்பரு மற்றும் கறைகளைக் குறைக்க உதவுகிறது.

மாம்பழம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

தேவையானவை

  • பழுத்த மாம்பழக் கூழ் - 2 தேக்கரண்டி
  • பச்சை தேன் - 1 தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் கிண்ணம் ஒன்றில் மாம்பழக் கூழை தேனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
  • பின் இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும்.
  • அதன் பிறகு தண்ணீரில் கழுவி விடலாம்.
  • இது சருமத்திற்கு மென்மையான அமைப்பு மற்றும் பளபளப்பான சருமத்தைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Amla Powder For Skin: குறைந்த நேரத்தில் சருமத்தைப் பொலிவாக்கும் ஆம்லா பவுடர்! இப்படி யூஸ் பண்ணி பாருங்க

மாம்பழம் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

தேவையானவை

  • பழுத்த மாம்பழக் கூழ் - 2 தேக்கரண்டி
  • பாதாம் எண்ணெய் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை

  • பாத்திரம் ஒன்றில் பாதாம் எண்ணெயுடன் மஞ்சள் தூள் மற்றும் மாம்பழக் கூழ் சேர்க்க வேண்டும்.
  • இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள் வைத்து பின் தண்ணீரில் கழுவ வேண்டும்.
  • இது எரிச்சலூட்டும் சருமத்தை குளிர்ச்சியாக வைக்கவும், ஆரோக்கியமான நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

மாம்பழம், சியாவிதைகள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

தேவையானவை

  • பழுத்த மாம்பழக் கூழ் - 2 தேக்கரண்டி
  • வெற்று தயிர் - 1 தேக்கரண்டி
  • சியா விதைகள் - 1 தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் பாத்திரம் ஒன்றில் பழுத்த மாம்பழக் கூழ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு, இந்த பிசைந்த மாம்பழத்தில் தயிர் மற்றும் சியா விதைகளைச் சேர்த்து, மென்மையான கலவையைக் கிடைக்கும் வரை நன்கு கலக்க வேண்டும்.
  • இந்த மாம்பழ ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளலாம்.
  • இதை 15 முதல் 20 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவிக் கொள்ளலாம்.

இவ்வாறு சருமத்தைப் பாதுகாக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த மாம்பழ ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே தயார் செய்யலாம். சில நேரங்களில் இந்த வீட்டு வைத்தியம் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். எனவே, இந்த மாம்பழ ஃபேஸ் பேக் பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ் செய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Ghee Benefits for Skin: உங்க முகம் ஒரே வாரத்தில் வெள்ளையாகணுமா? நெய்யை இப்படி யூஸ் பண்ணுங்க!

Image Source: Freepik

Read Next

Facial Hair Removal: முகத்தில் இருக்கும் முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்.!

Disclaimer