பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம் மிகவும் விரும்பப்படும் பழங்களில் ஒன்றாகும். விரைவில் கோடை காலம் வரவுள்ளது, இதே சீசனில் தான் எல்லா இடங்களிலும் குறைந்த விலையில் மாம்பழங்கள் கிடைக்கும். மாம்பழங்கள் இவ்வளவு குறைந்த விலைக்கு விற்கும் போது கண்டிப்பாக வாங்குவோம். நீங்கள் மாம்பழ பிரியர் என்றால், மாம்பழங்கள் உங்கள் அழகை எவ்வாறு மேம்படுத்தும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைப்பது போல, சரும நன்மைகளையும் தருகிறது.
நீங்கள் முகப்பரு மற்றும் கரும்புள்ளி பிரச்சனைகளுக்கு ஆளானால், மாம்பழத்தை கொண்டு உங்கள் சருமத்தை பராமரிக்கலாம். பல்வேறு சரும பிரச்சனைகளை நீக்க மாம்பழத்தைக் கொண்டு விதவிதமாக ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி என பார்க்கலாம்…
முகப்பரு பிரச்சனைக்கு மாம்பழம்:
மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. இது சருமத்தில் ஏற்படக்கூடிய முகப்பரு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கிறது. மேலும் இதனை சருமத்திற்கு ஆரோக்கியத்திற்கு தரக்கூடிய தேனுடன் கலக்கும் போது, டபுள் பலன்களை அனுபவிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
- மாங்காய் கூழ் - 4 டீஸ்பூன்
- தேன் - 2 டீஸ்பூன்
- பாதாம் எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பது எப்படி?
- ஒரு பாத்திரத்தில் மாங்காய் கூழ், மஞ்சள் தூள், தேன், பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
- இந்த பொருட்களை நன்றாக கலக்கவும்.
- பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற விடவும்.
- பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
பிளாக்ஹெட் ரிமூவராக மாறும் மாம்பழம்:
மாம்பழத்தில் அழகு சாதனப் பொருட்களில் காணப்படும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் உள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த மாம்பழம் அரிசி மாவுடன் கலந்து சருமத்தில் அப்ளே செய்தால், துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, இறந்த சரும செல்களை அகற்றுகிறது.
தேவையான பொருட்கள்:
- மாங்காய் கூழ் - 1 டீஸ்பூன்
- தேன் - 1 டீஸ்பூன்
- அரிசி மாவு - 1 டீஸ்பூன்
- பால் - 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
- ஒரு பாத்திரத்தில் மாம்பழக் கூழ், தேன், அரிசி மாவு மற்றும் பால் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
- பின் அதனை நன்கு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற விடவும்.
- பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி, மெதுவாக துடைக்கவும்.

எண்ணெய் சருமத்திற்கு மாம்பழம்+முல்தானி மெட்டி மாஸ்க்:
உங்கள் முகம் மந்தமாகவும் எண்ணெய் பசையாகவும் உள்ளதா? அதனை பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் மாற்ற முல்தானி மெட்டியுடன் மாம்பழத்தைப் பயன்படுத்துங்கள். இது சருமத்தில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தி முகப்பரு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
தேவையான பொருட்கள்
- மாம்பழக் கூழ் - 2 டீஸ்பூன்
- முல்தானி மெட்டி - 1 டீஸ்பூன்
- தயிர் - 1 டீஸ்பூன்
- பால் - 1/4 கப்
எப்படி பயன்படுத்துவது?
- ஒரு பாத்திரத்தில் மாம்பழ கூழ், முல்தானி மெட்டி, தயிர் மற்றும் பால் ஆகியவற்றைக் கலக்கவும்.
- பின் முகத்தை நன்கு கழுவி உலர்த்தி, தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
Image Source: Freepik