கசகசாவில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் அதனை சருமத்தின் மீது பயன்படுத்தினால் என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என உங்களுக்குத் தெரியுமா?. ஆம், கசகசா பல்வேறு சரும பிரச்சனைகளை எதிர்த்து போராடி, உங்கள் சருமத்தை தெளிவாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.
சருமத்தில் வெடிப்பு, வீக்கம், கறைகள் ஆகியவற்றை நீக்க முயற்சித்துக்கொண்டிருந்தால், ஒரு கைப்பிடி கசகசாவை எடுத்துக் கொள்ளுங்கள்.
முக்கிய கட்டுரைகள்
கறைகளை நீக்க இது உதவும்:

தயிர் உடன் கசகசாவை கலந்து ஸ்க்ரப் தயாரிக்கலாம். இதனை உங்கள் சருமத்தின் மீது மெதுவாக தடவி, மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிட மசாஜுக்குப் பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஜொலி,ஜொலிப்பதை நீங்களே கண்கூடாகப் பார்க்கலாம்.
வறண்ட சரும பிரச்சனைகளை சமாளிக்க:
வறண்ட சருமம் சருமத்தின் பிரகாசத்தையும், அழகையும் இழக்கச் செய்கிறது. குழந்தைகளின் தளிர் சருமத்தைப் போல் மென்மையான ஸ்கின் வேண்டுமென ஆசைப்பட்டால், அதற்கான தீர்வும் கசகசாவிடம் உள்ளது.
கசகசாவை பால் மற்றும் தேன் சேர்த்து அரைத்து வறண்ட சருமத்தில் தடவவும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ச்சியான நீரால் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தாலே போதும், சருமம் நன்றாக நீரேற்றம் பெற்று பளபளப்புடன் இருக்கும்.
எக்ஸிமாவிற்கு கசகசாவிடம் தீர்வு உண்டா?
லினோலிக் அமிலம் கொண்ட பாப்பி விதைகள் உங்கள் சருமத்தை வலுப்படுத்தவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
கசகசாவை பால் அல்லது தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் அவற்றை சிறிது எலுமிச்சை சாறுடன் அரைத்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். இப்போது இதை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவினால் அரிப்பு, வீக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வலி குறையும். இந்த பேஸ்ட் தீக்காயங்களுக்கு உதவும்.
வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான கசகசா ஃபேஸ் பேக்குகள்:
- ஒரு டீஸ்பூன் கசகசா பவுடருடன் ஒரு டீஸ்பூன்கற்றாழை ஜெல்லைக் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் 15 நிமிடங்கள் தடவி, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- ஒரு டீஸ்பூன்கசகசா தூள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு துளி தேன் கலந்து கொள்ளவும். இதை உங்கள் முகத்தில் 10 நிமிடங்கள் தடவி, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- தேன் மற்றும் கசகசா விதைகள் இரண்டு பொருட்களையும் நன்கு கலக்கவும், இதனை உங்கள் முகத்தில் 15 நிமிடங்கள் தடவ வேண்டும்.
- ஒரு கப் தூள் ஓட்ஸ், அரை ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் கசகசா பொடி சேர்த்து கலக்கவும். இதை உங்கள் முகத்தில் 10 நிமிடங்கள் தடவ வேண்டும்.
- அரை கப் மசித்த ஸ்ட்ராபெர்ரி, சில துளிகள் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் ஊறவைத்த கசகசா விழுதை எடுத்துக் கொள்ளவும். இவற்றை நன்றாக கலந்து, முகத்தில் அப்ளே செய்து 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
- ஒரு டீஸ்பூன் கசகசா தூள் மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
Image Source: Freepik