ஆண்கள் கட்டாயம் கசகசாவை உணவில் சேர்க்க வேண்டும்.. ஏன் தெரியுமா?

Benefits of poppy seeds for male: ஆண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வரிசையில் கசகசா விதைகளும் அடங்கும். இது ஆண்களின் கருவுறுதல் பிரச்சனைகளைக் குறைப்பதில் இருந்து விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துவது வரை பல நன்மைகளைத் தருகிறது. இதில் ஆண்களுக்குக் கசகசா விதைகள் தரும் நன்மைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
ஆண்கள் கட்டாயம் கசகசாவை உணவில் சேர்க்க வேண்டும்.. ஏன் தெரியுமா?

Poppy seeds benefits for male: அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், பானங்கள், நட்ஸ், விதைகள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த வரிசையில் நம் அன்றாட உணவில் சேர்க்கும் கசகசா விதைகள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இது பல்வேறு மகத்தான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. கசகசாவை அன்றாட உணவில் சேர்ப்பது செரிமான அமைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. மேலும் இது உடலில் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

குறிப்பாக, ஆண்கள் கசகசாவை தங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது அவசியமானதாகக் கருதப்படுகிறது. ஆம். உண்மையில், கசகசா சாப்பிடுவது ஆண்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். மேலும், கசகசாவில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் துத்தநாகம் என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடல் ஆரோக்கியத்தை நன்கு பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் ஆண்களுக்கு கசகசா விதைகள் எவ்வாறு நன்மை பயக்கும் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Kasakasa Benefits: குட்டியூண்டு கசகசாவில் இவ்வளவு அற்புதங்கள் இருக்கிறதா?!

ஆண்கள் கசகசா விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்த

சில சமயங்களில் கசகசா விதைகளில் உள்ள பொருட்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. எனினும், கசகசா சாப்பிடுவது விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்துகிறது என்பதற்கு எந்த அறிவியல் சான்றுகளும் இல்லை. கசகசாவில் லிக்னின் மற்றும் துத்தநாகம் உள்ளது. இவை விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தவும், பாலியல் செயல்திறனை மேம்படுத்தவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.

image
What-are-the-health-benefits-of-poppy-seeds-1730437138668.jpg

கருவுறுதலை அதிகரிக்க

பெரும்பாலான ஆண்களுக்கு பல்வேறு காரணங்களால் மலட்டுத்தன்மை பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது போன்ற சூழ்நிலையில், ஆண்கள் தங்களது வழக்கமான உணவில் கசகசாவைச் சேர்க்கலாம். கசகசா விதைகளில் துத்தநாகம் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை மலட்டுத்தன்மையை மேம்படுத்த உதவுகின்றன. எனவே கருவுறுதலை மேம்படுத்துவதில் கசகசா எண்ணெய் ஒரு பயனுள்ள நுட்பமாக அமைகிறது. இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் கருவுறுதலை மேம்படுத்தலாம்.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்த

கசகசா விதைகள் நல்ல மன ஆரோக்கியத்தைப் பராமரிக்க பெரிதும் நன்மை பயக்கும். இதை உட்கொள்வது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைத்து மூளையை தளர்த்த உதவுகிறது. மேலும் கசகசாவை சாப்பிடுவது அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இவை மூளை சிறப்பாக செயல்பட வழிவகுக்கிறது.

எலும்பு ஆரோக்கியத்திற்கு

கசகசா விதைகளில் காப்பர் கால்சியம் உள்ளது. இவை எலும்பு பலவீனத்தைத் தடுத்து, எலும்பை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க உதவுகிறது. இதனுடன், இதில் காணப்படும் பாஸ்பரஸ், மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் எலும்புகளில் சேதம் உண்டாகாமல் பாதுகாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Kasa Kasa Benefits: கசகசாவை உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? 

தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை நீக்க

கசகசா விதைகளைச் சாப்பிடுவது தூக்கம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க உதவுகின்றன. இதை உட்கொள்வது மூளையை தளர்த்தி மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது உடல் சோர்வைக் குறைப்பது மட்டுமல்லாமல் நல்ல தூக்கத்தை அளிக்கவும் உதவுகிறது. இது லிபிடோ அல்லது பாலியல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது. இதை உட்கொள்வது அல்லது ஒரு கசகசா பானம் தயார் செய்து குடிப்பது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

இவ்வாறு ஆண்கள் தங்களது அன்றாட உணவில் கசகசாவைச் சேர்ப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.

image
lack-of-deep-sleep-1732796495785.jpg

கசகசாவை சாப்பிடும் முறை

அன்றாட உணவில் கசகசாவை பல வழிகளில் சேர்க்கலாம்.

  • கசகசாவை நேரடியாகவோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம்.
  • இதை சூடான அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
  • கசகசாவை பாலில் கலந்து குடிக்கும் போது தூக்கமின்மை பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கிறது.
  • கசகசாவை தண்ணீரில் ஊறவைப்பது அல்லது காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Kasa Kasa Benefits: தினமும் ஒரு ஸ்பூன் கசகசாவை உணவில் சேர்த்தால்... என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

அப்பா ஆவதே ஆபத்தாகிடும்... ஆண் மலட்டுத்தன்மையை தவிர்க்க 3 விஷயங்கள உடனே நிறுத்துங்க...!

Disclaimer