Ways To Use Amla Powder For Skin: இந்திய நெல்லிக்காய் என்றழைக்கப்படும் ஆம்லாவில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. உச்சி முதல் பாதம் வரை பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் விதமாக ஆம்லா அமைகிறது. அந்த வகையில் சரும பராமரிப்பிலும் ஆம்லா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆம்லாவில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், சருமத்தை பல பிரச்சனைகளில் இருந்து விடுவிக்க உதவுகிறது.
இது தவிர, ஆம்லா ஆக்ஸிஜனேற்ற கூறுகளின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இது பல சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கிறது. அதே சமயம், ஆம்லாவை சரும பராமரிப்பில் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். அதன் படி, ஆம்லாவைக் கொண்டு தயார் செய்யப்படும் ஆம்லா பவுடர் சருமத்திற்கு சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. இதில் சருமத்திற்கு ஆம்லா பவுடரை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Ginseng For Skin: அடடே! கொரிய பெண்களின் அழகு ரகசியத்துக்கு இந்த ஒற்றை மூலிகை தான் காரணமா?
சருமத்திற்கு ஆம்லா பவுடர் பயன்படுத்தும் முறை
ஆம்லா பவுடர் மற்றும் மஞ்சள் தூள்
ஆம்லா, மஞ்சள் இரண்டுமே மருத்துவ குணங்கள் வாய்ந்த சிறந்த சரும பராமரிப்பு பொருளாகும். இந்த கலவை தயார் செய்ய ஒரு ஸ்பூன் ஆம்லா பவுடரில், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டை தயார் செய்ய வேண்டும். இந்த பேஸ்ட்டை சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். பிறகு தயாரிக்கப்பட்ட கலவையை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், பல சரும பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
கடலை மாவு மற்றும் ஆம்லா பவுடர்
இந்தக் கலவையை செய்ய, ரோஸ் வாட்டர், கடலை மாவு மற்றும் ஆம்லா பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது பாத்திரம் ஒன்றில், நெல்லிக்காய் தூள், கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டரைக் கலந்து, கலவையை முகத்தில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை தடவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் இருமுறை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வது, சருமத்தின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், சருமத்தைப் பொலிவாக வைக்க உதவுகிறது.
நெல்லிக்காய் தூள் மற்றும் தயிர்
முதலில் ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் தூள் சேர்த்து, அதில் சில துளிகள் தயிர் மற்றும் தேன் கலந்து, கலவையை சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். இப்போது சுத்தமான நீரில் முகத்தை சுத்தம் செய்து, பின் கலவையை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு 15 முதல் 20 நிமிடங்கள் வரை தடவ வேண்டும். பின் சாதாரண நீரில் கழுவலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சருமம் பொலிவுடன் காணப்படும்.
இந்த பதிவும் உதவலாம்: Besan Face Packs: நீங்க ஒரே வாரத்தில் வெள்ளையாகணுமா? கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!
கற்றாழை ஜெல் மற்றும் ஆம்லா பவுடர்
ஆம்லா தூள் மற்றும் கற்றாழை ஜெல் கலவை சருமத்திற்கு மிகவும் சிறந்த நன்மை பயக்கும். இதற்கு பாத்திரம் ஒன்றில் கற்றாழை ஜெல்லில் ஆம்லா தூள் மற்றும் தண்ணீரை கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும். இதை 15 முதல் 20 நிமிடங்கள் வைத்து பின் முகத்தை கழுவலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இறந்த சருமத்திலிருந்து விடுபட முடியும்.
முல்தானி மிட்டி மற்றும் ஆம்லா தூள்
இந்த கலவை தயார் செய்வதற்கு முல்தானி மிட்டி, ஆம்லா தூள் உடன் பப்பாளி கூழ் மற்றும் ரோஸ் வாட்டரைச் சேர்க்க வேண்டும். இப்போது பாத்திரம் ஒன்றில் பப்பாளி கூழில் முல்தானி மிட்டி, நெல்லிக்காய் தூள் மற்றும் ரோஸ் வாட்டரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். இந்த கலவையை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான சருமத்தையும், தோலில் தழும்புகளை மறைய வைக்கவும் முடியும்.
ஆம்லா பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர்
இந்த பேஸ்ட் தயார் செய்ய ஆம்லா தூள் மற்றும் ரோஸ் வாட்டரை எடுத்துக் கொள்ளலாம். இப்போது பாத்திரம் ஒன்றில் ஆம்லா பவுடரில் சில துளிகள் ரோஸ் வாட்டரைச் சேர்த்து இந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். இதை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். அதன் பிறகு சாதாரண நீரில் கழுவி விடலாம். இவ்வாறு செய்வது முகத்தின் நிறத்தை மாற்றும்.
ஆம்லா பவுடரைக் கொண்டு இந்த கலவைகளை தயார் செய்து சருமத்திற்கு பயன்படுத்துவது பல தோல் பிரச்சனைகளை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், சருமம் உணர்திறன்மிக்கதென்பதால், சருமத்திற்குப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Ice Facial Benefits: வெயில் காலத்தில் சருமம் ஜில்லுனு இருக்க ஐஸ் ஃபேஷியல் செய்யுங்க
Image Source: Freepik