$
Benefits Of Applying Beetroot On Face And How To Use It: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். போதுமான ஊட்டச்சத்து மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததன் காரணமாக, சருமத்தில் வறட்சி, எரிச்சல், பருக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். இதனைத் தவிர்க்க சிலர் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை சில சமயங்களில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம்.
எனவே இதற்கு ஒரு சிறந்த வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம். அதன் படி, சரும பராமரிப்பில் பீட்ரூட் ஒரு சிறந்த இயற்கையான தேர்வாக அமைகிறது. இது அதன் துடிப்பான நிறம் மற்றும் ஊட்டச்சத்து மதிப்புக்காக நன்கு அறியப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்துவதற்கான இயற்கையான மற்றும் பயனுள்ளதாக அமைகிறது. இதனை சமையலுக்கு மட்டுமல்லாமல், சரும பராமரிப்பு வழக்கத்தில் இணைத்துக் கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் சரும பராமரிப்பில் பீட்ரூட் பயன்படுத்துவதன் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Hemp Seed Oil: பளபளப்பான சருமத்திற்கு சணல் விதை எண்ணெய் தரும் மகிமைகள்!
பீட்ரூட்டின் ஊட்டச்சத்துக்கள்
பீட்ரூட்டில் இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, நார்ச்சத்து, போலேட், வைட்டமின் பி, சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலின் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், வெளிப்புற சருமத்திற்கும் பீட்ரூட் அழகு சேர்க்கக் கூடியதாக அமைகிறது. இந்த பீட்ரூட்டை உட்கொள்வதுடன், பல்வேறு வழிகளில் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தைப் பாதுகாக்கலாம்.

சருமத்திற்கு பீட்ரூட் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
சருமத்தை பிரகாசமாக்க
பீட்ரூட்டில் உள்ள இயற்கையான நிறமிகள் சருமத்தின் நிறத்தை சமன் செய்ய உதவுகிறது. இதன் ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளின் தோற்றத்தைக் குறைத்து பளிச்சென்ற நிறத்திற்கு உதவுகிறது. இவை முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், சருமத்தை மென்மையாக வைக்கவும் உதவுகிறது.
வறண்ட சருமத்திற்கு
பீட்ரூட் அதிக நீர்ச்சத்து நிறைந்ததாகும். இவை சருமத்தை மென்மையாக மற்றும் மிருதுவாக மாற்றுவதற்கு உதவுகிறது. இவை சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும் அரிப்புகளை சமாளிக்கவும் சிறந்த வழியாக அமைகிறது. இதில் கூடுதலாக பீட்ரூட் சாற்றுடன் சம அளவு தேன், பால் சேர்த்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுவது, அதை உலர வைப்பது, சருமத்தை நீண்ட நேரம் ஈரப்பதமாக வைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Sunscreen Benefits: சருமத்திற்கு சன்ஸ்கிரீன் கண்டிப்பா தேவை! ஏன் தெரியுமா?
பருக்களை எதிர்த்துப் போராட
சருமத்திற்கு பீட்ரூட் சாறு பயன்படுத்துவது முகப்பரு மற்றும் பருக்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்களிக்கிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றவும், உணர்திறன் அல்லது முகப்பரு பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
முதுமையைத் தவிர்க்க
பீட்ரூட்டில் வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை சருமத்தை பளபளப்பாக வைப்பதுடன், முன்கூட்டிய வயதாவதைத் தடுக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தை இளமையாக மற்றும் பொலிவாக வைக்கிறது.

நச்சுக்களை நீக்க
பீட்ரூட்டில் நிறைந்திருக்கும் நச்சு நீக்கும் பண்புகள், சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி தெளிவான நிறத்தை ஊக்குவிக்கிறது. மேலும் சருமத்தில் காணப்படும் வெடிப்புகளைத் தடுக்கிறது.
கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்க
பீட்ரூட்டில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை கொலாஜன் தொகுப்பைத் தூண்டுகிறது. இவை சருமத்தில் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதுடன் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Glowing Skin Tips: சருமம் ரோஸ் கலரில் ஜொலிக்க வேண்டுமா? வீட்டுலயே இதை செய்யுங்க!
சருமத்திற்கு பீட்ரூட் பயன்படுத்தும் முறைகள்
சருமப் பொலிவை மேம்படுத்தவும், பல்வேறு சரும பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் சருமத்திற்கு பீட்ரூட்டைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.
பீட்ரூட் உட்செலுத்தப்பட்ட எண்ணெய்
இதைத் தயார் செய்வதற்கு, பிடித்த கேரியர் எண்ணெயுடன் பீட்ரூட் துண்டுகளை உட்செலுத்தி சில வாரங்களுக்கு அப்படியே வைக்க வேண்டும். பின் இந்த எண்ணெயை மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்தலாம் அல்லது குளியலில் சில துளிகள் சேர்க்கலாம். இவை சருமத்தை ஊட்டமளிப்பதுடன் மென்மையான சருமத்திற்கு உதவுகிறது.
பீட்ரூட் ஃபேஸ் மாஸ்க்
பீட்ரூட்டை அரைத்து அல்லது தயிர் போன்ற பொருள்களுடன் சேர்த்து பேஸ்ட் தயாரித்து பீட்ரூட் ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். இவை சருமத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. இதை 15-20 நிமிடங்கள் வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

பீட்ரூட் ஜூஸ் டோனர்
இந்த டோனர் தயார் செய்ய கற்றாழை சாறு, பீட்ரூட் சாறு மற்றும் தண்ணீர் போன்றவற்றை சம பாகங்களாக கலந்து கொள்ள வேண்டும். இதை சுத்தப்படுத்திய பிறகு காட்டன் பஞ்சு மூலம் முகத்தில் தடவ வேண்டும். பீட்ரூட்டின் இந்த டோனர் சருமத்தின் துளைகளை இறுக்கவும், pH அளவை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.
இந்த வழிகளில் சருமத்திற்கு பீட்ரூட்டை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை மென்மையாக மற்றும் பளபளப்பாக வைத்திருக்க முடியும். எனினும், எந்தவொரு புதிய தோல் பராமரிப்பு மூலப்பொருளையும், பயன்படுத்தும் முன்னதாக பேட்ச் டெஸ்ட் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Beetroot Face Mask: ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க பீட்ரூட்யை இப்படி பயன்படுத்துங்க!
Image Source: Freepik