Glowing Skin Tips: சருமம் ரோஸ் கலரில் ஜொலிக்க வேண்டுமா? வீட்டுலயே இதை செய்யுங்க!

  • SHARE
  • FOLLOW
Glowing Skin Tips: சருமம் ரோஸ் கலரில் ஜொலிக்க வேண்டுமா? வீட்டுலயே இதை செய்யுங்க!


Glowing Skin Tips: குளிர்காலம் என்றால் சருமம் வறண்டு வெடிப்பு ஏற்படுவது இயற்கை. குளிர்காலத்தில் சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்க பல வகையான கிரீம்கள், லோஷன்கள், பேக்குகள் மற்றும் பல வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும், இது தோலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உறுதியுடன் சொல்ல முடியாது.

பொதுவாக சருமம் பொலிவு பெற விரும்பினால் அதற்கான நடவடிக்கைகளை வெயில் காலத்தில் எடுப்பதை விட குளிர் காலத்தில் எடுத்தால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும். ஆனால் இதற்கு எந்த வழிமுறைகளை கையாளுகிறோம் என்பது மிக முக்கியம். சில சமயங்களில் சந்தையில் கிடைக்கும் கிரீம்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்களில் உள்ள ரசாயனங்களால் சருமம் சேதமடைய செய்யலாம். சரி, இதற்கு தீர்வு தான் என்ன என்று சிந்திக்கிறீர்களா?

உணவில் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது போலவே சருமத்திற்கும் இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டியது முக்கியம். குளிர்காலத்தில் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது அவசியம். அதோடு குளிர்காலத்தில் இந்த பொருட்களை பயன்படுத்தினால் முகம் ரோஜாப்பூ போல ஜொலிக்கும்.

ஆம், நாம் பேசிக் கொண்டிருக்கும் அந்த பொருள் பீட்ரூட் குறித்து தான். பீட்ரூட்டில் இருந்து மாய்ஸ்சரைசரை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

பீட்ரூட் மாய்ஸ்சரைசர் செய்ய தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 1 பெரிய துண்டு

வைட்டமின் ஈ காப்ஸ்யூல் ஜெல் - 2 தேக்கரண்டி

பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

அலோவேரா ஜெல் - 2 தேக்கரண்டி

பீட்ரூட்டில் இருந்து மாய்ஸ்சரைசர் கிரீம் செய்வது எப்படி?

முதலில், பீட்ரூட்டை நன்கு கழுவி, மேல் அடுக்கை உரிக்கவும்.

இப்போது இந்த பீட்ரூட்டை நன்காக துருவிக் கொள்ளவும்.

இப்போது துருவிய பீட்ரூட்டை ஒரு காட்டன் துணியில் போட்டு அதன் சாற்றை எடுக்கவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஜெல் மற்றும் அலோ வேரா ஜெல் சேர்க்கவும்.

வெள்ளை நிற கிரீம் உருவாகும், இந்த கலவையை நன்கு கலக்கவும்.

இதன்பின், வெள்ளை க்ரீமில் பீட்ரூட் சாற்றைக் கலக்கவும்.

அவ்வளவு தான் உங்கள் பீட்ரூட் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த தயாராகிவிட்டது.

நீங்கள் இதை 15-20 நாட்களுக்கு காற்று புகாத கொள்கலனில் சேமித்து பயன்படுத்தலாம்.

பீட்ரூட் மாய்ஸ்சரைசரை எவ்வாறு பயன்படுத்துவது?

பீட்ரூட்டில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மாய்ஸ்சரைசர் பயன்படுத்த மிகவும் எளிதானது. உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவிய பின் அதை தடவலாம். இந்த கிரீம் முகத்தில் தடவும்போது, ​​வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும்.

இவ்வாறு செய்வதால், முகத்தில் ரோஜாப் பொலிவு ஏற்பட்டு, உங்கள் சருமம் பொலிவோடு இருக்கும். நீங்கள் விரும்பினால், பீட்ரூட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட மாய்ஸ்சரைசரை நைட் க்ரீமாகவும் பயன்படுத்தலாம்.

பீட்ரூட் ஃபேஸ் பேக் நன்மைகள் என்ன?

பீட்ரூட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சரும செல்களைப் பாதுகாக்கிறது.

பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி வயதுக்கு ஏற்ப முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கறைகளை தடுக்கிறது.

பீட்ரூட் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவும். இதன் காரணமாக முகப்பரு, பருக்கள் மற்றும் தழும்புகள் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

பீட்ரூட் கிரீம் சருமத்தை இயற்கையாகவே நீரேற்றமாக வைத்திருக்கிறது, இது சருமத்திற்கு ரோஜா போன்ற பளபளப்பை அளிக்கிறது.

Pic Courtesy: FreePik

Read Next

Banana Peel Benefits: வாழைப்பழ தோலை தூக்கிப்போடாதீங்க! இதில் எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்