$
Benefits Of Banana Peel For Skin: இன்றைய காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் தங்களது சருமத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். சருமத்தை பராமரிக்க பல்வேறு மருந்துகள் மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் இயற்கை பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் சரும பராமரிப்பில் வாழைப்பழ தோல் சிறந்த பங்கு வகிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், வாழைப்பழ தோலில் உள்ள ஏராளமான சத்துக்கள், நம் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. வாழைப்பழ தோலை சரும பாராமரிப்பில் இணைப்பதால் நமது சருமத்திற்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இங்கே காண்போம்.

இயற்கையான மாய்ஸ்சரைசர்
வாழைப்பழ தோலில் இயற்கையான ஈரப்பதம் உள்ளது. இது நம் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. இது இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.
சூப்பரான ஸ்க்ரப்பர்
பார்க்க மென்மையாக இருக்கும் வாழைப்பழத் தோல், நமது சருமத்திற்கு நல்ல இயற்கையான ஸ்க்ரபராக பயன்படுகிறது. அதாவது இறந்த செல்களை அகற்றும் செயலாகும். நமது தோலில் வாழைப்பழ தோலைப் பயன்படுத்துவதன் மூலம், இறந்த செல்களை அகற்ற முடியும். இதன் விளைவாக, தோல் பளபளப்பாகவும், நிறமாகவும் இருக்கும்.
முகப்பருவை தடுக்கும்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த வாழைப்பழத் தோல் முகப்பரு மற்றும் அவற்றின் வலியைப் போக்கும். வாழைப்பழத் தோலின் உட்புறத்தை முகத்தில் தடவினால், வீக்கத்தைக் குறைத்து, எரிச்சலடைந்த சருமத்தை ஆற்றும்.

இளமைத் தோற்றம்
வாழைப்பழத் தோல் முதுமையைத் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது சருமத்தில் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைத்து இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
வாழைப்பழத்தோலில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் சீரற்ற தொனி மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை நிவர்த்தி செய்து சருமத்தை பிரகாசமாக்கும். இதனை நமது சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அது சருமத்தை பிரகாசமாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவும்.
Image Source: Freepik