Banana peels for face mask: சருமத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க யார்தான் விரும்ப மாட்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக வறண்ட சருமம், கரும்புள்ளிகள் தோன்றுதல், மெல்லிய கோடுகள் உள்ளிட்ட பல்வேறு சரும பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், அழகு சார்ந்த நன்மைகளைப் பெறவும் தாவர அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்தி இயற்கையான அழகைப் பெறலாம்.
நாம் பெரும்பாலும் தூக்கி எறியும் சில பொருள்களும் கூட நமது சரும பராமரிப்பு வழக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை மற்ற சில சரும பராமரிப்புப் பொருள்களுடன் இணைப்பது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. அவ்வாறே, நாம் அன்றாட உணவில் சேர்க்கும் வாழைப்பழம் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு, அதன் தோலை பெரும்பாலும் தூக்கி எறிந்து விடுவோம். இதில், சரும பராமரிப்பிற்கு வாழைப்பழத் தோலை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் காணலாம்.
சருமத்திற்கு வாழைப்பழத்தோல் தரும் நன்மைகள்
வாழைப்பழத் தோல்களில் ஆக்ஸிஜனேற்றிகள் , வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை நம் சருமத்தைப் புத்துயிர் பெற உதவக்கூடியதாகும். இத்தகைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தி எளிமையான முறையில் வீட்டிலேயே ஃபேஸ் பேக்கைத் தயார் செய்யலாம். இதில் சருமத்திற்கு வாழைப்பழத்தோல் ஃபேஸ் மாஸ்க் தயார் செய்யும் முறைகளைக் குறித்து காணலாம். இது பளபளப்பான மற்றும் பொலிவான சருமத்திற்கு வழிவகுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Skin Tightening Face Pack: எந்த கறையும் இல்லாத சுத்தமான சருமத்தை பெற இந்த ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க
முக்கிய கட்டுரைகள்
பளபளப்பான சருமத்திற்கு வாழைப்பழத்தோல் ஃபேஸ் மாஸ்க்குகள்
மஞ்சள் மற்றும் வாழைப்பழத்தோல் ஃபேஸ் பேக்
முகப்பரு மற்றும் முகப்பரு தழும்புகளைக் கொண்டிருப்பவர்கள் வாழைப்பழத் தோலுடன் மஞ்சள் ஃபேஸ் பேக்கை முயற்சிக்கலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்ற உதவுகிறது. அதே சமயம், மஞ்சள் கிருமி நாசினிகள் தன்மைக்கு பெயர் பெற்றதாகும். இந்த ஃபேஸ்பேக்கைத் தயார் செய்வதற்கு வாழைப்பழத் தோலின் உட்புறத்தை துடைத்து, பிசைந்து, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியைச் சேர்த்து கலக்க வேண்டும். பிறகு இதில் சில துளிகள் ரோஸ் வாட்டரைச் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவலாம். இதன் மூலம் முகப்பரு மற்றும் முகப்புள்ளிகளைக் குறைக்கலாம்.
எலுமிச்சை சாறுடன் வாழைப்பழத்தோல் ஃபேஸ் மாஸ்க்
எலுமிச்சை சாறு வைட்டமின் சி நிறைந்ததாகும். இது சருமத்தை இயற்கையாகவே பளபளப்பாக வைக்க உதவுகிறது. மேலும் இது ஹைப்பர் பிக்மென்டேஷனை சமாளிக்க ஒரு சிறந்த தீர்வாகும். இதை வாழைப்பழத் தோலுடன் சேர்ப்பது சருமத்தை இயற்கையாகவே பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இந்த ஃபேஸ் பேக்கைத் தயார் செய்வதற்கு வாழைப்பழத் தோலின் உட்புறத்தை நசுக்கி, ஒரு டீஸ்பூன் புதிய எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கலாம். இந்த கலவையை முகத்தில் தடவலாம். பிறகு கண்களுக்குக் கீழே உள்ள பகுதியைத் தவிர்க்க வேண்டும். இதை 10 நிமிடங்கள் அப்படியே வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது கரும்புள்ளிகளை மறைத்து சிறிது நேரத்தில் பளபளப்பான சருமத்தைத் தருகிறது.
ஓட்ஸ் மற்றும் வாழைப்பழத்தோல் ஃபேஸ் பேக்
வாழைப்பழத் தோலுடன் ஓட்ஸ் ஃபேஸ் பேக் தயார் செய்வது மென்மையான மற்றும் பயனுள்ள தேர்வாக அமைகிறது. இந்த ஓட்ஸ் எக்ஸ்ஃபோலியேட்டர் சருமத்தை எரிச்சலடையச் செய்யாமல் சருமத்தில் காணப்படும் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது.
இந்த ஃபேஸ் மாஸ்க் தயார் செய்வதற்கு ஒரு வாழைப்பழத் தோலை அரைத்து, ஒரு தேக்கரண்டி அரைத்த ஓட்மீலுடன் கலக்க வேண்டும். இதில் சிறிது பால் சேர்த்து தடிமனான கலவையை உருவாக்க வேண்டும். இதை வட்ட இயக்கத்தில் சருமத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் சுத்தமான மற்றும் தெளிவான சருமத்தைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Banana for Face : நீங்க எப்பவும் இளமையா இருக்கணுமா? வாழைப்பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!
தேனுடன் வாழைப்பழத்தோல் ஃபேஸ் பேக்
சருமத்திற்கு தேன் மற்றும் வாழைப்பழத் தோல் ஃபேஸ் பேக் பயன்படுத்துவது சிறந்த தேர்வாகும். இந்த ஃபேஸ் பேக்கில் பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை சருமத்தை ஈரப்பதமாக்கி, குண்டாக இருக்க உதவுகிறது. இதற்கு தேன் பயன்படுத்துவது சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. இது வறண்ட மற்றும் மந்தமான சருமத்திற்கு ஏற்றதாகும்.
இந்த ஃபேஸ் பேக்கைத் தயார் செய்வதற்கு வாழைப்பழத் தோலின் உட்புறத்தை துடைத்து, ஒரு தேக்கரண்டி தேனுடன் கலக்க வேண்டும். ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்தும் முன்னதாக, முகத்திலிருந்து அழுக்குகளை நீக்க சோப்புடன் முகத்தைக் கழுவ வேண்டும். பிறகு இந்த ஃபேஸ் பேக்கை சருமத்தில் சமமாகப் பூசி 15-20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இது சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.
கற்றாழையுடன் வாழைப்பழத்தோல் ஃபேஸ் பேக்
மன அழுத்தம் மற்றும் காலநிலை மாற்றத்தால் சரும பாதிப்பு ஏற்படுவது பொதுவானதாகும். இதிலிருந்து விடுபட இந்த ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். வாழைப்பழத்தோலைப் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. அதே சமயம், கற்றாழை சருமத்தை குளிர்வித்து ஆற்றவும், அமைதிப்படுத்தவும் உதவுகிறது.
வாழைப்பழத் தோலின் உள் வெள்ளைப் பகுதியை ஒரு தேக்கரண்டி மசித்து அதில் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து மென்மையான பேஸ்ட் தயார் செய்யலாம். பிறகு இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Banana Face Mask: ஒரே ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும் எப்பவும் இளமையா இருக்கலாம்!!
Image Source: Freepik