Beetroot Face Mask: ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க பீட்ரூட்யை இப்படி பயன்படுத்துங்க!

  • SHARE
  • FOLLOW
Beetroot Face Mask: ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க பீட்ரூட்யை இப்படி பயன்படுத்துங்க!


பீட்ரூட்யை ஃபேஸ் மாஸ்க்காகப் பயன்படுத்தினால், ஒரே வாரத்தில் உங்கள் முகம் சிகப்பாவதை கண்கூட காணலாம். பீட்ரூட்யை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் எப்படி தயாரிப்பது? அதன் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தப் பதிவும் உதவலாம் : Rose water: இந்த பொருட்களை மறந்து கூட ரோஸ் வாட்டரில் கலந்து யூஸ் பண்ண கூடாது!

பீட்ரூட் ஃபேஸ் மாஸ்க் செய்யத் தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 1.
பெருஞ்சீரகம் தண்ணீர் - 3 ஸ்பூன்.
கிளிசரின் - 1 ஸ்பூன்.

பீட்ரூட் ஃபேஸ் மாஸ்க் செய்முறை:

  • இதற்கு முதலில், பீட்ரூட்டை எடுத்துத் தோலை நீக்கவும்.
  • பிறகு, அதைத் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யுங்கள்.
  • பின் அதனைச் சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும்.
  • இப்போது அதை வடிகட்டி ஒரு தனி பாத்திரத்தில் சாற்றை ஊற்றவும்.
  • ஒரு கடாயை எடுத்து, அதில் பெருஞ்சீரக தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீரின் நிறம் மாறியதும், அடுப்பை அனைத்து நீரை ஆற வைக்கவும்.
  • இப்போது, இதில் கிளிசரின் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  • பின், பீட்ரூட் சாற்றை இதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இந்தப் பதிவும் உதவலாம் : Nalangu Maavu Benefits: நலங்கு மாவு யூஸ் பண்ணுங்க.. சருமம் தங்கம் போல் ஜொலிக்கும்.!

எப்படி பயன்படுத்துவது?

தயார் செய்து வைத்துள்ள பீட்ரூட் ஃபேஸ் மாஸ்கை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்யவும். பின்னர், அதை 30 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் சருமம் பளபளப்பாகவும், இளஞ்சிவப்பு நிறமாகவும் மாறும்.

பீட்ரூட்டை முகத்தில் தடவுவதால் என்ன பயன்?

இரும்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை பீட்ரூட் கொண்டுள்ளது. இதனுடன், பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், வயதான எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன, அவை சருமத்திற்கு மிகவும் நல்லது. எனவே, நீங்கள் இதைத் தாராளமாகச் சருமத்தில் பயன்படுத்தலாம். இது சருமத்தை மேம்படுத்தும் இயற்கையான வீட்டு வைத்தியம்.

இந்தப் பதிவும் உதவலாம் : Ghee Cause Acne: நெய் சாப்பிட்டால் பருக்கள் வருமா? நிபுணர்கள் கருத்து!

இது சருமத்தை ஹைட்ரேட் செய்வதுடன், வயதாவதால் ஏற்படும் சரும பிரச்சனைகளையும் குறைக்கிறது. ஆனால், அது உடனடி விளைவைக் காட்டும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், தொடர்ந்து பயன்படுத்தும்போது நல்ல மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.

Pic Courtesy: Freepik

Read Next

Olive Oil For Skin: முகம் பளிச்சினு தங்கம் போல மின்ன ஆலிவ் எண்ணெய் ஒன்னு போதும்

Disclaimer

குறிச்சொற்கள்