Nalangu Maavu Benefits: நலங்கு மாவு யூஸ் பண்ணுங்க.. சருமம் தங்கம் போல் ஜொலிக்கும்.!

  • SHARE
  • FOLLOW
Nalangu Maavu Benefits: நலங்கு மாவு யூஸ் பண்ணுங்க.. சருமம் தங்கம் போல் ஜொலிக்கும்.!


Benefits of Nalangu Maavu For Skin: தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பழங்காலத்திலிருந்தே குளியலுக்கு நலங்கு மாவு பயன்படுத்தப்படு வருகிறது. இது இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வகையான சருமத்திற்கும் நலங்கு மாவு ஏற்றதாக இருக்கிறது. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். 

நலங்கு மாவின் நன்மைகள் (Nalangu Maavu Benefits)

முகப்பரு நீங்கும்

எல்லா பருவத்திலும் நாம் சந்திக்கும் ஒரு பிரச்னை முகப்பரு. இதனை சிலர் கிள்ளி விடுவர். இதனால் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன. இதனை போக்க நாம் சந்தையில் கிடைக்கும் பொருட்களை முயற்சி செய்கிறோம். இது மேலும் சருமத்தை பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இதற்கு நலங்கு மாவு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். சரும பராமரிப்பில் நலங்கு மாவினை இணைத்தால், சருமத்திற்கு எந்த விதமான பிரச்னைகளும் ஏற்படாது. இது சருமத்தை ஜொலிக்கச் செய்யும். 

வியர்வை துர்நாற்றம் விலகும்

வியர்வை துர்நாற்றம் நமக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இதனால் பொது இடங்களுக்கு செல்ல கூச்சமாக இருக்கும். இதனை போக்க வாசனை திரவங்கள், பவுடர்கள் என பலவற்றை முயற்சி செய்திருப்பீர்கள். ஆனால் இதற்கு நலங்கு மாவு நல்ல தேர்வாக இருக்கும். இதில் உள்ள மூலிலை பொருட்கள் நறுமணத்தை ஏற்படுத்தும். மேலும் இது உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். 

இதையும் படிங்க: Dead Cells: இறந்த சரும செல்களை அகற்றுவது எப்படி? எளிய வழிகள்

பாதுகாப்பான சருமம்

பிறந்த குழந்தைகளுக்கும் நலங்கு மாவு பயன்படுத்தலாம். இது அவர்களின் சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் அவர்களை வாசனையுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. 

நலங்கு மாவு செய்வது எப்படி? (How To Make Nalangu Maavu?)

தேவையான பொருட்கள்

வெட்டி வேர்

கடலை பருப்பு

நன்னாரி வேர்

வசம்பு

கஸ்தூரி மஞ்சள்

பூந்திக்கொட்டை

பூலாங்கிழங்கு

சீயக்காய்

பாசி பருப்பு

ரோஜா இதழ்

வெந்தயம்

கோரை

ஆவாரம்பூ

விலாமிச்சை வேர்

மஞ்சள்

செய்முறை

மேற்கூறிய பொருட்களை நன்கு வெயிலில் காயவைக்கவும். மூன்று நாட்களுக்கு வெயிலில் வைத்து எடுக்கவும். இந்த பொருட்கள் அனைத்தும் மொறுமொறுப்பான பதத்திற்கு வந்த உடன் இதனை அரைத்துக்கொள்ளவும். பின்னர் இந்த நலங்கு மாவு பொடியை, காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். 

Image Source: Freepik

Read Next

Ghee Cause Acne: நெய் சாப்பிட்டால் பருக்கள் வருமா? நிபுணர்கள் கருத்து!

Disclaimer

குறிச்சொற்கள்