Ghee On Face: வெறும் 3 சொட்டு நெய் இருந்தால் போதும் உங்க முகத்தை பளபளன்னு மாத்திடலாம்!

  • SHARE
  • FOLLOW
Ghee On Face: வெறும் 3 சொட்டு நெய் இருந்தால் போதும் உங்க முகத்தை பளபளன்னு மாத்திடலாம்!

சரும வறட்சி காரணமாக தோல் வெடிக்கத் துவங்கும். எனவே, சருமத்திற்கு ஊட்டமளிக்க வேண்டியது மிகவும் அவசியம். நெய் இயற்கையாகவே மருத்துவ குணம் வாய்ந்தது. இதை உச்சி முதல் பாதம் வரை அனைத்திற்கும் பயன்படுத்தலாம். சருமத்தில் நெய் தடவுவதால் பல்வேறும் சரும பிரச்சினைகள் குணமாகும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் உண்மைதான். முகத்தில் நெய்யை எப்படி பயன்படுத்துவது மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Mosambi For Face: பார்லர் போகாமல் முகம் பளபளப்பாக சாத்துகுடியை இப்படி பயன்படுத்துங்க!

வறண்ட சருமத்தில் என்ன தடவவும்?

பசு நெய்.
தேன்.

முகத்தில் தேன் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

  • இயற்கையாகவே சருமத்தை வெளியேற்றுவதற்கு தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
  • முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்ய தேன் உதவுகிறது.
  • முக தோலை மென்மையாக வைத்திருக்க தேன் மிகவும் உதவியாக உள்ளது.

இந்த பதிவும் உதவலாம் : முகத்தில் உள்ள கரும்புள்ளியை போக்க… மோரை இப்படி பயன்படுத்திப் பாருங்க!

முகத்தில் நெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

  • முகத்தில் நெய்யை மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இதன் காரணமாக தோல் நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கும்.
  • முகத்தில் இயற்கையான பொலிவை பராமரிக்க உதவுகிறது.
  • இது தவிர, சரியான ஊட்டச்சத்தை கொடுத்து சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.

வறண்ட சருமத்திற்கு இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்க

  • முதலில், 3 சொட்டு நெய்யை வெதுவெதுப்பாக்கவும். பின்னர், சிறிது ஆற விடவும்.
  • ஆறிய பிறகு அதனுடன் அரை டீஸ்பூன் தேன் சேர்க்கவும்.
  • இவை இரண்டையும் நன்கு கலந்த பின் முகத்தில் தடவவும்.
  • சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, பருத்தி மற்றும் தண்ணீரின் உதவியுடன் முகத்தில் தேன் மற்றும் நெய்யை சுத்தம் செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம் : சாலிசிலிக் அமிலத்தை யார் பயன்படுத்த வேண்டும்? நிபுணரின் கருத்து இங்கே..

  • இரவில் இதை செய்வது மிகவும் நல்லது.
  • தொடர்ந்து நெய் மற்றும் தேனை முகத்தில் தடவி வந்தால், சில நாட்களிலேயே சருமத்தில் மாற்றங்களைக் காணத் தொடங்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

சாலிசிலிக் அமிலத்தை யார் பயன்படுத்த வேண்டும்? நிபுணரின் கருத்து இங்கே..

Disclaimer