Sat Sep 12, 2026 | 12:22 AM IST

Glowing Skin Tips: 2 ஸ்பூன் பால் இருந்தா போதும் பார்லர் போகாம முகத்தை பளபளப்பாக்கலாம்!

Simple Ways to Apply Raw Milk on Your Face: ஆண்-பெண் இருவரும் அழகான மற்றும் தெளிவான சருமத்தை பெற விரும்புகின்றனர். முகப்பரு இல்லாத, தெளிவான சருமத்தை பெறுவது அவ்வளவு எளிமையானது அல்ல. சருமத்தை பராமரிக்க என்ன தான் சந்தைகளில் பல கிரீம்கள் கிடைத்தாலும், அவை நமக்கு சரியான பலனை தருவதில்லை. சரும பராமரிப்பிற்கு நாம் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதே நல்லது.

இவற்றை பயன்படுத்துவதால் எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது. முகத்தை இயற்கையாக பளபளப்பாக்க பச்சை பால் மிகவும் நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? சுத்தமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற பச்சைப் பாலை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும், அது சருமத்திற்கு வழங்கும் நன்மைகளை பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : மேக்கப் இல்லாமல் இயற்கை அழகுடன் ஜொலிக்க… இந்த 5 விஷயங்கள் போதும்!

தேவையான பொருட்கள்:

பச்சை பால் - சிறிது.
ரோஜா இதழ்கள் - 10.
தேன் - 1 ஸ்பூன்.

தேனை முகத்தில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • இயற்கையாகவே சருமத்தை ஈரப்பதமாக்க தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
  • முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்ய தேன் உதவுகிறது.
  • முக தோலை மென்மையாக வைத்திருக்க தேன் மிகவும் உதவியாக உள்ளது.

பச்சைப் பாலை முகத்தில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • பச்சை பாலில் வைட்டமின் ஏ உள்ளது, இது சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.
  • இது சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கவும் செயல்படுகிறது, இதன் காரணமாக சருமம் ஈரப்பதமாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Healthy Skin: எந்த சரும பிரச்சினையாக இருந்தாலும் சரி உடனே சரியாக இதை செய்யுங்க!

ரோஜா பூவை தோலில் தடவினால் என்ன நடக்கும்?

  • ரோஜா பூ சருமத்தின் pH அளவை பராமரிக்க உதவுகிறது.
  • அதே நேரத்தில், சரும செல்களை உள்ளிருந்து சரிசெய்து இழந்த பளபளப்பை மீண்டும் கொண்டு வர உதவுகிறது.
  • ரோஜா இதழ்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.

பளபளப்பான சருமத்தைப் பெற வீட்டு வைத்தியம்

  • முதலில் ரோஜா இதழ்களை அரைத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
  • அதில் 1 தேக்கரண்டி தேன் மற்றும் 2 தேக்கரண்டி பச்சை பால் கலக்கவும்.
  • இந்த மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும்.
  • இதை சுமார் 20 நிமிடங்கள் அப்படியே விடவும்.
  • அதன் பிறகு பருத்தி மற்றும் தண்ணீரின் உதவியுடன் அதை சுத்தம் செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம் : Beetroot Face Mask: ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க பீட்ரூட்யை இப்படி பயன்படுத்துங்க!

  • இந்த மருந்தை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
  • முதல் முறை பயன்படுத்துவதன் மூலம், முகத்தின் தோல் சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

Glowing Skin: முகப்பரு நீங்கி ஒரே வாரத்தில் முகம் பளபளக்க இந்த ஜூஸ் குடியுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content