Alum for Skin: சும்மா பளபளன்னு சருமம் மின்னணுமா? படிகாரத்தை 3 வழிகளில் யூஸ் பண்ணி பாருங்க

  • SHARE
  • FOLLOW
Alum for Skin: சும்மா பளபளன்னு சருமம் மின்னணுமா? படிகாரத்தை 3 வழிகளில் யூஸ் பண்ணி பாருங்க


இந்த அலுமினியம் அடிப்படையில் உருவாகும் படிகாரங்கள் பல பொதுவான வேதிப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை இனிப்புச் சுவையை கொண்டவை மட்டுமல்லாமல், தண்ணீரில் கரையும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது பொதுவாக ஷேவிங் செய்த பிறகு பயன்படுத்தப்படுகிறது. இது தோல் எரிச்சல், சிவத்தல் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. படிகாரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள், அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் போன்றவை காணப்படுகின்றன. இவை அனைத்துமே சரும பாதுகாப்புக்கு முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. இதில் படிகாரத்தை சருமத்திற்கு எப்படி பூசலாம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mango Face Mask: ஸ்கின் ரொம்ப பளபளப்பா இருக்க மேங்கோ ஃபேஸ் பேக் யூஸ் பண்ணுங்க

சருமத்திற்கு படிகாரத்தை பயன்படுத்துவது எப்படி?

படிகாரம் மற்றும் முல்தானி மிட்டி

  • இவை இரண்டுமே சரும பராமரிப்பில் உதவுவதாகும்.
  • முதலில் படிகாரத்தைப் பொடியாக்கி அதில் முல்தானி மிட்டி, கற்றாழை ஜெல் அல்லது ரோஸ் வாட்டர் சேர்க்க வேண்டும்.
  • இவை அனைத்தையும் நன்கு கலந்து பேஸ்ட்டாகத் தயார் செய்ய வேண்டும்.
  • பிறகு இந்தப் பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி மெதுவாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
  • இதை சருமத்தில் 15-20 நிமிடங்கள் வைத்து பிறகு தண்ணீரில் கழுவி விடலாம்.

சருமத்திற்கு இந்தக் கலவையை பயன்படுத்துவது முகப்பரு பிரச்சனையைக் குணமாக்குகிறது. மேலும், இந்தப் படிகாரக்கல் முகத்தில் உள்ள முகப்பரு புள்ளிகளை அகற்றவும், எரிச்சல் மற்றும் சிவத்தல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. இவை சருமத்திற்கு குளிர்ச்சித் தன்மையையும் வழங்குகிறது.

கிளிசரின் டோனர் மற்றும் படிகாரம்

  • படிகாரத்துடன் கிளிசரின் சேர்த்து டோனராகப் பயன்படுத்தலாம்.
  • இதற்கு பாத்திரம் ஒன்றில் தண்ணீர் சேர்த்து சூடாக்க வேண்டும்.
  • பின் இதில் படிகாரத் தூள் மற்றும் சில துளசி இலைகளைச் சேர்க்க வேண்டும். பிறகு தண்ணீர் நன்றாக கொதித்ததும், அடுப்பை அணைத்து, தண்ணீரை குளிர்விக்கலாம்.
  • பின்னர் இதை ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஒன்றில் நிரப்பி, இதில் சில துளிகள் கிளிசரின் சேர்த்து கலக்க வேண்டும்.
  • இந்த கலவையை சருமத்திற்கு டோனராகப் பயன்படுத்தலாம்.

இந்த படிகாரம் மற்றும் கிளிசரின் டோனர் சருமத்தை இறுக்கமாக்க வைக்க உதவுகிறது. மேலும், இது சருமத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெயை அகற்றுவதுடன், தழும்புகளை நீக்குகிறது. இது முக பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும், இந்த டோனரை ஒரு நாளைக்கு 1 முதல் 2 முறை வரை பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Urad Dal Face Pack: சருமத்தைப் பொலிவாக்க உளுந்துவுடன் இந்த பொருள்களைச் சேர்த்து யூஸ் பண்ணுங்க

ரோஸ்வாட்டருடன் படிகாரம்

  • படிகாரம் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டுமே சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இதற்கு முதலில் படிகாரத்தை பொடியாக்கி, அதில் ஒரு ஸ்பூன் அளவு படிகாரப் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் இதில் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும்.
  • இந்த கலவையை முகம் கழுத்து முழுவதும் தடவ வேண்டும்.
  • அதன் பிறகு முகத்தை மெதுவாக சுழற்சி இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
  • பின் இதை 10-15 நிமிடங்கள் வைத்து பிறகு சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

படிகாரம் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ்ட்டைப் பயன்படுத்திய பிறகு, சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த படிகாரம் மற்றும் ரோஸ் வாட்டர் கலவையை சருமத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் உள்ள கறைகள், சிவத்தல் மற்றும் எரிச்சலைத் தணிக்கலாம்.

சருமத்தில் படிகாரம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

  • முகப்பருக்களை அகற்ற படிகாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • படிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் முகப்பரு புள்ளிகள் மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் நீங்கும்.
  • படிகாரம் கலந்த டோனரைப் பயன்படுத்துவது சருமம் ஈரப்பதமாக இருக்க உதவுகிறது.
  • படிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றலாம்.
  • முகச்சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் போன்றவற்றை நீக்குவதிலும் படிகாரம் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
  • இது சூரிய ஒளியால் ஏற்படும் சரும டேனைக் குறைக்கிறது.
  • மேலும், படிகாரம் கலந்த கலவையைப் பயன்படுத்துவது சருமத்தை சுத்தமாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Raw Mango For Skin: சரும பிரச்சனைகளைத் தடுக்கும் பச்சை மாம்பழம்! எப்படி பயன்படுத்துவது?

Image Source: Freepik

Read Next

Raw Mango For Skin: சரும பிரச்சனைகளைத் தடுக்கும் பச்சை மாம்பழம்! எப்படி பயன்படுத்துவது?

Disclaimer

குறிச்சொற்கள்