Face packs that can be made at home during monsoon: மழைக்காலம் தொடங்குவது, கோடைக்கால வெயிலுக்கு ஏற்ற இதமான காலமாக அமைகிறது. மேலும் இந்த காலகட்டத்தில் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான வானிலை காரணமாக பல உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதில் முடி பிரச்சனைகள் முதல் சரும பிரச்சனைகள் வரை பெரும்பாலான பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நம் உடலின் ஆரோக்கியத்தையும், சருமத்தின் அழகையும் பராமரிக்கலாம்.
மழைக்காலத்தில் சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை சருமத்திற்கு கூடுதல் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்க்க, சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். இதில் நமது சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் காணலாம். இவை வீட்டில் தயாரிக்கப்படுவதால், ஃபேஸ் பேக்குகள் இயற்கையாகவே வேலை செய்கிறது. இதில் மழைக்காலத்தில் நமது சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மிகவும் பயனுள்ள ஃபேஸ் பேக்குகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: முகம் தங்கம் போல ஜொலிக்க முல்தானி மெட்டியில் இந்த 5 பொருள்களை மட்டும் சேர்த்து யூஸ் பண்ணுங்க
மழைக்காலத்தில் சருமத்திற்கு உதவும் ஃபேஸ் பேக்குகள்
வேம்பு மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
வேம்பில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய முகப்பரு மற்றும் தோல் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. மேலும் இதில் மஞ்சள் சேர்ப்பது இயற்கையாகவே நம் முகத்தின் பளபளப்பை அதிகரித்து வீக்கத்தைக் குறைக்கிறது.
இதற்கு புதிய பச்சை வேப்பிலைகளை எடுத்துக் கொள்ளலாம் அல்லது வேப்பம்பூவைப் பயன்படுத்தலாம். இதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து தடவி 15 நிமிடங்கள் வைத்து, பின் முகத்தைக் கழுவலாம்.
சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
சந்தனத்தில் கிருமி நாசினி பண்புகள் நிறைந்துள்ளன. இது சருமத்தில் உள்ள தடிப்புகள் மற்றும் பருக்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூடுதலாக, ரோஸ் வாட்டர் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் மற்றும் சருமத்திற்கு நீர்ச்சத்தை வழங்கவும் உதவுகிறது.
இதற்கு சந்தனப் பொடியை எடுத்து ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும். இதை முகத்தில் தடவி, அது காய்ந்த பிறகு முகத்தைக் கழுவ வேண்டும்.
கொண்டைக்கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
இது எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கும் மிகவும் பொருத்தமானதாக அமைகிறது. இந்த ஃபேஸ் பேக் மழைக்காலங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
இதற்கு 2 தேக்கரண்டி கடலை மாவு, 1 தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் போன்றவற்றைக் கலந்து தடவி அரை மணி நேரம் உலர விட்டு பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Turmeric on Face: தமிழக பெண்கள் அறிவே அறிவு, முகத்தில் மஞ்சள் தடவுவது சும்மா இல்ல பாஸ்! அதுவும் இப்படி தடவினால்!
முல்தானி மிட்டி மற்றும் ரோஜா ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் ஆனது எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் முல்தானி மிட்டி நமது சருமத்திலிருந்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி துளைகளைத் திறந்து வைத்திருக்க உதவுகிறது. முக்கியமாக, இது ஈரப்பதமான காலநிலையிலும் அவசியமாகும். ரோஸ் வாட்டரில் அழற்சி அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை சருமத்தை குளிர்விக்கும் விளைவைக் கொண்டுள்ளது.
இதற்கு இரண்டு தேக்கரண்டி முல்தானி மிட்டியை எடுத்து அதில் சம அளவிலான ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும். இதை சருமத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து, பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும்.
கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ்பேக் பயன்பாடு ஈரப்பதமான சூழலில் மிகவும் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கற்றாழையைப் பயன்படுத்துவது சருமத்திற்கு நீர்ச்சத்தை வழங்குகிறது. இதில் வெள்ளரிக்காயைச் சேர்ப்பது நமது விரிசல் சருமத்தை சரிசெய்கிறது.
இதற்கு கற்றாழை ஜெல் மற்றும் வெள்ளரி சாறு கலந்து சருமத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு முகத்தைக் கழுவலாம்.
இந்த பதிவும் உதவலாம்: துளசியுடன் ரோஸ்வாட்டர் சேர்த்த நீரை சருமத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
Image Source: Freepik