What are the benefits of Tulsi and rose water: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் சருமம் சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். மாறிவரும் காலகட்டத்தில், சருமம் தினமும் தூசி, மாசுபாடு, சூரிய ஒளி மற்றும் பல்வேறு வகையான ரசாயனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக சருமத்தில் முகப்பரு, தழும்புகள் மற்றும் முன்கூட்டிய வயதான அறிகுறிகள் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், நமது சரும பராமரிப்பு வழக்கத்தில் சில விஷயங்களைச் சேர்ப்பது முக்கியமாகும். இவை நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன், வானிலையில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தாங்குகிறது. இந்நிலையில், சருமத்தை இயற்கையான முறையில் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க ரோஸ் வாட்டர் மற்றும் துளசி இலைகள் பெரிதும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Tulsi face pack: பளபளப்பான சருமத்திற்கு துளசியுடன் இந்த பொருள்களைச் சேர்த்து பயன்படுத்துங்க
சருமத்திற்கு துளசி இலைகள் மற்றும் ரோஸ் வாட்டர்
துளசி இலைகள் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டுமே ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாக சரும ஆரோக்கியத்திற்குப் பயன்படுத்தப்படும் இயற்கைப் பொருள்கள் ஆகும். இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து சருமத்தில் பயன்படுத்துவது ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவுகிறது. இது சருமத்தின் இயற்கையான பளபளப்பை அதிகரிப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
இதில் சருமத்திற்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஜெய்ப்பூரில் உள்ள பாபு நகரில் உள்ள இயற்கை மருத்துவ மருத்துவமனையின் யோகா, இயற்கை மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் ஆயுர்வேத நிபுணரான மேவார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், மூத்த மருத்துவருமான டாக்டர் கிரண் குப்தா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
சருமத்திற்கு ரோஸ் வாட்டர் மற்றும் துளசி பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
துளசி இலைகள் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாகக் கலந்து சருமத்தில் பயன்படுத்தலாம். இவை சருமத்தின் பளபளப்பை மேம்படுத்தவும், தோல் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்தவும் உதவுகிறது. இதில் துளசி மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாகச் சேர்த்து பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதைக் காணலாம்.
சரும சுத்திகரிப்புக்கு
துளசி மற்றும் ரோஸ் வாட்டர் கலவை சருமத்தின் துளைகளை ஆழமாக சுத்தப்படுத்தி, இறந்த சரும செல்கள், கூடுதல் எண்ணெய் மற்றும் தூசியை அகற்ற பெரிதும் உதவுகிறது.
முகப்பருக்களிலிருந்து நிவாரணம் பெற
துளசியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உள்ள முகப்பரு மற்றும் பருக்கள் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது. அதே சமயம், ரோஸ் வாட்டர் சருமத்தை குளிர்விக்கவும் எரிச்சலை தணிக்கவும் உதவுகிறது.
தொற்றுகளிலிருந்து பாதுகாக்க
மழை அல்லது கோடை காலத்தில் சொறி, அரிப்பு மற்றும் வியர்வை அல்லது ஈரப்பதம் போன்றவற்றால் ஏற்பட்டால் தொற்றுக்களிலிருந்து விடுபட துளசி மற்றும் ரோஸ் வாட்டர் கலவை மிகுந்த நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் முகத்தில் ரோஸ் வாட்டர் தடவுவது பாதுகாப்பானதா?
கறைகளை ஒளிரச் செய்ய
துளசி இலைகள் பயன்படுத்துவது சருமத்தை உள்ளிருந்து சரிசெய்கிறது. மேலும் ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தை சமன் செய்வதுடன், கறைகளைப் போக்க உதவுகிறது.
சருமத்தை நீரேற்றமாக வைத்திக்க
துளசி இலைகள் சருமத்தின் துளைகளை இறுக்கி, சருமத்தை மென்மையாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் ரோஸ் வாட்டர் பயன்பாடு ஒரு சிறந்த டோனர் மற்றும் மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.
துளசி மற்றும் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துவது எப்படி?
தோல் டோனர்
துளசி இலைகள் மற்றும் ரோஸ் வாட்டரை தோல் டோனராகப் பயன்படுத்தலாம். இதைத் தயார் செய்ய, 1 கப் தண்ணீரில் 1 கைப்பிடி துளசி இலைகள் அல்லது 1 டீஸ்பூன் துளசிப் பொடியைக் கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் பாதியாக வரும் வரை கொதிக்க வைத்து, அதில் அரை கப் ரோஸ் வாட்டர் சேர்க்கலாம். இந்தக் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி, ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தில் தெளிக்கலாம்.
ஃபேஸ் பேக்
துளசி இலைகள் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். இதைத் தயார் செய்ய, 1 டீஸ்பூன் துளசி இலை பொடி, 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் அரை டீஸ்பூன் சந்தனப் பொடி எடுத்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் பாத்திரம் ஒன்றில் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் சம அளவில் தடவி, 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இவை சருமத்தில் உள்ள கறைகளை ஒளிரச் செய்யவும், சருமத்தை சுத்தமாக மற்றும் மென்மையக வைத்திருக்கவும் மிகவும் நன்மை பயக்கும்.
முடிவுரை
துளசி மற்றும் ரோஸ் வாட்டர் கலவையானது இயற்கையான, மலிவான மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வாகும். இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தி, தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கிறது. இதன் மூலம் நீண்ட காலத்திற்கு இயற்கையான, ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெறலாம். எனினும் எந்தவொரு புதிய பொருளையும் முகத்தில் நேரடியாகப் பயன்படுத்துவதற்கு முன்பு, ஒரு பேட்ச் டெஸ் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: காலையில் எழுந்ததும் முகம் தங்கம் போல ஜொலிக்கணுமா? நைட் தூங்கும் முன் முகத்துல இத தடவுங்க
Image Source: Freepik