Homemade Rose Gel For Face: இன்று பலரும் மோசமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் அமைகிறது. இதில் சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். சரும பராமரிப்புகளை மேற்கொள்ளாததன் காரணமாக, சரும எரிச்சல், வெடிப்பு, சரும வறட்சி என பல பிரச்சனைகள் எழலாம். இதற்கு சருமத்தைப் பொலிவாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள சிலர் சந்தைகளில் கிடைக்கும் சரும பராமரிப்புப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவர்.
ஆனால், இதில் இரசாயனங்கள் கலந்திருக்கலாம். இவை பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அமையலாம். இந்த பக்கவிளைவுகளைத் தவிர்க்க வீட்டிலேயே சில இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தலாம். இதில் வீட்டிலேயே கற்றாழை மற்றும் ரோஸ் கொண்டு தயாரிக்கப்படும் ரோஸ் ஜெல் குறித்து காண்போம். மேலும், ரோஸ் ஜெல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் மசாஜ் செய்யும் முறை போன்றவற்றைக் குறித்து காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Alum for Skin: சும்மா பளபளன்னு சருமம் மின்னணுமா? படிகாரத்தை 3 வழிகளில் யூஸ் பண்ணி பாருங்க
சருமத்திற்கு அலோவேரா ரோஸ் ஜெல் தயாரிக்கும் முறை
தேவையானவை
- புதிய ரோஜாக்கள் - 5 முதல் 6
- ரோஸ் வாட்டர் - 5
- அலோவேரா ஜெல் - 10 டேபிள்ஸ்பூன் (புதிய மற்றும் இயற்கையான)
- வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் - 2

செய்முறை
- புதிய ரோஜாக்களின் தண்டு மற்றும் இலைகள் சேர்க்காமல் இதழ்களை மட்டும் எடுத்து ஒரு பிளெண்டரில் சேர்க்க வேண்டும்.
- இதில் தண்ணீருக்குப் பதில் ரோஸ் வாட்டரை சேர்த்து கெட்டியான பேஸ்ட் வரும் வரை நன்கு கலக்க வேண்டும்.
- இந்த பேஸ்ட்டை கிண்ணம் ஒன்றில் சரியாக சல்லடை செய்து, அனைத்து ரோஸ் வாட்டரும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். (இதில் பிரித்தெடுக்கப்படும் போது கிடைக்கும் திடக் கலவையைத் தூக்கி எறியாமல், மற்ற சுய கவனிப்புப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தலாம்).
- இந்த ரோஸ் வாட்டரை கிண்ணத்தில் ஊற்றி, கற்றாழை ஜெல்லை கரண்டியால் சேர்க்க வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும்.
- இது ஜெல் போன்ற நிலைக்கு வந்த உடன், வைட்டமின் ஈ சேர்க்கலாம்.
- இப்போது அலோவேரா ரோஸ் ஜெல் தயார் செய்யப்பட்டது.
இந்த பதிவும் உதவலாம்: Acne Face Map: உங்க முகத்தின் வெவ்வேறு பகுதிகளில் முகப்பரு ஏன் ஏற்படுகிறது தெரியுமா? காரணம் இதோ!
அலோவேரா ரோஸ் ஜெல் மசாஜ் செய்யும் முறை
- இந்த ஜெல்லை எப்போது வேண்டுமானாலும் மசாஜ் செய்யலாம். குறிப்பாக, இரவு நேர பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- தினமும் இரவில் முகத்தைக் கழுவிய பிறகு நன்றாக சுத்தம் செய்து சிறிது ஜெல்லை எடுத்து முகத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
- இந்த ஜெல் ஓரிரவிலேயே முகத்தை மேம்படுத்த உதவுகிறது.
- தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் இந்த ஜெல்லைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.
- இவ்வாறு தினமும் செய்து வர முகத்தில் உள்ள புள்ளிகள் மறைந்து, முகம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும்.

சருமத்திற்கு கற்றாழை தரும் நன்மைகள்
- சரும பராமரிப்பில் கற்றாழை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சருமத்தில் கறைகள் ஏற்படும் நேரங்களில் சருமத்தை ஆற்ற சிறந்த தீர்வாக அமைகிறது. இவை சருமத்தை எரிச்சலிலிருந்து விடுவிப்பதுடன், அரிப்பு, சிவத்தல் மற்றும் சொறி போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்க உதவுகிறது.
- கற்றாழை மிகவும் குளிர்ச்சி மிக்க பண்புகளைக் கொண்டதாகும். குறிப்பாக, கோடைக்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல் சிறந்த தீர்வாக அமைகிறது.
- இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவது, சருமத்திற்குப் பளபளப்பையும், மென்மையான தோற்றத்தையும் அளிக்கிறது.
- மேலும் கற்றாழை ஜெல்லை சருமத்திற்குப் பயன்படுத்துவது அதன் ஈரப்பதத்தை அதிகரிக்கவும், சரும பிரச்சனைகளைத் தவிர்க்கவும் ஏதுவாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Glowing Skin: 40 வயதிலும் நீங்க இளமையா தெரியனுமா? அப்போ தினமும் இந்த ஜூஸ் குடியுங்க!
சருமத்திற்கு ரோஜா தரும் நன்மைகள்
- சரும பிரச்சனைகளான முகப்பரு, தோல் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது, சருமத்தை அமைதிப்படுத்தவும், சிவப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
- இது ஒரு சிறந்த சுத்தப்படுத்தியாக விளங்குகிறது. மேலும், சருமத்தில் திரட்டப்பட்ட அழுக்குகள் அனைத்தையும் சருமத்திலிருந்து அகற்ற உதவுகிறது.
- இது ஒரு சிறந்த கிளென்சராகவும், டோனராகவும் பயன்படுகிறது.
- சருமத்தில் காணப்படும் அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தவும் அதன் pH சமநிலையை பராமரிக்கவும் ரோஜா உதவுகிறது.

இவ்வாறு சரும ஆரோக்கியத்தில் அலோவேரா ரோஜா ஜெல் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனைத் தினமும் பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Coconut Powder Benefits: சருமம் மென்மையா, பளிச்சினு இருக்க தேங்காய் பவுடரை இப்படி பயன்படுத்துங்க!
Image Source: Freepik