Thu Oct 29, 2026 | 12:54 PM IST

Expert

Glowing Skin: 40 வயதிலும் நீங்க இளமையா தெரியனுமா? அப்போ தினமும் இந்த ஜூஸ் குடியுங்க!

Glowing Skin: 40 வயதிலும் நீங்க இளமையா தெரியனுமா? அப்போ தினமும் இந்த ஜூஸ் குடியுங்க!Glowing Skin: 40 வயதிலும் நீங்க இளமையா தெரியனுமா? அப்போ தினமும் இந்த ஜூஸ் குடியுங்க!

Simple Home Remedies for Glowing Skin: பளபளப்பான சருமம் வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவார்கள். இதற்கு, நாம் பல்வேறு வகையான வைத்தியங்களை முயற்சி செய்திருப்போம். சிலர் ஹைட்ராஃபேஷியல் மற்றும் லேசர் தெரபி போன்ற சிகிச்சைகளையும் மேற்கொள்வார்கள். இதனால், சருமம் பளபளப்பாக இருக்கும். ஆனால், இதை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க முடியாது. இருப்பினும், சில நேரங்களில் ரெட்டினோல் இல்லாததால், தோல் பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் சிகிச்சைகள் சரியாக வேலை செய்யாது.

ரெட்டினோல் சருமத்திற்கு பல வழிகளில் நன்மையை தரக்கூடியது. இதன் காரணமாக, சரும செல்கள் வளர்வதுடன், சருமமும் உரிந்துவிடும். இயற்கையான ரெட்டினோலைப் பெற, நீங்கள் கேரட், ஆப்பிள் மற்றும் இஞ்சி சாறு குடிக்கலாம். தோல் பராமரிப்பு நிபுணரான அஞ்சனி போஜ், சரும சுருக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சூப்பர் ஜூஸ் பற்றி நமக்கு விளக்கியுள்ளார். அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : பளபள சருமத்திற்கு வீட்டிலேயே இந்த கொரியன் ஃபேஸ் கிரீம் தயாரித்து அப்ளை பண்ணுங்க!

கேரட், ஆப்பிள் மற்றும் இஞ்சி ஜூஸ் செய்முறை:

  • கேரட், ஆப்பிள் மற்றும் இஞ்சி ஜூஸ் தயாரிக்க முதலில் 2 முதல் 3 கேரட்களை சுத்தம் செய்து தோல் நீக்கி எடுத்து வைக்கவும்.
  • இதையடுத்து எடுத்து வைத்துள்ள கேரட்டை சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும்.
  • இதற்குப் பிறகு, நீங்கள் ஆப்பிளை சிறிய துண்டுகளாக வெட்டி தனியே வைக்க வேண்டும். இதனுடன் சிறிது இஞ்சியையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது இந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்சி கிரைண்டரில் நன்கு அரைக்க வேண்டும்.
  • இப்போது உங்கள் இயற்கையான ரெட்டினோல் சாறு தயார்.

இந்த பதிவும் உதவலாம் : Coconut Powder Benefits: சருமம் மென்மையா, பளிச்சினு இருக்க தேங்காய் பவுடரை இப்படி பயன்படுத்துங்க!

இந்த ஜூஸ் சருமத்திற்கு என்ன செய்யும்?

இந்த ஜூஸை குடிப்பதால் சருமம் மேம்படும் என்பது மட்டுமின்றி பல வழிகளிலும் பலன்கள் கிடைக்கும். ரெட்டினோலுடன், இந்த சாறு வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவற்றின் நல்ல மூலமாகும்.

இதை குடிப்பதால் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படுவது மட்டுமின்றி, ஹீமோகுளோபின் அளவும் அதிகரித்து, இயற்கையாகவே சருமத்தை மேம்படுத்துகிறது. இந்த ஜூஸை குடிப்பதால் சருமத்தை இறுக்கமாக்கும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது. இது முகப்பரு பிரச்சனையை நீக்கி, சருமத்திற்கு பொலிவை தருகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Sunscreen For Monsoon: மழைக்காலத்தில் எந்த வகையான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும்?

சருமத்திற்கு ரெட்டினோலின் நன்மைகள்

  • ரெட்டினோல் சருமத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • ரெட்டினோலைப் பயன்படுத்துவது முகப்பரு பிரச்சனையை குறைக்கிறது அத்துடன் கறைகள் மற்றும் சுருக்கங்கள்.
  • இது வெயிலில் ஏற்படும் பாதிப்பு மற்றும் வெயிலில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
  • ரெட்டினோல் சருமத்தின் வறட்சியைக் குறைப்பது மட்டுமல்லாமல், சருமத்தின் சிவப்பையும் குறைக்கிறது.

Pic Courtesy: Freepik

Read Next

→ இரவில் முகத்திற்கு சீரம் தடவுவது நல்லதா? எப்படி யூஸ் பண்ணனும் என தெரிந்து கொள்ளுங்கள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.