
$
Advantages of washing face with ice water: இன்றைய காலகட்டத்தில் ஐஸ் வாட்டர் ஃபேஷியல் என்றழைக்கப்படும் ஐஸ் வாட்டரில் முகத்தைக் கழுவுவது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. இது போல செய்வது சருமத்தில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆலியா பட், கத்ரீனா கைஃப் மற்றும் தமன்னா பாட்டியா போன்ற பிரபலங்களும் இந்த செய்முறையையே பின்பற்றுகின்றனர்.
குறிப்பாக, கோடை காலங்களில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் அதிக சூரிய ஒளியால், நமது சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. சரும பராமரிப்பு வழக்கத்தில் ஐஸ் வாட்டர் ஃபேஷியல்களை இணைப்பது இந்த பருவத்தில் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை அடைய உதவுகிறது. இதில் வழக்கமான ஐஸ் வாட்டரில் முகம் கழுவுவதன் சாத்தியமான நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ice Cubes Massage: ஐஸ் க்யூப்ஸ் கொண்டு முகத்தில் மசாஜ் செய்யுங்க… பல நன்மைகள் கிடைக்கும்…
ஐஸ் தண்ணீரில் முகத்தைக் கழுவுவதன் நன்மைகள்
எரிச்சல் மற்றும் வீக்கத்தைத் தணிக்க
அதிகப்படியான சூரிய ஒளி அல்லது ஒவ்வாமை எதிர்விளைவுகள் காரணமாக, பெரும்பாலும் சருமத்தை அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுகிறது. இதனைக் குறைக்க ஐஸ் தண்ணீர் உதவுகிறது. இரத்த நாளங்களைச் சுருக்கி, வீக்கத்தைத் தணிக்கிறது. குளிரூட்டும் விளைவை வழங்குவதன் மூலம் இது அசௌகரியத்தைத் தணிப்பதுடன், பல்வேறு காரணிகளால் ஏற்படும் சிவத்தல், எரிச்சலை அமைதிப்படுத்த உதவுகிறது.

வீக்கத்தைக் குறைக்க
ஐஸ் தண்ணீரை ஃபேஸ் வாஷாகப் பயன்படுத்தும்போது, அதன் குறைந்த வெப்பநிலையானது தந்துகிகளை சுருங்கச் செய்கிறது. இந்த சுருக்கம், சருமத்தில் ஏற்படும் சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. மேலும், இவை இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக கட்டுப்படுத்துவதன் மூலம், அதிலும் குறிப்பாக, கண்களுக்குக் கீழ் மற்றும் சருமத்தின் மற்ற வீங்கிய பகுதிகளின் தோற்றத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. சிறிது நேரம் கழித்து, நுண்குழாய்கள் மீண்டும் திறக்கப்பட்டு, புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.
செயல்திறனை மேம்படுத்த
சருமத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்க ஐஸ் வாட்டர் சிறந்த தேர்வாகும். இது சரும பராமரிப்பு வழக்கத்திற்கு ஒரு சிறந்த நிரப்பியாக அமைகிறது. உங்கள் முகத்தை ஐஸ் தண்ணீரில் கழுவிய பிறகு, மாய்ஸ்சரைசர்கள், சீரம்க்ள் மற்றும் ஃபேஸ் மாஸ்க் போன்ற சருமப் பராமரிப்புப் பொருட்கள் சருமத்தில் அதிகம் நன்றாக ஊடுருவி உறிஞ்சுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இது நாம் பயன்படுத்தும் சரும பராமரிப்பு முறையின் நன்மைகளை அதிகரித்து, அதன் செயல்திறனை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஸ்கின் ரொம்ப பளபளப்பா இருக்கணுமா? வைட்டமின் ஈ-யை இப்படி யூஸ் பண்ணி பாருங்க
ஆக்ஸிஜன் உள்ளடக்கம் அதிகரிப்பு
ஐஸ் தண்ணீரில் வழங்கப்படும் குளிர்ச்சியான உணர்வு இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. மேலும், இது சருமத்தில் ஆக்ஸிஜன் உள்ளடக்கத்தை மேம்படுத்தி, மேம்படுத்தப்பட்ட ஆக்ஸிஜனேற்றத்தைத் தருகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கிறது. இவை சரும செல்களை புத்துயிர் அடையச் செய்து, புதிய மற்றும் புத்துணர்ச்சியூட்டப்பட்ட தோற்றத்தை ஊக்குவிக்கிறது. இவ்வாறு ஐஸ் தண்ணீர் அதன் விரும்பத்தக்க பளபளப்பைத் தருகிறது.

சருமத்தின் துளைகளை இறுக்கமாக்குதல்
முகத்தை ஐஸ் தண்ணீரில் கழுவுவதால் ஏற்படும் நன்மைகளில் ஒன்று சருமத்தின் துளைகளை இறுக்குவது ஆகும். இந்த குளிர்ந்த வெப்பநிலை, துளைகளைச் சுருங்கச் செய்து சருமத்திற்கு மென்மையான தோற்றத்தைத் தருகிறது. இது எண்ணெய், அழுக்கு போன்றவை குவிவதைக் குறைக்கிறது. சுத்தமான மற்றும் இறுக்கமான துளைகளை பராமரிப்பதன் மூலம், சருமத்தில் முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.
ஐஸ் வாட்டரில் முகத்தை எப்படி கழுவுவது?
- முதலில் ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதை குளிர்ச்சியாக மாற்ற ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கலாம். ஆனால், இது மிகவும் பனிக்கட்டியாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- முகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு இதைத் தொடங்கலாம். எனவே, முகத்தை மென்மையான க்ளென்சர் மூலம் கழுவி, உலர வைத்து, மேக்கப் அல்லது அழுக்குகளை அகற்றிக் கொள்ளலாம்.
- பின், எடுத்து வைத்த குளிர்ந்த நீரில் முகத்தை கவனமாக நனைத்து, முகம் முழுவதுமாக நனைவதை உறுதி செய்ய வேண்டும். இதில் நெற்றி அல்லது கன்னம் போன்ற குறிப்பிடப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
- இவ்வாறு முகத்தை தண்ணீரில் சுமார் 10 முதல் 30 வினாடிகள் வரை பிடித்து 4-5 முறை செய்ய வேண்டும். இந்த சமயத்தில் தலைவலி அல்லது வேறு சில பிரச்சனைகள் ஏற்பட்டால், உடனடியாக நிறுத்தி விடலாம். அதே சமயம், குளிர்கால மாதங்களில் இந்த செயல்முறையைத் தவிர்க்க வேண்டும்.
- முகத்தை நனைத்த பிறகு, மெதுவாக முகத்தை தண்ணீரில் இருந்து உயர்த்தி, மென்மையான துண்டின் உதவியுடன் முகத்தைத் துடைக்கலாம். இதில் சருமத்திற்கு எதிராக, துண்டை முகத்தில் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது எரிச்சலை உண்டாக்கலாம்.
இந்த படிகளில் முகத்தை ஐஸ் தண்ணீரில் நனைப்பதன் மூலம் சருமத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ice Facial Benefits: வெயில் காலத்தில் சருமம் ஜில்லுனு இருக்க ஐஸ் ஃபேஷியல் செய்யுங்க
Image Source: Freepik
Read Next
Aloe Vera for Acne: கரும்புள்ளிகள் உங்கள் அழகை கெடுக்கிறதா? கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க!
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version