Tharpoosani Seeds Benefits For Skin: இன்று பலரும் விரும்பி உண்ணும் பழ வகைகளில் தர்பூசணியும் ஒன்று. குறிப்பாக கோடைக்காலம் என்றாலே தர்பூசணி பழம் தான் அனைவருக்கும் நினைவில் வரும். இதன் நீர்ச்சத்துக்கள் சுவையுடன் கூடிய நீரேற்றத்தைத் தருகிறது. அதன் படி, தர்பூசணி பழம் மட்டுமல்லாமல் அதன் விதைகளும் சருமத்திற்கு நன்மை பயக்கிறது. இதில் பால்மிடிக் அமிலம், ஒலிக் அமிலம் மற்றும் ஸ்டீரிக் அமிலம் போன்ற நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இவை சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தர்பூசணி விதைகள் சருமத்தை இளமையாக வைப்பதுடன் அனைத்து சரும வகைக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதிலிருந்து பெறப்படும் எண்ணெயை எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு பயன்படுகிறது. ஏனெனில் இந்த எண்ணெய் கொழுப்பற்ற மற்றும் இலேசானதாகும். இது சருமத்தில் ஒட்டும் தன்மையை ஏற்படுத்தாததால் இது சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படுவதுடன், மிகவும் பயனுள்ள வழிகளில் செயல்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: முகத்திற்கு மறந்தும் இந்த பொருள்களை கடலை மாவு கூட சேர்த்து யூஸ் பண்ணாதீங்க.
சருமத்திற்கு தர்பூசணி விதைகளைப் பயன்படுத்தும் முறை
சரும ஆரோக்கியத்திற்கு தர்பூசணி விதைகளைப் பயன்படுத்த சில பொருள்களைச் சேர்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- தர்பூசணி விதைகள் - 2 தேக்கரண்டி
- தயிர் - 1 ஸ்பூன்
- முல்தானி மிட்டி - 1 தேக்கரண்டி
- தேன் - 2 முதல் 3 சொட்டுகள்
- ரோஸ் வாட்டர் - 2 முதல் 3 சொட்டுகள்
செய்முறை
- முதலில் தர்பூசணி விதைகளை நன்கு அரைத்து பொடியாகத் தயார் செய்யவும். பின், இந்த பொடியில் அனைத்து பொருள்களையும் கலக்க வேண்டும்.
- இந்த பேஸ்ட் கெட்டியான பிறகு, முகத்தில் தடவ வேண்டும்.
- பின், சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
- இவை சருமத்தை பளபளப்பாக வைப்பதுடன், சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுகிறது.

தர்பூசணி விதை எண்ணெய் தயார் செய்யும் முறை
- பெரும்பாலானோர் தர்பூசணி விதைகளை சருமத்திற்கு எண்ணெய் வடிவில் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணெயை வீட்டிலேயே எளிதான முறையில் தயார் செய்யலாம்.
- இதற்கு முதலில் தர்பூசணி விதைகளை சுத்தம் செய்து வெயிலில் காய வைக்க வேண்டும்.
- இந்த விதைகள் நன்கு உலர்ந்த பிறகு வறுக்க வேண்டும்.
- பிறகு மிக்ஸியில் நன்றாக அரைத்து, துணியின் உதவியுடன் எண்ணெயை அகற்றலாம்.
- பின் இந்த எண்ணெயை வடித்து, அதை பாட்டில் ஒன்றில் வைக்க வேண்டும். இப்போது இந்த எண்ணெயைச் சருமத்தில் தடவலாம். இது அழகை அதிகரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Sunscreen: வெயில் ஸ்டார்ட் ஆயிடுச்சி! வீட்டிலேயே சன்ஸ்கிரீன் லோஷனை இப்படி தயார் செய்யுங்க
சருமத்திற்கு தர்பூசணி விதை தரும் நன்மைகள்
எண்ணெய் சருமத்திற்கு ஏற்ற விதை
தர்பூசணி விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் அல்லது ஃபேஸ் பேக் எண்ணெய், எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம், சருமம் ஒட்டாமல் இருப்பதுடன் சருமம் ஏராளமான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதாகவும் அமைகிறது.
முதுமையிலிருந்து விடுபட
தர்பூசணி விதைகள் முதுமை எதிர்ப்புப் பிரச்சனைக்குப் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள ஒலிக் அமிலம் மற்றும் லினோலிக் போன்றவை சருமத்திலிருந்து நச்சுக்களை அகற்ற உதவுகிறது.
முகப்பரு பிரச்சனையிலிருந்து விடுபட
சருமத்தில் பருக்கள், தழும்புகள் போன்ற பிரச்சனைகள் இருப்பின், தர்பூசணி விதைகளை முகத்தில் தடவலாம். இந்த விதைகளில் உள்ள லினோலிக் அமிலம் சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. மேலும் இதனுடன் பல்வேறு வகையான பிரச்சனைகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
தர்பூசணி விதையினாலான எண்ணெய் அல்லது ஃபேஸ் பேக்கை சருமத்தில் தடவலாம். இது சருமத்திற்கு எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது. எனினும், தர்பூசணி அல்லது அதன் விதைகளுக்கு ஒவ்வாமை அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Oats For Skin: சருமத்தைப் பொலிவாக வைக்க ஓட்ஸ் உடன் இந்த பொருளை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க
Image Source: Freepik