Things To Avoid Applying On Face With Gram Flour: சருமத்தை அழகாக வைக்க ஆண்கள், பெண்கள் என பலரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெரும்பாலானோர் இயற்கையான முறைகளையே விரும்புவர். அந்த வகையில் பல்வேறு அழகு சாதன மற்றும் தோல் பராமரிப்புப் பொருள்களில் கடலை மாவு உபயோகிக்கப்படுகிறது. இதில் வீட்டில் கிடைக்கும் கடலை மாவையே இன்று பலர் பயன்படுத்துகின்றனர்.
கடலை மாவைப் பயன்படுத்துவது சருமம் தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. இது தவிர, முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவுகிறது. இதற்கு கடலை மாவுடன் சில இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தலாம். ஆனால் கடலை மாவுடன் சில பொருள்களைச் சேர்த்து பயன்படுத்தக் கூடாது. இதில் கடலை மாவுடன் கலந்து முகத்தில் பயன்படுத்தக் கூடாதவற்றைக் குறித்து மேக் ஓவரின் அழகு நிபுணரான பூஜா கோயல் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Pedicure Home Remedies: பாதங்களை அழகாக்க மற்றும் பளபளப்பாக வைக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?
கடலை மாவுடன் கலந்து முகத்தில் பயன்படுத்தக் கூடாதவை
இதில் கடலை மாவுடன் கலந்து சருமத்திற்கு பயன்படுத்தக் கூடாத பொருள்களையும், அதனால் ஏற்படும் பிரச்சனை குறித்தும் காணலாம்.
முல்தானி மிட்டி
இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒன்றாகும். முல்தானி மிட்டியைப் பயன்படுத்துவது அதிகப்படியான ஈரப்பதத்தை நீக்கி, சருமத்தின் ஒட்டும் தன்மையை நீக்குகிறது. கடலை மாவு மற்றும் முல்தானி மிட்டியைக் கலந்து பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மை பயக்கும். எனினும், வறண்ட சருமம் உடையவர்கள் கடலை மாவுடன் முல்தானி மிட்டியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது சருமத்தின் வறட்சியை அதிகரிக்கலாம். இதனால் முகத்தில் எரிச்சல் ஏற்படும்.
இந்த பதிவும் உதவலாம்: Coconut oil For Skin: 50 வயதிலும் சருமம் ஜொலி,ஜொலிக்க… தேங்காய் எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்க!
எலுமிச்சைச் சாறு
உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் எலுமிச்சை சாறு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கடலை மாவு உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனினும் கடலை மாவுடன் எலுமிச்சைச் சாறு பயன்படுத்துவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இதற்கு எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலமே காரணமாகும். சாதாரன சருமத்தைக் கொண்டவர்கள், எலுமிச்சைச் சாற்றைப் பயன்படுத்தலாம். எனினும், அதிகளவு எலுமிச்சைச் சாறு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை சருமத்திற்கு இன்று அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். இதற்கு மஞ்சள், பேக்கிங் சோடா, கடலை மாவு கலந்த ஃபேஸ் பேக் பயன்படுத்துவர். ஆனால், இது சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கும். பேக்கிங் சோடாவை பயன்படுத்துவது முகப்பருவை ஏற்படுத்தலாம். உணர்திறன் வாய்ந்த சருமமாக இருப்பின், கடலை மாவுடன் பேக்கிங் சோடா பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
கடலை மாவை முகத்திற்குத் தடவும் போது, இதனுடன் மஞ்சள், கற்றாழை ஜெல் அல்லது தயிர் போன்றவற்றைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். இந்த பொருள்கள் அனைத்தும் அனைத்து வகையான சருமத்திற்கும் நன்மை பயக்கும் விதத்தில் அமைகிறது. எனினும், முகத்தில் எடையும் தடவுவதற்கு முன் டெஸ்ட் பேட்ச் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Oats For Skin: சருமத்தைப் பொலிவாக வைக்க ஓட்ஸ் உடன் இந்த பொருளை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க
Image Source: Freepik