How to use besan and raw milk for face: இன்றைய மோசமான வாழ்க்கை முறை, உணவு முறைகள் காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் சரும பிரச்சனைகளும் அடங்கும். இதனால் சரும வறட்சி, பருக்கள், கரும்புள்ளிகள் உள்ளிட்டவை ஏற்படலாம். மேலும், இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க சிலர் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சரும பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதில் சேர்க்கப்படும் சில இரசாயனங்கள் சரும ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கலாம். இதனைத் தவிர்க்க இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் கையாள்வது நல்லது.
மேலும் சருமத்தைப் பளபளப்பாக்க சோப்புகள், பாடி வாஷ் மற்றும் ஷவர் ஜெல் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால், இது சருமத்தை சுத்தப்படுத்துவதற்கான தயாரிப்புகளே தவிர, இவை பல இயற்கை எண்ணெய்களை நீக்கி, சருமத்தை உலர்த்தும் மற்றும் அரிப்பு ஏற்படுத்தும் எரிச்சலூட்டும் பொருட்களாகும். எனவே நாம் சருமத்திற்கு தீங்கு தராத வரையில் அமையும் இயற்கை முறைகளைக் கையாளலாம். அந்த வகையில் சருமத்திற்கு கடலை மாவு மற்றும் பால் சேர்த்து தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக் ஒரு சிறந்த தேர்வாகும். இதில் சருமத்திற்கு கடலை மாவு, பச்சை பால் ஃபேஸ் பேக் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Turmeric milk for skin: எந்த கறையும் இல்லாத பளபளப்பான சருமத்தைத் தரும் கோல்டன் பால்!
சருமத்திற்கு கடலை மாவு மற்றும் பச்சைப் பால் தரும் நன்மைகள்
சருமத்திற்கு மிதமான, இயற்கையான மாற்றாக விரும்புபவர்கள் இந்த கடலை மாவு, பச்சைப்பால் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்.
கடலை மாவு ஆனது சருமத்திற்கு உகந்த ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ஒரு ஆற்றல்மிக்க மூலப்பொருள் ஆகும். இது சருமத்திற்கு இயற்கையான எக்ஸ்ஃபோலியண்டாக செயல்படுகிறது. மேலும் இவை இறந்த சரும செல்களை அகற்றி மென்மையான, பிரகாசமான சருமத்தைத் தருகிறது. மேலும், இது சருமத்தின் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாகவும் அமைகிறது.
அதே போல, சருமத்திற்கு பச்சைப் பால் பயன்படுத்துவதும் ஒரு சிறந்த தேர்வாகும். பச்சை பாலில் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இவை சருமத்தை மென்மையாக வைக்கவும், ஈரப்பதமாக வைப்பதற்கு மற்றும் சருமத்திற்கு ஊட்டமளிக்கவும் உதவுகிறது. இந்த இரண்டு பொருள்களின் கலவையானது சருமத்தை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், நீரேற்றமாக மற்றும் மென்மையாக வைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் சருமம் புத்துணர்ச்சியுடன் தோற்றமளிக்கும்.
சருமத்திற்கு கடலை மாவு, பச்சைப் பால் பயன்படுத்துவது எப்படி?
க்ளென்சர்
கடலை மாவு 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதில் 2 முதல் 3 டேபிள் ஸ்பூன் பச்சைப் பால் சேர்க்க வேண்டும். இந்த கலவையை ஒரு மென்மையான பேஸ்ட்டாக கிளற வேண்டும். தேவைக்கு ஏற்றாற்போல, பொருள்களின் விகிதத்தை சரி செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Skin Whitening: வெறும் 7 நாளில் வெள்ளையாக கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!
மசாஜ் செய்வது
பிறகு சிறிது கை அழுத்தத்தைப் பயன்படுத்தி, முகம் மற்றும் உடலின் மேற்பரப்பு முழுவதும் பேஸ்ட்டைத் தடவி, ஒரு வட்ட இயக்கத்தில் சருமத்தை மசாஜ் செய்யலாம். இந்த கலவை சருமத்தில் 2 முதல் 3 நிமிடங்களுக்கு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது.
கழுவுதல்
மசாஜ் செய்த பிறகு, சருமத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். எனவே சருமத்தை மெதுவாக துடைக்க வேண்டும். மேலும் தேவைப்பட்டால் லேசான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.
எத்தனை முறை பயன்படுத்தலாம்?
சருமத்தை சுத்தமாகவும், மென்மையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சோப்புக்குப் பதிலாக வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இயற்கையான சுத்தப்படுத்தியைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சருமத்தில் வழக்கமான முன்னேற்றம் மற்றும் பிரகாசத்தைக் காணலாம். இது இயற்கையான பொருள்களுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட சரும பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்துவது மென்மையான, பளபளப்பான சருமத்திற்கு இன்றியமையாததாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Besan Face Packs: நீங்க ஒரே வாரத்தில் வெள்ளையாகணுமா? கடலை மாவை இப்படி உஸ் பண்ணுங்க!
Image Source: Freepik