Expert

Oats For Skin: சருமத்தைப் பொலிவாக வைக்க ஓட்ஸ் உடன் இந்த பொருளை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க

  • SHARE
  • FOLLOW
Oats For Skin: சருமத்தைப் பொலிவாக வைக்க ஓட்ஸ் உடன் இந்த பொருளை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க

இவ்வாறு ஓட்ஸை சருமத்திற்கு பயன்படுத்துவது பளபளப்பைத் தருகிறது. வீட்டிலேயே ஓட்ஸ் ஸ்க்ரப் செய்வது மிகவும் எளிதானதாகவும், எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாத வகையில் அமையும். இதில் நொய்டாவில் உள்ள ஸ்டுடியோ 25 பியூட்டி பார்லரின் அழகுக்கலை நிபுணர் பூஜா அவர்கள் வீட்டிலேயே ஓட்ஸ் ஸ்க்ரப் செய்யும் முறைகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Sunflower Seeds Skin Benefits: சருமத்தில் இந்த பிரச்சனை எல்லாம் வராமல் இருக்க சூரியகாந்தி விதை ஒன்னு போதும்

ஓட்ஸ் ஃபேஸ் ஸ்க்ரப் செய்யும் முறை

ஓட்ஸ் ஃபேஸ் ஸ்க்ரப் செய்ய வீட்டிலேயே உள்ள சில பொருள்களைக் கொண்டு தயார் செய்யலாம்.

தேன் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் ஸ்க்ரப்

ஓட்ஸ் மற்றும் தேன் இரண்டுமே முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதில் பெரிதும் நன்மை பயக்கும். இதற்கு 2 டீஸ்பூன் அளவு ஓட்ஸ் பொடியுடன், 1 டீஸ்பூன் தேன் கலந்த பேஸ்ட்டைத் தயார் செய்ய வேண்டும்.

பின், இதை முகம் மற்றும் கழுத்து முழுவதும் மசாஜ் செய்து சுத்தம் செய்யலாம். அதன் பிறகு முகத்தை சுத்தமான நீரில் கழுவிக் கொள்ளலாம். தேன் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதமாக்கவும், ஓட்ஸ் சருமத்தை மென்மையாக வைக்கவும் உதவுகிறது.

தயிர் மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப்

இவை இரண்டுமே சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது. இந்த ஃபேஸ் ஸ்க்ரப் செய்ய 2 ஸ்பூன் அளவு ஓட்ஸூடன், 2 ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட்டை தயார் செய்யலாம்.

பிறகு இந்த கலவை கொண்டு முகத்தை மசாஜ் செய்து சுத்தம் செய்ய வேண்டும். தயிரானது இயற்கையாகவே சருமத்தை ஈரப்பதமாக்கி, சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது. மேலும் இந்த ஃபேஸ் ஸ்க்ரப் நிறமிகளைப் போக்கவும் உதவுகிறது.

கிரீமுடன் ஓட்ஸ்

சருமத்திற்கு கிரீம் மிகவும் நன்மை பயக்கும். இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பிற்கு 2 டீஸ்பூன் அளவு கரடு முரடான ஓட்ஸ் பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் ஃப்ரெஷ் கிரீம் கலந்து பேஸ்ட்டைத் தயார் செய்ய வேண்டும். இந்த பேஸ்ட்டைக் கொண்டு முகம் மற்றும் கழுத்தை மசாஜ் செய்து சுத்தம் செய்யலாம்.

இது சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்க உதவுகிறது ஓட்ஸ் கிரீம் ஸ்க்ரப் பயன்படுத்துவது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, இயற்கையான பளபளப்பைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Pedicure Home Remedies: பாதங்களை அழகாக்க மற்றும் பளபளப்பாக வைக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

ஓட்ஸ் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் ஸ்க்ரப்

இந்த ஃபேஸ் ஸ்க்ரப் செய்ய, 2 ஸ்பூன் அளவிலான ஓட்ஸை நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் 1 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, ஃபேஸ் ஸ்க்ரப் பேஸ்ட்டை தயார் செய்யலாம்.

இதைக் கொண்டு முழு முகத்தையும் லேசாக மசாஜ் செய்து சுத்தம் செய்யலாம். அதன் பிறகு முகத்தை புதிய நீரில் கழுவிக் கொள்ளலாம். ஓட்ஸ் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் ஸ்க்ரப் சருமத்தை பளபளப்பாக வைப்பதுடன், இறந்த சருமத்தை அகற்ற உதவுகிறது.

தேங்காய் எண்ணெயுடன் ஓட்ஸ் ஃபேஸ் ஸ்க்ரப்

தேங்காய் எண்ணெய் மற்றும் ஓட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்கரப் வறண்ட சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதைச் செய்ய, 2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து பேஸ்ட்டைத் தயார் செய்யலாம்.

இப்போது ஃபேஸ் ஸ்க்ரப்பைக் கொண்டு முகத்தை மெதுவாக மசாஜ் செய்யலம். அதன் பிறகு, இளநீரால் சுத்தம் செய்யலாம். ஓட்ஸ் தேங்காய் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது சருமத்தை ஈரப்பதமாகவும், இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது.

ஓட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஃபேஸ் ஸ்க்ரப்களை வாரத்திற்கு ஒன்று அல்லது இரு முறை பயன்படுத்துவது, இறந்த சரும செல்களை அகற்றி, பளபளப்பாக்குகிறது. எனினும், இந்த ஸ்க்ரப்களை பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. வேறு ஏதேனும் சரும பிரச்சனைகள் இருப்பின், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு பயன்படுத்த வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Rose Flower For Skin: சரும பொலிவுக்கு ரோஜாப்பூவை எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Pedicure Home Remedies: பாதங்களை அழகாக்க மற்றும் பளபளப்பாக வைக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

Disclaimer