Rose Flower For Skin: சரும பொலிவுக்கு ரோஜாப்பூவை எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Rose Flower For Skin: சரும பொலிவுக்கு ரோஜாப்பூவை எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?

அந்த வகையில் முகத்திற்கு இயற்கையான பளபளப்பைப் பெற ரோஜா பூக்களைப் பயன்படுத்தலாம். ரோஜா பூக்களில் உள்ள சத்துக்கள் பல்வேறு சரும பிரச்சனைகளை நீக்கலாம். இது இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறத்தைத் தருகிறது. இதில் நொய்டாவில் ஸ்டுடியோ 25 சலோன், செக்டர் 51, இயற்கையான பொலிவு பெற ரோஜா இதழ்கள் பயன்படுத்தும் முறை குறித்து பூஜா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Sunflower Seeds Skin Benefits: சருமத்தில் இந்த பிரச்சனை எல்லாம் வராமல் இருக்க சூரியகாந்தி விதை ஒன்னு போதும்

இயற்கையான பொலிவு பெற ரோஜா பூக்களைப் பயன்படுத்தும் முறை

பாதாம் எண்ணெயுடன் ரோஜா பூக்கள்

வறண்ட சருமம் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனையாகும். இதனால் சில சமயங்களில் சருமம் வெடிக்கத் தொடங்குகிறது. இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க பாதாம் எண்ணெயுடன் ரோஜா பூக்களைப் பயன்படுத்தலாம். புதிய சிவப்பு ரோஜா பூக்களைப் பேஸ்ட்டாகத் தயார் செய்து, அதில் சில துளிகள் பாதாம் எண்ணெயைச் சேர்த்து கிரீம் போன்று உருவாக்க வேண்டும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவும் முன் முகத்தை சுத்தம் செய்து அதன் பிறகு பாதாம் எண்ணெய், ரோஸ் கலவையைக் கொண்டு முகத்தை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 2 முதல் 3 நிமிடம் மசாஜ் செய்த பிறகு, பேஸ்ட்டை முகத்தில் தடவி பிறகு காய்ந்ததும் சுத்தம் செய்ய வேண்டும். பின் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

ரோஜா பூக்கள் பேஸ்ட்

முகத்தில் இளஞ்சிவப்பு பிரகாசத்தைப் பெற ரோஜா மலர்களைப் பயன்படுத்தலாம். இதற்கு ரோஜா பூக்களின் இதழ்களைப் பிரித்து பேஸ்ட்டாக தயார் செய்யவும். இது வலுவான நறுமணம் கொண்டவையாகும். இந்த பூக்களைக் கொண்டு தயார் செய்யப்படும் பேஸ்ட்டை முகத்தில் தடவுவது இயற்கையான பிரகாசத்தை அளிப்பதுடன், புத்துணர்ச்சியைத் தருகிறது. இந்த பேஸ்ட்டை முகத்தில் 10 நிமிடம் தடவி முகத்தை லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது முகத்தில் இரத்த ஓட்டம் சீராகி பொலிவு பெறலாம். சிறந்த முடிவுக்கு வாரத்திற்கு இரு முறையாவது பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Sandalwood For Skin: கோடை கால சரும பிரச்சனைகளை விரட்ட… இந்த இரண்டு பொருட்கள் போதும்!

கிரீமுடன் ரோஜாக்கள்

முகத்திற்கு இயற்கையான பொலிவைத் தர, கிரீமுடன் ரோஜா பூக்களைப் பயன்படுத்தலாம். இதற்கு சிவப்பு ரோஜா இதழ்களைப் பயன்படுத்தலாம். சிவப்பு ரோஜா இதழ்களுடன் கிரீமுடன் சேர்த்து பேஸ்ட்டை உருவாக்கி முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவலாம். அதன் பிறகு 5 நிமிடங்கள் கழித்து லேசான கைகளால் முகத்தை மசாஜ் செய்யலாம்.

பின்னர், புதிய தண்ணீரில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். கிரீம் கொண்டு ரோஜா பூக்கள் பயன்படுத்துவது சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தருகிறது.கிரீம் மற்றும் ரோஜா பூக்களின் வழக்கமான பயன்பாடு முகத்திற்கு சிறந்த முடிவுகளைத் தரலாம்.

இந்த வழிகளில் ரோஜா பூக்களைச் சருமத்திற்க் பயன்படுத்தலாம். மேலும் சருமம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே பயன்படுத்த வேண்டும். ரோஜா பூக்களை முகத்தில் பயன்படுத்தும் முன், பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Orange Peel For Skin: இது தெரிஞ்சா இனி ஆரஞ்சு தோலை தூக்கி போட மாட்டீங்க!

Image Source: Freepik

Read Next

நெய் முகப்பரு பிரச்சனையை நீக்குமா? முகத்தில் அப்ளை செய்யலாமா?

Disclaimer

குறிச்சொற்கள்