கோடைகாலத்தில் முகப்பரு மற்றும் சரும வறட்சி மிகப்பெரிய பிரச்சனையாகும். எவ்வளவுதான் சன்ஸ்கிரீன் போட்டாலும் சில சமயம் பலனில்லை. மேலும், வெளியில் சென்றவுடன் சுட்டெரிக்கும் வெயிலால் முகம் வாடி வதங்குவது வழக்கமானது. இதை தவிர்க்க வீட்டிலேயே செய்ய பல வழிகள் உள்ளன. இவற்றில் ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை பராமரிப்பது மிகப்பெரிய சவாலாகும். தற்போது கோடை காலம் வருவதற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. இனி கோடை தொடங்கிவிட்டால் உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, சரும ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கோடை காலத்தில் ஏற்படக்கூடிய முகப்பரு, கரும்புள்ளி, சரும வறட்சி, சன் டான் போன்ற பிரச்சனைகளை, வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு சமாளிப்பது எப்படி என இக்கட்டுரை மூலம் பார்க்கலாம்…
இந்த இரண்டு பொருட்கள் போதும்:
கோடை கால சரும பிரச்சனைகளை சமாளிக்க இரண்டு பொருட்கள் மட்டுமே தேவை. இவை பால் மற்றும் சந்தனம். இவை இரண்டையும் தனியாகவோ அல்லது ஒன்றாகவோ பயன்படுத்தலாம்.
ஒன்றாகப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சந்தனம் முகத்திற்கு குளிர்ச்சி தரும். இது முகத்திற்கு பல நன்மைகளை தருகிறது. இது பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் முற்றிலும் இயற்கையான முறையாகும்.
பால்:

பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில் பால் பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். இது சருமத்திற்கு மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. சுருக்கங்கள் மற்றும் தளர்வான சருமத்தைப் போக்க உதவுகிறது. பாலை முகத்தில் தடவினால் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகத்தை பிரகாசமாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி?
இதைத் தயாரிக்க, பாலில் சந்தனத்தை சேர்த்து முகத்தில் தடவினால் போதும். சூடுபடுத்திய பாலை விட காய்ச்சாத பால் சிறந்தது. குளிர்ந்த பால் என்றால் மிகவும் நல்லது. அதேபோல் சந்தனத்தை நல்ல நிலையில் பயன்படுத்த வேண்டும். வீட்டில் தயாரிக்கப்பட்ட சந்தனம் மிகவும் நன்மை பயக்கும். இதை வகையான சருமத்தின் மீதும் எத்தனை முறை வேண்டுமானாலும் தடவலாம்.
இந்த கலவை பல நன்மைகளைக் கொண்டுள்ளது. கரும்புள்ளிகள், முகப்பருக்களை நீக்கி சோர்வுற்ற சருமத்தை புத்துயிர் பெற உதவுகிறது. மேலும் இந்த ஃபேஸ் பேக் சன் டான் மற்றும் கறைகளுக்கு மிகவும் நல்லது. கோடைகால சருமப் பராமரிப்புக்கு மிகவும் நல்லது.
Image Source: Freepik