Sat Sep 12, 2026 | 02:49 AM IST

Summer SkinCare: கோடை சரும பிரச்சனையை போக்க வெள்ளரிக்காய், மஞ்சள் போதும்.. இதை செய்யுங்க!

Summer SkinCare: கோடை காலத்தில் முகத்தில் பருக்கள் தோன்றும். இதற்கு முகத்தை சுத்தம் செய்யாதது தான் பெரிய காரணம். உங்கள் முகத்தை தூசியிலிருந்து பாதுகாக்காமல், சுத்தம் செய்யாமல் இருந்தால், பருக்கள் பிரச்சனை உங்களை அடிக்கடி தொந்தரவு செய்யும். சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் உள்ளவர்களுக்கு எளிதில் பருக்கள் வரும்.

குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றாதது, கோடையில் சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றாதது போன்றவைகள் இதற்கு பிரதான காரணங்கள். இந்த காரணங்களால் கோடையில் முகப்பரு பிரச்சனை அதிகரிக்கிறது. நீங்கள் முகப்பரு இல்லாத சருமத்தைப் பெற விரும்பினால், கோடை நாட்களில் சில வழிகளை பின்பற்றுவது அவசியம்.

முகப்பரு இல்லாத சருமத்தைப் பெற வெள்ளரிக்காய் மற்றும் மஞ்சள் பேருதவியாக இருக்கும். இதை பயன்படுத்தி ஃபேஸ்பேக் செய்வது எப்படி, இதை எப்படி முகத்தில் தடவலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பருக்கள் இல்லாத சருமத்திற்கான ஃபேஸ் பேக்

தேவைப்படும் பொருள்

1/2 கப் நறுக்கிய வெள்ளரி

1 தேக்கரண்டி மஞ்சள்

ரோஸ் வாட்டர் (விரும்பினால்)

கோடை ஃபேஸ் பேக் செய்முறை

நறுக்கிய வெள்ளரிக்காயை சுத்தமான கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

இப்போது அதில் மஞ்சள் சேர்க்கவும்.

தேவைப்பட்டால் அதில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்துக் கொள்ளவும்.

ரோஸ்வாட்டர் சருமத்தை குளிர்விக்கும்.

இதை ஒரு பேஸ்ட் வடிவில் நன்றாக கலக்கவும்.

இப்போது இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும்.

இதற்கு முன்புவரை உங்கள் தோல் சுத்தமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சுமார் 20 நிமிடம் வரை இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் வைக்கவும்.

பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும்.

இந்த ஃபேஸ் பேக் உங்கள் முகத்தை முற்றிலும் குணப்படுத்த உதவும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் சருமத்தை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

வெள்ளரி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் நன்மைகள்

வெள்ளரி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்கை சருமத்தில் தடவினால் பல நன்மைகள் கிடைக்கும். வெள்ளரி மற்றும் மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. வைட்டமின் சி வெள்ளரிக்காயில் உள்ளது மற்றும் மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களின் உதவியுடன் சருமத்தின் பொலிவை அதிகரிக்கலாம்.

வெள்ளரிக்காய் மற்றும் மஞ்சள் கொண்ட ஃபேஸ் பேக்கில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது சருமத்தை சுத்தமாக வைத்திருக்கும் மற்றும் முகப்பரு பிரச்சனையை நீக்குகிறது. மஞ்சளின் உதவியால், சருமம் பொலிவு பெறுவதுடன், வெள்ளரிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் உதவியுடன், சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கின் உதவியுடன், மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் பிரச்சனையும் நீங்கும்.

கோடை கால சரும பிர்சசனைகளை இந்த வழிகள் மூலம் எளிதாக நீக்கலாம். உங்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான கூடுதல் தகவல் வேண்டுமென்றால் தொடர்ந்து OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.

Pic Courtesy: FreePik

Read Next

Cucumber Face Mask: வெயில் காலத்திலும் உங்க முகம் பரு இல்லாமல் பளபளப்பாக இருக்கணுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

M Karthick

M Karthick

Senior Sub Editor

செய்தியாளர், செய்தி ஆசிரியர் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். ஆரோக்கிய நலன், அழகு பராமரிப்பு, பெற்றோர் குழந்தைகள் நலன், சினிமா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து கற்றறிந்து எழுத விரும்புபவன். தான் பதிவிடும் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். கருத்தரங்கில் பங்கேற்கவும் புத்தகம் படிக்கவும் பிடிக்கும். தனது செய்தியை படிக்கும் பயனருக்கு அதுசார்ந்த தகவலில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content