Expert

Pedicure Home Remedies: பாதங்களை அழகாக்க மற்றும் பளபளப்பாக வைக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Pedicure Home Remedies: பாதங்களை அழகாக்க மற்றும் பளபளப்பாக வைக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?


பளபளப்பான பாதங்களைப் பெற வீட்டில் பெடிக்யூர் செய்வது எப்படி?

மென்மையான பாதங்களைப் பெற வீட்டிலேயே எளிமையான முறையில் பெடிக்யூர் செய்வது எப்படி என்பது குறித்து காணலாம்.

படி 1: பேக்கிங் சோட கலந்த தண்ணீரில் கால்களை ஊறவைப்பது

பளபளப்பான பாதங்களைப் பெற விரும்புபவர்கள், வீட்டில் பெடிக்யூர் செய்யும் போது முதலில் கால்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு, 1 டம்ளர் வெந்நீரில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதன் பிறகு, இந்த நீரில் கால்களை நனைத்து, அவற்றை சுமார் 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பேக்கிங் சோடாவை பயன்படுத்துவது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, பாதங்களை மென்மையாக மற்றும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sunflower Seeds Skin Benefits: சருமத்தில் இந்த பிரச்சனை எல்லாம் வராமல் இருக்க சூரியகாந்தி விதை ஒன்னு போதும்

படி 2: பாதங்களை தக்காளியால் தேய்ப்பது

கால்களை கழுவிய பிறகு, தக்காளியைக் கொண்டு ஸ்க்ரப் செய்ய வேண்டும். இதற்கு பழுத்த தக்காளி ஒன்றை எடுத்து, அதை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது வெட்டிய தக்காளி துண்டுகளில் சிறிது உப்பு தடவி, பிறகு பாதங்களை மெதுவாக தேய்க்க வேண்டும். அதன் பிறகு கால்களைக் கழுவிக் கொள்ளலாம். தக்காளியில் உள்ள இயற்கை அமிலங்கள் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. மேலும் உப்பு சருமத்தின் இறந்த செல்களை நீக்கி மென்மையாக மற்றும் பளபளப்பாக மாற்றுகிறது.

படி 3: தயிர் மற்றும் கோதுமை மாவு பேக் தடவுவது

அதன் பிறகு, கோதுமை மாவு, தயிர், தேன் போன்றவற்றை ஒரு கலவையாக தயார் செய்து, அதை கால்களில் சம அளவில் தடவ வேண்டும். பின் இதை 15 நிமிடங்களுக்குப் பிறகு, பாதங்கள் சற்று ஈரமாக இருப்பின் அவற்றைத் தண்ணீரில் கழுவி துண்டு பயன்படுத்தி கால்களின் ஈரப்பதத்தை நீக்கி உலர வைக்க வேண்டும்.

படி 4: கால்களை ஈரப்பதமாக்குதல்

பாதங்களைக் கழுவி உலர்த்திய பிறகு மாய்ஸ்சரைசர் அல்லது ஆயில் கொண்டு பாதங்களை மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது சருமத்தை ஈரப்பதமாக்க வைத்திருக்க உதவும்.

வீட்டிலேயே எளிமையான முறையில் இயற்கைப் பொருள்களைக் கொண்டு பெடிக்யூர் செய்வது சருமத்தின் இறந்த செல்களை அகற்றி, பாதங்களை மென்மையாக மற்றும் பளபளப்பாக மாற்றுகிறது. மேலும் இது பாதங்களில் உள்ள தோல் பதனிடுதலை நீக்குவதுடன், நீரேற்றமாக வைக்கவும் உதவுகிறது. எனினும், இந்த பொருள்களைப் பயன்படுத்தும் முன்னதாக, ஒவ்வாமை, எரிச்சல் போன்றவற்றைத் தவிர்க்க பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Rose Flower For Skin: சரும பொலிவுக்கு ரோஜாப்பூவை எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Sunscreen Facts: கோடை காலத்தில் சன்ஸ்கிரீனை எவ்வளவு, எப்படி பயன்படுத்த வேண்டும்?

Disclaimer