How To Whiten Feet Instantly: அழகு பராமரிப்பு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறையாக மாறிவிட்டது. இதில் பெரும்பாலான நபர்கள் தங்கள் முகத்தை எப்போதும் சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க விரும்புவர். ஆனால், கால்களை சுத்தம் செய்வதில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். இது உண்மையில் சரியா? நாம் எப்போதும் கால்களையும் சுத்தம் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
நாம் ஒருவரைப் பார்க்கும் போது முதலில் முகத்தைப் பார்ப்பதைத் தொடர்ந்து அடுத்து பார்ப்பது கால்களைத் தான். இந்நிலையில் பாதங்கள் அழுக்காக இருக்கும் போது அது அவர்களை அசௌகரியமாக உணரவைக்கும். அதிலும் நம் உடலின் ஒட்டுமொத்த எடையையும் தாங்குவது பாதங்கள் தான். எனவே பாதங்களை எப்போதும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
பாதங்கள் பளபளப்பாக இருக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்
சிலர் பாதங்களை பளபளப்பாக மாற்ற வேண்டும் என்று சந்தையில் கிடைக்கும் கிரீம், லோஷன் போன்றவற்றைப் பயன்படுத்துவர். ஆனால், இது போன்ற பொருள்களில் இரசாயனங்கள் கலந்திருக்கக் கூடும். இதனால் பக்க விளைவுகள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க சில இயற்கையான வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Hibiscus Powder: முகப்பொலிவுக்கும், முடி அடர்த்திக்கும் உதவும் செம்பருத்தி பவுடர்! எப்படி தயார் செய்யலாம்?
எலுமிச்சைச் சாறு மற்றும் பேக்கிங் சோடா
பாதங்களைப் பளபளப்பாகவும், சுத்தமாகவும் மாற்றுவதில் எலுமிச்சைச் சாறு, பேக்கிங் சோடா இரண்டுமே உதவுகின்றன. இந்த கலவை தயார் செய்ய, முதலில் ஒரு சிட்டிகை பேக்கிங் பவுடர், ஒரு சிட்டிகை சர்க்கரை மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். இந்த கலவையைப் பாதங்களில் தடவி சுமார் 10 நிமிடம் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு பிரஷ்ஷைப் பயன்படுத்தி கால்களை சுத்தம் செய்யலாம். இவ்வாறு பாதங்களை சுத்தம் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி, துண்டு ஒன்றால் துடைக்க வேண்டும்.
காபி மற்றும் தேங்காய் எண்ணெய்
காபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது தலை முதல் கால் வரை பயன்படுத்தக்கூடிய பல்துறை எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது. இதற்கு பாத்திரம் ஒன்றில் 2 டீஸ்பூன் காபி தூளில் 2 2 டீஸ்பூன் ஆர்கானிக் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையைக் கால்களில் தடவி சுமார் 10-15 நிமிடங்கள் விரல் நுனியின் உதவியுடன் மெதுவாக தேய்க்க வேண்டும். அதன் பிறகு, காலை வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் உலர வைக்கலாம்.
சர்க்கரை மற்றும் எலுமிச்சைச் சாறு
பாதத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கான சிறந்த வீட்டு வைத்தியமாக எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்க்ரப் உதவுகிறது. இதில் எலுமிச்சையானது பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்ததாகவும், மேலும் இதன் சிட்ரிக் அமிலம் இயற்கையான ஒளிரும் சருமத்தைத் தரக்கூடியதாகவும் அமைகிறது. மேலும் சர்க்கரை ஒரு மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்பட்டு, சருமத்திலிருந்து இறந்த செல்களை அகற்றுகிறது. இந்தக் கலவை தயார் செய்வதற்கு 1 எலுமிச்சை சாறுடன் 3 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து பாதங்களில் தடவ வேண்டும். இதை சுமார் 5-7 நிமிடங்கள் வட்ட இயக்கங்களில் ஸ்க்ரப் செய்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். அதன் பிறகு இதைத் தண்ணீரில் கழுவி உலர வைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Rosewater Benefits: சருமம், முடிக்கு ரோஸ் வாட்டர் தரும் நன்மைகள்! எப்படி பயன்படுத்துவது?
தயிர் மற்றும் கடலை மாவு
தயிர் மற்றும் கடலை மாவு இரண்டுமே கரும்புள்ளிகள் மற்றும் சீரற்ற தோல் பதனிடுதல் போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது. கடலை மாவு சருமத்திற்கு பிரகாசமான பண்புகளைத் தருவதுடன், தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது. இந்த கலவை தயார் செய்ய முதலில் ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் கடலை மாவுடன் 3 டீஸ்பூன் தயிர் சேர்த்து மென்மையான கெட்டியான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இதை கால்களில் தடவி சுமார் அரை மணி நேரம் வைத்து உலர விட வேண்டும். இப்போது விரல் நுனியில் மெதுவாக தேய்க்கலாம். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவி உலர்த்த வேண்டும்.
சந்தனம் மற்றும் தேன்
இவை இரண்டுமே சருமத்தை மென்மையாக்கும் மற்றும் ஒளிரும் நிறத்தைத் தரக்கூடிய சிறந்த சரும பராமரிப்புப் பொருள்களாகும். தேன் சருமத்திற்கு ஆழமான ஊட்டச்சத்துக்களை அளிப்பதுடன், கால்களை நீரேற்றமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த ஸ்க்ரப் தயார் செய்ய 2 டீஸ்பூன் சந்தன பவுடருடன், 1 டீஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும். பின் இந்தக் கலவையை கால்கள் மற்றும் பாதத்தில் தடவி 30 நிமிடங்கள் வைக்கவும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவி விடலாம்.
இது போன்ற சிறந்த வீட்டு உபயோகப் பொருள்களைப் பயன்படுத்தியே பாதங்களைப் பட்டு போன்று மென்மையாக்கலாம். எனினும், இந்தப் பொருள்களைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வதன் மூலம் எரிச்சல், அரிப்பு போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cracked Heels: குளிர்காலத்தில் பாத வெடிப்புடன் போராட்டமா? இந்த வைத்தியம் போதும்!
Image Source: Freepik