$
Home Remedies For Cracked Heels In Winter: குளிர்காலம் வந்தாலே போதும்.. சருமம் தொடர்பான எல்லா பிரச்னைகளும் பறந்து வந்துடும். அதில் ஒன்று பாத வெடிப்பு. இது பெரிய தொல்லையாக இருக்கும். இதனால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.
பாத வெடிப்புக்கு காரணம், பாதங்களை சரியாக சுத்தம் செய்யாதது, உடல் பருமன், மண்ணில் அதிக நேரம் நடப்பது போன்றவை தான். குறிப்பாக குளிர்காலத்தில் இந்த பிரச்னையால் பலரும் பாதிக்கப்படுவார்கள். இதனை குணப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இது குறித்து இங்கே காண்போம்.

* பாதங்களில் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் பாதங்களில் அழுக்குகள் தேங்குவதும் வறட்சியும் தான். எனவே, தினமும் பாதங்களை சுத்தமாக கழுவி, மென்மையான துணியால் துடைத்து, மாய்ஸ்சரைசர் தடவவும்.
* பாதங்கள் மூழ்கும் வரை ஒரு தொட்டியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து அதில் பாதங்களை வைக்கவும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு விரிசல் ஏற்பட்ட பகுதியை மெதுவாகத் தேய்க்கவும். இது இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், பாக்டீரியாவையும் விரட்டுகிறது.
* வாழைப்பழத்தை பிசைந்து பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவுவது நல்ல பலனைத் தரும்.
* பாத வெடிப்புகளை குறைக்க எள் எண்ணெயில் சிறிது கிளிசரின் கலந்து பாதங்களை மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பாதங்கள் மென்மையாக இருக்கும்.
* தேங்காய் எண்ணெயில் கற்பூரம் மற்றும் மஞ்சள் சேர்த்து பாதத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், பாதங்களில் வெடிப்பு குறைவது மட்டுமின்றி, பாதங்கள் மிகவும் மென்மையாகவும் மாறும்.
* தயிர் மற்றும் வினிகர் கலவையால் பாதங்கள் மற்றும் குதிகால்களை மசாஜ் செய்வது நல்ல பலனைத் தரும்.
* எலுமிச்சை சாறை பாதங்களில் தடவினால் வெடிப்பு குறையும்.
* ரோஸ் வாட்டரில் கிளிசரின் கலந்து அந்த கலவையை பாதங்களில் மசாஜ் செய்தாலும் வெடிப்புகள் எளிதில் குறையும்.
மேற்கூறிய குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தொடர்ந்து பின்பற்றினால், சில நாட்களில் நல்ல பலனைக் காணலாம்.
Image Source: Freepik