இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், நீண்ட நேரம் நின்று வேலை செய்வது, உடல் பருமன் அதிகரித்தல் போன்ற காரணங்களால் குதிகால் வெடிப்பு (Cracked Heels) பலருக்கும் ஒரு பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. இதனை மருத்துவ ரீதியில் Hyperkeratosis என்கிறார்கள். அதாவது, குதிகாலின் தோல் அடுக்குகள் அதிகமாக வளர்ந்து வறண்டு, பிளவுகள் ஏற்படுவதைக் குறிக்கும்.
இதை புறக்கணித்தால், வெடிப்பு அதிகரித்து வலி, தொற்று மற்றும் நடப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் தோன்றும். இதை எவ்வாறு எளிய முறையில் சரி செய்வது என்று டாக்டர் இஸாக் அப்பாஸ் விளக்கமளித்துள்ளார்.
குதிகால் வெடிப்பை சரி செய்வது எப்படி?
* தினமும் 10 நிமிடங்கள் கால்களை வெந்நீரில் ஊறவைத்து, பின்பு pumice stone கொண்டு மென்மையாக தேய்த்தால், அதிகப்படியான இறந்த தோல் அகலும். வலி இருந்தால், பருத்தி துணியால் தேய்த்துக் கொள்ளலாம்.
* கழுவிய பிறகு கால்களை காய விடாமல், யூரியா அடங்கிய மாய்சுரைசர் அல்லது தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். இது தோலுக்கு ஈரப்பதம் அளித்து பிளவுகளை குறைக்கும்.
* தினசரி salicylic acid wash கொண்டு கால்களை கழுவுவது, தோல் செதில்களை அகற்றி குதிகாலினை மென்மையாக்கும்.
* வெறும் கால்களில் நடப்பது, தூசி படிந்த செருப்பு அணிவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, எப்போதும் கால்களை மூடக்கூடிய, நல்ல தரமான காலணிகளை பயன்படுத்த வேண்டும்.
* Vitamin A, E, Omega-3 நிறைந்த கேரட், பாதாம், கொழுப்பு மீன் போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* போதுமான அளவு தண்ணீர் மற்றும் பழங்களை தினமும் எடுத்துக் கொள்வது, தோலின் softness மற்றும் elasticity-ஐ பாதுகாக்கும்.
View this post on Instagram
இறுதியாக..
குதிகால் வெடிப்பு ஒரு சாதாரண தோல் பிரச்சனையாக தோன்றினாலும், அதை புறக்கணித்தால் தொற்று, கடுமையான வலி போன்ற சிக்கல்களை உருவாக்கும். எனவே, தினசரி கால்களை பராமரிப்பது, மாய்சுரைசர் பயன்படுத்துவது, நல்ல காலணிகள் அணிவது, மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வது போன்ற வழிமுறைகளை பின்பற்றினால், குதிகால் வெடிப்பை எளிதில் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் ஐசக் அப்பாஸ் கூறுகிறார்.