Doctor Verified

உங்களுக்கு குதிகால் வெடிப்பு இருக்கிறதா.? காரணம் என்ன தெரியுமா.? மருத்துவர் சொல்லும் உண்மை இங்கே..

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் – வைட்டமின் குறைபாடு, நீரிழிவு, சரும வறட்சி, நீர்ச்சத்து குறைபாடு பற்றி மருத்துவர் விளக்கம். உடனே தெரிந்து கொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
உங்களுக்கு குதிகால் வெடிப்பு இருக்கிறதா.? காரணம் என்ன தெரியுமா.? மருத்துவர் சொல்லும் உண்மை இங்கே..


குதிகால் வெடிப்பு என்பது ஒரு பொதுவான பிரச்சனை. ஆனால் பல நேரங்களில் இது அழகுக் குறைவாக மட்டுமில்லாமல், வலி, தொற்று மற்றும் நடப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். குதிகால் வெடிப்புக்கான காரணங்கள் பல இருக்கின்றன.

அவற்றை தெரிந்து கொள்வது, தகுந்த முறையில் சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் உதவும். இதுபற்றி NIT ஃபரிதாபாத்தில் உள்ள சாந்த் பகத் சிங் மகாராஜ் மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் சுதிர் குமார் பரத்வாஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: குதிகால் வெடிப்பினை சரி செய்வது எப்படி.? மருத்துவர் விளக்கம்..

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்

வைட்டமின் குறைபாடு

உடலில் Vitamin B3, Vitamin C, Vitamin E குறைபாடு ஏற்பட்டால், சருமத்தில் இயற்கையான ஈரப்பதம் குறைந்து, வறட்சி ஏற்படும். இதனால் சருமம் எளிதில் வெடிக்கும். வைட்டமின் குறைபாடு உள்ளவர்களுக்கு சருமம் விரைவாக உலர்ந்து, குதிகால் வெடிப்பு அதிகமாகும்.

இரத்த சர்க்கரை பிரச்சனைகள் (Diabetes)

நீரிழிவு நோயாளிகள் குதிகால் வெடிப்புக்கு அதிகம் பாதிக்கப்படுவர். காரணம் - அவர்களின் சருமம் இயற்கையான ஈரப்பதத்தை இழந்து விடுகிறது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லையெனில், காலின் தோல் வறண்டு, குதிகால் விரிசல் ஏற்படும்.

அதிக வறண்ட சருமம்

Dry Skin பிரச்சனை கொண்டவர்களுக்கு குதிகால் வெடிப்பு எளிதில் ஏற்படும். அடிக்கடி வெந்நீரில் கால்களை கழுவுதல், கடுமையான சோப்புகளைப் பயன்படுத்துதல், கால்களை ஈரப்பதமாக வைக்காதது, சுற்றுச்சூழல் காரணிகள் (குளிர்காலம், காற்று உலர்ச்சி) ஆகியவை முக்கிய காரணிகள்.

நீர்ச்சத்து குறைபாடு

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, அதிக அளவு கஃபீன், ஆல்கஹால் உட்கொள்வது, இதனால் உடலில் Dehydration ஏற்பட்டு, சருமம் கடினமாகி, குதிகால் வெடிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பது குறையும்போது, இந்த பிரச்சனை அதிகரிக்கும்.

artical  - 2025-09-04T222120.104

குதிகால் வெடிப்பை தடுப்பது எப்படி?

* தினமும் குறைந்தது 8 கண்ணாடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

* கால்களை அடிக்கடி ஈரப்பதமாக வைத்துக்கொள்ள Moisturizer / Coconut oil பயன்படுத்த வேண்டும்.

* வைட்டமின் நிறைந்த பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் சாப்பிட வேண்டும்.

* நீரிழிவு நோயாளிகள், blood sugar கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

* கால்களை மிக அதிக வெந்நீரில் அடிக்கடி கழுவுவதை தவிர்க்க வேண்டும்.

இறுதியாக..

குதிகால் வெடிப்பு என்பது சாதாரண அழகுக் குறைபாடு அல்ல. இது உடலின் ஆரோக்கிய சிக்னல் ஆகும். சரியான உணவு பழக்கம், நீர்ச்சத்து, மற்றும் கால்கள் பராமரிப்பு மூலம் இதை எளிதில் தடுப்பதும், குணப்படுத்துவதும் முடியும்.

{Disclaimer: இந்த கட்டுரை பொதுவான சுகாதார தகவல்களை மட்டும் வழங்குகிறது. எந்தவொரு மருத்துவ பிரச்சனைக்கும், தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.}

Read Next

Headphones போட்டு சத்தமா பாட்டு கேட்டுட்டே இருக்கீங்களா.? அவ்வளோ தான்.. உங்க காது போச்சி.! மருத்துவர் எச்சரிக்கை..

Disclaimer

குறிச்சொற்கள்